தூய சின்னப்பர் உயர்நிலைப் பள்ளி

வசதிகள் செயல்பாடுகள் குழுக்கள் வரலாறு அங்கீகாரங்கள்

வரலாறு / மேலும் அறிக

தூய சின்னப்பர் மேல்நிலைப்பள்ளி தோற்றமும் வளர்ச்சியும்.


கேரள மாநிலம் , பாலக்காடு மாவட்டம் , சித்தூர் தாலுக்காவின் கிழக்கு பகுதியான கொழிஞ்சம்பாறை பஞ்சாயத்தின் சுற்றுப்பகுதியில் வாழக்கூடிய ஏழை மக்களின் நலன் கருதி , அவர்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக என்றும் அழியாத கல்வி செல்வத்தை கொடுப்பதற்காக கொழிஞ்சாம்பாறை தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி 1947ஆம் ஆண்டு கோவை மறைமாவட்ட ஆயர் அருட்பெருந்தகை மேதகு உபகரசுவாமி ஆண்டகை அவர்களின் ஆசிராலும், அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில் அவர்களின் அரிய முயற்சியாலும் தொடங்கப்பட்டது .இப்பள்ளியை கட்டுவதற்கான இடத்தை இலவசமாக கொடுத்து உதவியவர் R.V.P புதூரை சேர்ந்த மறைந்த திருவாளர் சுவாமியப்ப கவுண்டர் . இவரை இப்பள்ளி என்றும் நினைவு கூறுகிறது.

பள்ளியின் ஆரம்ப காலத்தில் 5 ஆசிரியர்களும் 63 மாணவர்களும் மட்டுமே இருந்தனர் . அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில் அவர்கள் நிர்வாகியாகவும், திரு விசுவநாத ஐயர் , அவர்கள் முதல் தலைமை ஆசிரியராகவும் நியமனம் பெற்றனர் .1948ல் அண்மையிலுள்ள C.S.Mபள்ளியை நிர்வாகிகள் மூடவே, அதுவும் இப்பள்ளியுடன் இணைக்கப்பட்டது . 212 மாணவர்களும் , 18 மாணவிகளும் 10 ஆசிரியப் பெருமக்களும் இருந்தனர் . உயர்திரு சவரிமுத்து அவர்கள் 1948 முதல் 1950 வரை தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்று பள்ளியின் முன்னேற்றத்திற்காக உழைத்தார் . அருட்திரு மனுவேல் அடிகளார் அவர்கள் இப்பள்ளியின் நிர்வாகியாகவும் தலைமை ஆசிரியராகவும் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவர் காலத்தில் இப்பள்ளியில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. பள்ளி முழுவதும் மின் விளக்குகள் போடப்பட்டன. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன . 1953 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட தனியார் கல்வி சீர்திருத்த திட்டத்தை பள்ளி நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டதால் அன்று முதல் அரசாங்க உதவியுடன் பள்ளி இயங்க தொடங்கியது . அதுவரை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை கோவை மறைமாவட்ட மேற்றாசனமே வழங்கி வந்தது .

1954 ஆம் ஆண்டு பாரத பிரதமர் திரு ஜவர்கலால் நேரு அவர்கள் பள்ளிக்கு வருகை தந்து சிறப்பித்தார். 1955ஆம் ஆண்டு புதிதாக நூல் நிலையம் துவங்கப்பட்டது . 1957 ஆம் ஆண்டு தேசிய மாணவர் படை N.C.C பள்ளியில் ஆரம்பிக்கப்பட்டது. பள்ளியின் வளர்ச்சி பணிகளில் ஆர்வம் கொண்டு அயராது உழைத்த அருட்திரு மனுவேல் சுவாமிகள் 09 . 01 . 1969 இல் இறைவனடிசேர்ந்தார். அவருக்குப் பின் மீண்டும் அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில் பள்ளியின் மேலாளராக பொறுப்பேற்றார். தலைமை ஆசிரியராக உயர்திரு என். ஞானாமிர்தம் நியமிக்கப்பட்ட உடன் பள்ளி மீண்டும் சிறப்பாக செயல்பட தொடங்கியது.

