எ.எல்.பி.எஸ். கோங்காபாறை
வரலாறு
பாஸல் மிஷன் என்கின்ற ஒரு கிறிஸ்தவ மிஷனரி 1946 இல் உருவாக்கிய நிறுவனம் தான் எ.எல்.பி.ஸ்கூல் கோங்காம்பாறையாக உருவானது. இந்த பள்ளியின் முதல் மேலாளராக திருமதி நயோமி கருணாகரன் இருந்தார். அவருடைய சொந்த ஊர் கோழிக்கோடு ஆகும்.கடந்த 1968 ஆம் ஆண்டு புதுசேரிபஞ்சாயத்து ஆனது இப்பள்ளியின் நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டது. இப்பள்ளியின் முதல் தலைமை ஆசிரியர் திரு.சாக்குண்ணி அவர்கள் ஆவார்.அதனை தொடர்ந்து திரு ஜேக்கப்.கே.மாத்யூ, செல்வி அம்மிணி, திரு பி.கே.வர்கி, திரு எ.சந்திரன், திரு எ.ஜோசப்ராஜ், திரு.எ.குளாப் ஜோன், என்பவர்கள் தலைமை ஆசிரியர் கழக பதவி வகித்தனர்.தற்போது திரு எ.ஜெயகிருஷ்ணன் தலைமை ஆசிரியர் ஆக பதவி வகிக்கிறார். 1981இல் இப்பள்ளியில் தமிழ் வழி கல்வி ஆனது ஆரம்பமானது.