"കെ.കെ.എം.എൽ.പി.എസ്. വണ്ടിത്താവളം/தமிழ்/തിരികെ വിദ്യാലയത്തിലേക്ക് 21" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
കെ.കെ.എം.എൽ.പി.എസ്. വണ്ടിത്താവളം/தமிழ்/തിരികെ വിദ്യാലയത്തിലേക്ക് 21 (മൂലരൂപം കാണുക)
11:52, 15 സെപ്റ്റംബർ 2022-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
, 15 സെപ്റ്റംബർ 2022→ஃபர்ஸ்ட் பெல் வகுப்பு எடுத்த எங்கள் ஆசிரியை
| വരി 31: | വരി 31: | ||
== ஃபர்ஸ்ட் பெல் வகுப்பு எடுத்த எங்கள் ஆசிரியை == | == ஃபர்ஸ்ட் பெல் வகுப்பு எடுத்த எங்கள் ஆசிரியை == | ||
=== முன்னுரை === | |||
“எந்த ஒருநாடும் அந்நாட்டின் ஆசிரியர்களின் தகுதிக்கும் மேலாக உயர்ந்துவிட முடியாது” என்பதோர் பொன்னுரை. எனவே ஒரு நாட்டின் உயர்வும் தாழ்வும் அதன் ஆசிரியர்களிடமே விடப்பட்டுள்ளது. ஆசிரியர் உயர அவர்தம் நோக்குயர, போக்குயர, வாக்குயர நாடே உயரும். எனவே ஆசிரியர்களைக் கல்வியால், பயிற்சியால், தகுதியால், திறனால், தொழிலறத்தால் உயர்த்தியே எந்நாடும் உயர முடியும். | |||
இந்திய நாட்டின் எதிர்காலம் வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள்ளேதான் தீர்மானிக்கப்படுகின்றது. வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப உலகில் மக்களின் முன்னேற்றம், பாதுகாப்பு, நல்வாழ்வு ஆகியவற்றை நிர்ணயிப்பது கல்வியாகும். இக்கல்வி தரமானதாகவும், நாட்டு வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் அமைய முகவர்களாகச் செயல்படுபவர்கள் ஆசிரியர்கள் ஆவர். ஆசிரியர்கள் கற்பிக்கும் திறனும், உயர்ந்த தரமும், செறிந்த பண்பு நலன்களும் பெறத் துணை செய்வது ஆசிரியர் கல்வியாகும். மாணவர் பெறும் தரமான கல்வி ஆசிரியர்கள் பெறும் தரமான கல்வியையே சார்ந்தமையும். | |||
கற்க கசடறக் கற்பவை கற்றபின் | |||
நிற்க அதற்குத் தக - திருக்குறள் | |||
வருங்கால நற்குடிமக்களை உருவாக்கும் தலையாய பொறுப்பு ஆசிரியரிடமே உள்ளது. மாணவர்களுக்கு பாடப்பொருளைக் கற்பிப்பதோடு மாணவரின் உள்ளுணர்வை அறிதல் (understanding insight), ஆளுமையை வளர்த்தல், தகவல்களைச் சேகரித்தல், தொடர்புபடுத்திப் பார்த்தல், கற்றதைப் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு திறமைகளை வளர்த்தல் ஆசிரியரின் பொறுப்பாகும். மாணவர் தம் வாழ்வில் எதிர்கொள்ள நேரும் பிரச்சனைகளை ஆய்ந்து, அலசிப் பார்த்து தீர்வு காண்பதற்கான திறமைகளை வளர்த்தல் ஆசிரியரின் பொறுப்பாகும். நற்சிந்தனைகளையும், ஆர்வத்தையும் வளர்த்து மாணவர்களிடையே நாட்டுப்பற்று பரிணமிக்குமாறு செய்வதில் ஆசிரியர் உறுதுணையாக நிற்றல் வேண்டும். | |||
பள்ளிக்கும் சமூகத்திற்கும் ஒர் ஆசிரியர் ஆற்ற வேண்டிய கடமைகளை எவரும் முழுமையாகப் பட்டியலிட்டுக் கூறிவிட முடியாது. ஆசிரியரின் முக்கியத்துவமும், செல்வாக்கும், பயனும், வழிகாட்டுதலும் எங்கு முடிகிறது என எவரும் வரையறுத்துக் கூறுதல் இயலாது. ஆசிரியரின் பணி பன்முகப் பரிமாணங்களை உடையது. | |||