1972 ஆம் ஆண்டு இப்பள்ளி தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததின் நினைவாக வெள்ளி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது .அதன் நினைவாக வெள்ளிவிழா நினைவு மண்டபம் ஒன்று எழிலுற கட்டப்பட்டது . இதே ஆண்டில் இப்பள்ளியில் படித்த ஆர். கிரி என்னும் மாணவன் 10ஆம் வகுப்பு S.S.L.C பொதுத்தேர்வில் கேரள மாநிலத்திலேயே முதலாவதாக வந்து பள்ளிக்கு பெருமை சேர்த்ததை யாராலும் மறக்க முடியாது. இதன் மூலம் கேரள மாநிலம் முழுவதும் இப்பள்ளி குன்றின் மேலிட்ட விளக்கு என பிரகாசிக்கத் தொடங்கியது.

இவ்வட்டார மக்களின் ஆன்ம வளர்ச்சியையும் , கல்வி வளர்ச்சியையும் இரு கண்களாகப் போற்றி வந்த அருள்திரு ஆபிரகாம் வலியபரம்பில் 1977 ஆம் ஆண்டு திடீரென இயற்கை எய்தினார் . அவரது மறைவுக்கு கொழிஞ்சாம்பாறை வட்டார மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் , அளவிடமுடியாத துயரத்தையும் அளித்தது . 1977 அருட்திரு கே .பி .வின்சென்ட் அவர்கள் பள்ளியின் மேலாளராக பொறுப்பேற்றார். இவருடைய காலத்தில் பள்ளி மேலும் விரிவு படுத்தப்பட்டது. மாணவர்களின் எண்ணிக்கை கூடியது .புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன .ஆசிரியர்களின் எண்ணிக்கை கூடியது. 1978 இல் மேதகு சி.எம். விசுவாசம் ஆண்டகை மறைவுக்குப்பின் அருட்பெருந்தகை அம்புரோஸ் ஆண்டகை அவர்கள் கோவை ஆயராக பொறுப்பேற்றார் .1981திரு ஞானாமிர்தம் ஓய்வு பெற்ற பின் திரு ஏ. என் .தங்கப்பன் அவர்கள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார். இவருடைய காலத்தில் இப்பள்ளி பல முன்னேற்றங்களைக் கண்டது.

1985-ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான இளைஞர் விழா மிக சிறப்பாக நடத்தப்பட்டது . 1986 தங்கப்பன் ஓய்வு பெற்றபின் திரு என் .காதர்பாஷா தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார் . 1986 இல் அருட்திரு எஸ் . எம் . அமலதாஸ் அடிகளார் பள்ளியின் மேலாளராக நியமனம் செய்யப்பட்டார். 1987 இல் திரு எ. பிலோமின்ராஜ் அவர்கள் தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். இவருடைய காலத்தில் பள்ளி பல வளர்ச்சிகளை அடைந்தது .

1993 இல் அருட்திரு எம். குருசாமி அடிகளார் பள்ளியின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். 1996 விஞ்ஞான கண்காட்சி மிகச் சிறப்பாக இப்பள்ளியில் நடந்தது. 1997 இல் திரு எ. பிலோமின்ராஜ் அவர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டதன் காரணமாக திரு வீ . குஞ்சப்பன் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார் .அப்போது 82 ஆசிரியர்களும் , 2700 மாணவ மாணவிகளும் இருந்தனர் . 1997ஆம் ஆண்டு இப்பள்ளி துவங்கி 50 ஆண்டு நிறைவு நாளை பொன் விழாவை சிறப்பித்து 26 .11. 1997 முதல் 28 .11 1997 வரை மூன்று நாட்கள் பொன்விழா கொண்டாடப்பட்டது.

2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் நாள் தூய சின்னப்பர் உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தப் பட்டது . அருட்திரு நெல்சன் அடிகளார் தலைமையில் 1998 முதல் மேல்நிலைப் பள்ளி கட்டிட வேலைகள் நடைபெற்றது. அப்போது பள்ளியின் மேலாளராக அருட்திரு அமல்ராஜ் சுவாமிகள் நியமிக்கப்பட்டிருந்தார் . கோவை மறைமாவட்ட ஆயர் டாக்டர் அம்புரோஸ் அவர்களின் ஆசியுடன் கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது. அப்போது தலைமை ஆசிரியராக இருந்த திரு அருணாச்சலம் அவர்கள் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் பொறுப்பை ஏற்றார் . 2001 இல் மேதகு ஆயர் டாக்டர் அம்புரோஸ் அவர்களின் மறைவுக்குப் பின் புதிய ஆயராக மேதகு டாக்டர் தாமஸ் அக்வினாஸ் திருநிலைப்படுத்தப்பட்டார் . 2000 ஆம் ஆண்டு திரு அருணாச்சலம் அவர்கள் ஓய்வு பெற்ற பின் திருமதி ஜி . கில்டாமேரி அவர்கள் முதல்வர் பொறுப்பை ஏற்றார்.

