ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/மேலும் வாசிக்க
സ്കൂൾ | സൗകര്യങ്ങൾ | പ്രവർത്തനങ്ങൾ | ക്ലബ്ബുകൾ | ചരിത്രം | അംഗീകാരം |
எனது நாடு... எனது சித்தூர்...
மிகவும் புகழ்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும் சித்தூர். அதுமட்டுமல்ல செல்வ சிறப்பிலும் எப்பொழுதும் முன்னிலையில்தான். இங்குள்ள செல்வச்சிறப்பினைக் கண்டு ஆசைப்பட்டு சித்தூர் தேசத்தை பிடித்தடக்க முயன்ற கொங்கு நாட்டு மன்னனை சித்தூர் காவில் உள்ள பகவதியின் துணையோடு தோற்கடித்து நாட்டை காப்பாற்றிய வீர கதையை நாம் அனைவரும் கேட்டிருப்போம். இதை நினைவுபடுத்தும் விதமாக வருடந்தோறும் சித்தூர் மக்கள் கொங்கன் படை கொண்டாடி வருகின்றனர். இது சித்தூரின் தேசிய திருவிழாவாகும். அம்பாட்டு தரவாடு, தச்சாட்டு தரவாடு, சம்பத்து தரவாடு, எழுபத்து தரவாடு, பொறயத்து தரவாடு போன்றவை சிற்றூரில் உள்ள வரலாற்றுப் புகழ் மிக்க தரவாடுகளாகும். இந்த தரவாடுகளில் உள்ள பெரியவர்களும் ஊர்மக்களும் சேர்ந்துதான் கொங்கன் படையை இன்றளவும் நடத்திவருகின்றனர். கேரளாவின் ஒரே ஒரு ரணோல்சவமாகும் சித்தூர் கொங்கன் படை.
சித்தூரின் பசுமை வளத்தைக் கட்டிக்காப்பதில் சோகநாஷினி நதிக்கு மிக முக்கிய பங்கு உண்டு. இந்நதிக்கரையில் தான் மலையாள மொழியின் தந்தையான திரு.இராமானுஜன் எழுத்தச்சனின் நினைவிடமான துஞ்சன் மடம் அமைந்துள்ளது. இது மிக முக்கியத்துவம் நிறைந்த ஒரு வரலாற்றுச் சின்னம் ஆகும். துஞ்சன் மடத்தைப் பற்றி கூடுதல் தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோர் இவ்விடத்திற்கு வருவதுண்டு. வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த மற்றொரு இடமாகும் துஞ்சன் நினைவு நூலகம். இந்த நூலகத்தின் சுவர்களில் கொங்கன் படையோடு தொடர்புடைய படங்கள் வரைந்து அழகுபடுத்தப்பட்டுள்ளது. திரு பைஜூ தேவ் அவர்களுடைய தலைமையில் தான் இந்த படங்கள் வரையப்பட்டுள்ளது. இது ஓய்வு நேரங்களை பயனுள்ள தாக்குவதோடு வரலாற்றுச் சிந்தனையைத் தூண்டவும் வழிகோலுகின்றது. சித்தூர் மக்களின் அரசுத் தேவைகளை நிறைவு செய்ய கச்சேரி மேட்டில் மினி சிவில் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது. இது சித்தூரின் பெருமையை இன்னும் கூட்டுகிறது.
சித்தூர் அரசுக் கல்லூரியைப் பற்றி அறியாதவர் யாருமே இருக்க மாட்டார்கள். விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ள சித்தூரின் இளைய தலைமுறையினரை கல்வியின் உச்சிக்கு கைப்பிடித்து உயர்த்துவதில் சித்தூர் அரசு கல்லூரிக்கு முக்கிய பங்கு உண்டு.
இச்சிறப்புகள் அனைத்தும் நிறைந்த சித்தூரின் இதயப் பகுதியில் தான் நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம்அமைந்துள்ளது.