எத்தனை எத்தனை பூக்கள்
..........................................
எங்கள் வீட்டுத் தோட்டத்தில்
எத்தனை எத்தனை பூக்கள்
வெள்ளை நிறத்தில் முல்லைப் பூ
சிவப்பு நிறத்தில் ரோஜாப் பூ
மஞ்சள் நிறத்தில் செண்டு மல்லி
பலப்பல நிறங்களில் செம்பருத்தி
தலையில் சூடும் மல்லிகைப்பூ
மாலை கட்டும் சாமந்திப்பூ
நிறையப் பூக்கும் கனகாம்பரம்
மணமே இல்லா காகிதப்பூ
எங்கள் வீட்டுத் தோட்டத்தில்
எத்தனை எத்தனை பூக்கள்