ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/ஆங்கிலச் சங்கம்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
ஆங்கிலச் சங்கம்

முகவுரை

நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளியில் எல்லா வருடமும் ஆங்கிலச் சங்கம் நல்லமுறையில் செயல்பட்டு வருகிறது. ஆங்கிலக் கல்வியை ஊக்குவிப்பதற்கான அனைத்து செயல்பாடுகளும் நடத்துவதுண்டு. அரசாங்கத்தின் ஹலோ இங்கிலீஷ் எனும் திட்டத்தை 2018 ஜூன் 20-ஆம் நாள் மதியம் 2 மணிக்கு பி.ஆர்.சி பயிற்சியாளர் திரு.சுமங்கலா ஆசிரியை துவங்கி வைத்தார். குழந்தைகளது பலவித ஆங்கிலக் கலைநிகழ்ச்சிகளும் இருந்தது. கூடுதலாக ஆங்கிலக் கல்வியை ஊக்குவிக்க வகுப்பறையில் ஆசிரியர்கள் குழந்தைகளோடு ஆங்கிலத்தில் பேசுவதுண்டு. மறுபடியளிக்க முடியாதிருப்பினும் குழந்தைகள் நன்றாகப் புரிந்துகொண்டு தமிழில் அல்லது மலையாளத்தில் பதிலளிப்பர். இம்மொழியோடு நல்ல ஆர்வம் காட்டுவதுண்டு.இவ்வாறு குழந்தைகளது ஆங்கிலக் கற்றல் அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடத்தின் ஆங்கிலச் சங்கத்தின் மூலம் நல்ல முறையில் முன்னேற்றமடைந்து வருகிறது.

லட்சியங்கள்

  • ஆங்கிலக் கற்றலைஊக்குவித்தல்.
  • ஆங்கிலத்தில் சிறு கவிதைகள், சிறுகுறிப்புகள் குழந்தைகள் சுயமாக எழுதுதல்.

செயல்பாடுகள்

  • ஆங்கில காலைக்கூட்டம்
  • ஆங்கில ஊக்கச் செயல்பாடு
  • ஆங்கில விளையாட்டுகள்
  • ஆங்கில மொழி எளிமையாக பேசப் பயிற்சி வகுப்புகள் (Spoken English)
  • பாடப்பகுதியோடு இணைந்த நாடகங்கள்
  • கோரியோகிராபி (நடனம்)
2019-20