ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/இணைபாடத்திட்டச் செயல்பாடுகள்/ஆரோக்கியமும் சுகாதாரமும்
ஆரோக்கியமும் சுகாதாரமும்
அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளியிலுள்ள ஆரோக்கியமும் சுகாதாரமும் என்னும் குழு மிகச்சிறந்த முறையில் பள்ளி சுற்றுப்புறத் தூய்மையில் கவனம் செலுத்துவதுண்டு. தனிநபர் சுகாதாரத்தில் எல்லா பெற்றோர்களுக்கும் போதுமான விழிப்புணர்வு உண்டு. குழந்தைகளுக்கு இதனை கற்பிக்கவும் செய்வதுண்டு. நாங்களும் குழந்தைகளது ஆரோக்கியத்தில் தனிக்கவனம் செலுத்துவதுண்டு.
சுகாதாரம்
- குழந்தைகள் வகுப்பறைகளைத் தூய்மையாகப் பாதுகாக்க இடைவிடாமல் அறிவுறுத்துவதுண்டு.
- குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் எனப் பிரித்து அப்புறப்படுத்துவதுண்டு.
- பயோகாஸ் அடுப்புகள் உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
- உணவுப்பொருட்களின் கழிவுகளைப் பக்கத்திலுள்ள பண்ணையில் கன்றுகாலிகளுக்கு உணவளிக்க எடுத்துச் செல்கின்றனர்.
- நகம் வெட்டுவது, குளிப்பது, சுத்தமான ஆடைகளை அணிவது என அனைத்துக் குழந்தைகளும் தூய்மையானவர்களே.
- பள்ளியில் ஒவ்வொரு வருடமும் மருத்துவ முகாம்கள் நடத்துவது உண்டு.
ஆரோக்கியம்
- மதிய உணவாக இரண்டு விதமான பொரியல்கள், சாம்பார், சாலட் போன்றவை குழந்தைகளுக்கு அளித்து வருகின்றோம்.
- வாரத்தில் இருமுறை பாலும், ஒருமுறை முட்டையும் கொடுக்கத் தவறுவதில்லை.
- குழந்தைகளுக்கு அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைப்பதற்காக மதிய உணவில் தனிக்கவனம் செலுத்தி வருகின்றோம்.
- ரூபெல்லா தடுப்பூசி 2017ல் அனைத்து குழந்தைகளுக்கும் கொடுக்கப்பட்டது.
- இப்பகுதியிலுள்ள தண்ணீரின் மூலம் குழந்தைகளது பல்லில் வெள்ளை நிற அடையாளங்களும் மற்றும் மஞ்சள் நிறமும் காணப்படுவதுண்டு. இதற்குக் காரணம் தண்ணீரில் அடங்கியுள்ள ப்ளூரைடு என்பதை மருத்துவ அலுவலர் குழந்தைகளுக்கு அறிவுறுத்தினார்.
- கை கழுவுவதின் முக்கியத்துவத்தையும், எவ்வாறு கைகழுவ வேண்டும் என்பதையும் ஆரம்ப சுகாதார மையத்திலிருந்து வந்த செவிலியர்கள் அனைத்துக் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்தனர்.
- ஹோமியோ மற்றும் அலோபதி மருத்துவ அலுவலர்கள் பள்ளிக்கு வருகை அளிப்பதுண்டு.