ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /குழுக்கள்/ஆங்கிலக்குழு

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്

ஆங்கிலக்குழு

நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளியில் எல்லா வருடமும் ஆங்கிலக்குழு நல்லமுறையில் செயல்பட்டு வருகிறது. ஆங்கிலக் கல்வியை ஊக்குவிப்பதற்கான அனைத்து செயல்பாடுகளும் நடத்துவதுண்டு. அரசாங்கத்தின் ஹலோ இங்கிலீஷ் எனும் திட்டத்தை 2018 ஜூன் 20-ஆம் நாள் மதியம் 2 மணிக்கு பி.ஆர்.சி பயிற்சியாளர் சுமங்கலா துவங்கி வைத்தார். குழந்தைகளது பலவித ஆங்கிலக் கலைநிகழ்ச்சிகளும் இருந்தது. கூடுதலாக ஆங்கிலக் கல்வியை ஊக்குவிக்க வகுப்பறையில் ஆசிரியர்கள் குழந்தைகளோடு ஆங்கிலத்தில் பேசுவதுண்டு. மறுபடியளிக்க முடியாதிருப்பினும் குழந்தைகள் நன்றாகப் புரிந்துகொண்டு தமிழில் அல்லது மலையாளத்தில் பதிலளிப்பர். இம்மொழியோடு நல்ல ஆர்வம் காட்டுவதுண்டு. இவ்வாறு குழந்தைகளது ஆங்கிலக் கற்றல் அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடத்தின் ஆங்கிலக்குழுவின் மூலம் நல்ல முறையில் முன்னேற்றமடைந்து வருகிறது.

லட்சியங்கள்

  • ஆங்கிலக் கற்றலைஊக்குவித்தல்.
  • ஆங்கிலத்தில் சிறு கவிதைகள், சிறுகுறிப்புகள் குழந்தைகள் சுயமாக எழுதுதல்.

தொடக்கவிழா

அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளியில் ஆங்கிலகுழுவினை அரசு விக்டோரியா உயர்தொடக்கப்பள்ளி ஆசிரியை ரீனா தொடங்கி வைத்தார். வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகும் ஆங்கில மொழியின் பயன்பாடு. நாம் பயன்படுத்துகின்ற பல ஆங்கில வார்த்தைகளும் ஆங்கிலம் அறியாதவர்கள் கூட பயன்படுத்தி வருகின்றனர். நாம் அறியாமலேயே அவை நம் பேச்சுமொழியில் இடம்பெற்றிருக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். ஆங்கில மொழியின் பிறப்பிடம், பயன்பாடு, அழகு போன்றவற்றை எடுத்துக்காட்டுடன் குழந்தைகளுக்கு புரியச்செய்தார். அவர் குழந்தைகளிடம் ஆங்கிலத்திலேயே உரையாடி நல்ல ஒரு ஆங்கில வகுப்பு சூழ்நிலையை உருவாக்கினார். சைகைப் பாடல்கள், வீடியோக்கள் போன்றவை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆங்கிலத்தை பயமின்றி பயன்படுத்துவதற்கான ஒரு தொடக்கமாக இருந்தது இந்த ஆங்கிலச் சங்க தொடக்க விழா. குழந்தைகளுடைய ஆங்கில மொழித் திறனை வெளிக்காட்ட அவர்களுடைய படைப்புகளை உட்படுத்தி ஒரு ஆங்கில பதிப்பு தயாரிக்கும்படி அறிவுறுத்தினார். மேலும் பதிப்புக்கு Sparkles என்று பெயர் சூட்டும் படியும் கூறினார். தலைமை ஆசிரியை ஷைலஜா வரவேற்புரை வழங்கினார். குழந்தைகளுடைய ஆங்கில மொழிக் கலைநிகழ்ச்சிகள் யாவும் இனிமையாக இருந்தது. பின்பு ஆங்கிலகுழுத் தலைவரான சுப்ரபா நன்றியுரை வழங்கினார்.

செயல்பாடுகள்

  • ஆங்கில காலைக்கூட்டம்
  • ஆங்கில ஊக்கச் செயல்பாடு
  • ஆங்கில விளையாட்டுகள்
  • ஆங்கில மொழி எளிமையாக பேசப் பயிற்சி வகுப்புகள் (Spoken English)
  • பாடப்பகுதியோடு இணைந்த நாடகங்கள்
  • கோரியோகிராபி (நடனம்)
  • ஆங்கில விழா