இது பதிவுத் திருமணம் அல்ல...
பெற்றோரால்
நிச்சயிக்கப்பட்ட திருமணமே...!
மூவாயிரம்பேர்
கூடும் இடத்தில்
முப்பது பேர்....!
புன்னகை மாறாமல்
போட்டோவுக்கு போஸ் கொடுப்போர்
முகக்கவசங்களுடன்.....!
ஆரவாரமாக
நடக்க வேண்டிய திருமணம்
அமைதியாக...!
அக்கா திருமணம் அண்ணன் திருமணம் என
அங்கலாய்த்தவர்கள்
அடுப்படியில்....!
மண்டப வாடகை இல்லை
உணவுக்கான செலவும் இல்லை
வாழ்த்து கூற யாருமில்லை
வாழ்த்து பெற மனமுமில்லை
ஏழை பணக்காரர் என்ற
வேறுபாடும் இல்லை
கொரோனா கால திருமணத்தில்....!