குளிர் காய்பவர் நெருப்புக்கு அஞ்சி அதைவிட்டு அகலாமலும் மிக நெருங்காமலும் அமர்ந்து குளிர் காய்வர். அதுபோல, மாணவனும் ஆசிரியருக்கு அஞ்சி அவரை அகலாமலும் மிகநெருங்காமலும் இருக்கவேண்டும். ஆசிரியரின் நிழல் அவரைவிட்டு நீங்காமல் செல்லும் இடம் எல்லாம் தொடர்ந்து செல்வதுபோல மாணவனும் ஆசிரியரைவிட்டு நீங்காமல் அவரைத் தொடர்ந்து செல்லுதல் வேண்டும். ஆசிரியர்பால் அன்பு மிகக்கொண்டு அவர் எவ்வகையால் எல்லாம் மகிழ்வாரோ அவ்வகையால் எல்லாம் மகிழ்வித்து, அறநெறி மாறா நடத்தை உடையவனாய் ஆசிரியரை ஒரு மாணவன் வழிபாடு செய்தல் வேண்டும். | |||
=== ஆசிரியர்களின் சிறப்பு === | |||
ஆசிரியர் என்பவர் ஒரு தொழில்நுட்ப வல்லுநர், முன்னோடி, வழிகாட்டி, மாற்றத்தின் பிரதிநிதி, செயல் ஆய்வாளர், அரசின் கல்வித்திட்டங்களைத் திறம்பட நடைமுறைப்படுத்துபவர், நேர்மறைச் சிந்தனையாளர், ஒரு நல்ல மனிதர். | |||
கல்வி என்பது வெறும் தகவல்களையும், அனுபவத்தினையும் வழங்கும் வெற்றுச்செயலல்ல. ஒரு முழுமையான வாழ்க்கைக்கு உதவும் வகையில் பழக்க வழக்கங்களையும், மனப்பாங்குகளையும், திறன்களையும் வளர்ப்பதும் கல்வியாகும். அத்தகு சிறப்புமிக்க கல்வியை அளிக்கும் பொறுப்பேற்றிருக்கும் ஆசிரியர்கள், மற்றவர்க்கு கற்பிக்கும் வகையில் முன்மாதிரியாகத் தாம் அக்குணங்களைப் பெற்றுப் பணியில் ஈடுபட வேண்டும். தாம் கற்பிக்கும் குழந்தைகள் மீது அக்கறையும், அன்பும் கொண்டு ஒரு முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் முனைப்புடன் நின்று வழிநடத்த வேண்டும். | |||
ஆசிரியர் ஒரு முன் மாதிரியாகத் திகழ வேண்டுமெனில் அவர் பின்வரும் குறைந்தபட்ச பண்புகளையேனும் பெற்று இருக்க வேண்டும். | |||
1.திரண்ட ஆளுமைப் பண்புடையவராக இருத்தல் | |||
2.மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளக் கூடியவராக இருத்தல் | |||
3.சுயசிந்தனை மற்றும் ஆக்கத்திறன் மிக்கவராயிருத்தல் | |||
4.செய்யும் பணிக்குத் தன்னை அர்ப்பணித்தவராக இருத்தல் | |||
5.சுமூகமாகப் பழகி ஆக்கபூர்வமான உறவுகளை நிலைநிறுத்திக் கொள்பவராக இருத்தல் | |||
=== ஆசிரியர் அறிமுகம் -பணி ஈடுபாடு === | |||
கல்வி என்பது கற்போர், கற்பிப்போர், சமூகச் சூழ்நிலை இவை மூன்றிற்கும் இடையே ஏற்படும் செயல்பாடாகும். கற்றல், கற்பித்தல் என்பது ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட அற்புதச் செயல்பாடு. இதில் ஆசிரியர் ஒரு செயல்வீரராகச் செயல்பட்டு மாணவர்களின் மதிப்பைப் பெற வேண்டும். ஆசிரியர்கள் பணி மனப்பான்மையுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயலாற்ற வேண்டும். கற்பித்தலில் உண்மையான ஆர்வம் கொண்டவராக கற்போரின் மனநிலைக்கு இறங்கி வந்து அவர்களது உணர்வுகளுடன், தம்முடைய உணர்வை இணையச் செய்து, புகட்ட வேண்டும். அவர்கள் வாழ்வு வளம்பெற நாளும் உதவும்போது அவர் ஒரு முன்மாதிரி ஆசிரியராகிறார். | |||