ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/அறிவியல் சங்கம்/குட்டிச் சோதனைகள்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
குட்டிச் சோதனை
21302-sci1.jpg

முகவுரை

அறிவியல் சங்கத்தின் துவக்கத்தில் காலைக் கூட்டத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகுப்பு வீதம் ஒரு சோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டது. மொத்தம் 50 சோதனைகள் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளில் அறிவியல் மனப்பான்மை வளர்க்க வேண்டும் என்பது தான் இதன் முக்கிய லட்சியம். சிறிய குழந்தைகளில் உற்றுநோக்கல் திறன், கண்டறியும் திறன், சோதனைகளில் நாட்டம், எச்சரிக்கையுடன் சோதனைக் கருவிகளைக் கையாளுதல் போன்ற பல்வேறு திறன்களை வளர்த்தி எடுக்க இது உதவுகிறது.

இலட்சியங்கள்

  • குழந்தைகளில் அறிவியல் மனப்பான்மை வளர்கிறது.
  • உற்றுநோக்கல் திறன் பெறுகின்றனர்.
  • சுயமாக சோதனைகள் செய்யவும், சோதனை முடிவுகளை கண்டறியவும் செய்கின்றனர்.
  • தனியாகவும், குழுவாகவும் எளிய சோதனைகள் செய்கின்றனர்.
  • தேவையான சோதனைக் கருவிகளை கண்டுபிடிக்கவும், ஒழுங்குபடுத்தவும் திறன் பெறுகின்றனர்.
  • எச்சரிக்கையாக சோதனைக் கருவிகளை கையாளும் திறன் பெறுகின்றனர்.
  • சோதனை குறிப்புகள் தயாராக்குகின்றனர்.

செயல்பாடு

ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்ற எளிமையான சோதனைகள் மட்டுமே இங்கே செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகுப்பு மாணவர்கள் காலைக்கூட்டத்தில் சோதனை செய்து காண்பிக்கின்றனர். இது அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் காண வாய்ப்பளிக்கிறது. ஒவ்வொரு நாளும் நல்ல நல்ல சோதனைகள் செய்ய மாணவர்கள் முயல்கின்றனர். சோதனைகளுக்குப் பிறகு குழந்தைகள் சுயமாக சோதனைக் குறிப்பும் எழுதுகின்றனர். குழந்தைகள் சோதனைகளை நேரில் கண்டு புரிந்து கொள்வதால் இவை யாவும் குழந்தைகளது மனதில் பசுமரத்தாணி போல பதிகின்றது. அறிவியல் சங்க செயல்பாடுகள் இதன்மூலம் நல்ல முறையில் நடைபெறுகின்றது.

சிறப்பம்சம்

ஒன்றாம் வகுப்பு மாணவர்களும் கூட அவர்களுக்கு ஏற்ற சோதனைகளை காலை கூட்டத்தில் செய்து காண்பிக்கின்றனர் என்பது இந்த எளிய சோதனையின் மிகப்பெரிய சிறப்பம்சமாகும். ஒவ்வொரு வகுப்பினரும் சுயமாக காலை கூட்டத்தில் அறிவியல் கூடம் தயார் செய்கின்றனர். இதற்கு தேவையான முன்னேற்பாடுகளை ஒவ்வொரு வகுப்பினரும் போட்டி மனப்பான்மையோடு செய்கின்றனர்.


சில சோதனைகள்

1. ஆழம் கூடும் தோறும் அழுத்தம் கூடுகிறது.

2. தீ எரிவதற்கு வாயு தேவை.

3. வாயு நிலைகொள்ள இடம் தேவை.