2002 இல் அருட்திரு வின்சென்ட் அடிகளார் அவர்கள் மேலாளராக பொறுப்பேற்றார் . 2003 இல் அருட்திரு இருதயநாதர் அடிகளார் அவர்கள் மேலாளராக பொறுப்பேற்றார். 2008 இல் அருட்திரு மதலை முத்து அடிகளார் அவர்கள் மேலாளராக நியமிக்கப்பட்டார் .

2014 ஆம் ஆண்டு பாலக்காடு சுல்த்தான்பேட் மறைமாவட்டம் என்ற ஒரு மறைமாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது . அதனுடைய புதிய ஆயராக அருட்தந்தை மேதகு டாக்டர் அந்தோணிசாமி பீட்டர் அபீர் அவர்கள் பொறுப்பேற்றார். இதுவரை கோவை மறைமாவட்டத்தின் கீழ் செயல்பட்டு கொண்டு இருந்த புனித சின்னப்பர் மேல்நிலைப்பள்ளி தற்போது பாலக்காடு சுல்தான்பேட் மறைமாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது . தற்போது பள்ளியின் மேலாளராக மதிப்பிற்குரிய அருட்தந்தை லூயிஸ் மரிய பாப்பு அவர்கள் பொறுப்பில் இருக்கின்றார் .

இனிவரும் காலங்களில் எம் பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்க மேம்பாட்டில் மட்டுமே அக்கறைகொண்டு செயல்படும் . மேலும் இன்று போல் என்றும் இந்தப் பள்ளி மற்ற பள்ளிகளுக்கு எல்லாம் ஒரு எடுத்துக்காட்டான பள்ளியாக விளங்கும் . இத்தகைய சிறப்புமிக்க எம் பள்ளி 75 ஆண்டுகளை கடந்து மேன்மையோடு விளங்குவதற்கு அருள்புரிந்த இறைவனுக்கு நன்றியை சமர்ப்பிக்கின்றோம் . மேலும் இந்தப் பள்ளி பல வளர்ச்சிகளைக் கண்டு சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவன் தனது ஆசிரை நிறைவாகப் பொழிவாராக.


பள்ளி வசதிகள்

        பள்ளி 5.75  ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. உயர்நிலைப் பள்ளியில் 8 கட்டடங்களில் 60 வகுப்பறைகளும், மேல்நிலைப் பள்ளியில் ஒரு கட்டடத்தில் 9 வகுப்பறைகளும் உள்ளன. பள்ளிக்கு விசாலமான விளையாட்டு மைதானமும் உள்ளது. நடுநிலைப்பள்ளி , உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனித்தனி கணினி ஆய்வகங்கள் உள்ளன. மூன்று ஆய்வகங்களில் சுமார் 41 மடிக் கணினிகள் உள்ளன. இரண்டு ஆய்வகங்களிலும் பிராட்பேண்ட் இணைய வசதி உள்ளது.

பள்ளியில் உள்ள பல்வேறு குழுக்களைப் பற்றியும் அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும் தெரிந்துக் கொள்ள அவற்றின் லிங்கை கிளிக் செய்க

'வித்யரங்கம் கலாசாஹித்யவேதி' '

வித்யாரங்கம் கலாசாகித்யவேதியின் அனுசரணையில் பல்வேறு பணிகள் இடம்பெற்று வருகின்றன. குழந்தைகளின் வாசிப்புப் பழக்கத்தை வளர்க்க உதவும் செயல்பாடுகள் - வாசிப்புப் போட்டி, வினாடி வினா போன்ற இலக்கியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. பள்ளி நூலகத்தில் மலையாளம் தமிழ் ஆங்கிலம் ஹிந்தி போன்ற மொழிகளில் 900 ற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
   

மேலாண்மை

 பள்ளியின் மேலாளராக அருட்தந்தை லூயிஸ் மரிய பாப்பு , முதல்வராக திரு. இயேசுதாஸ் பெஸ்கி , தலைமை ஆசிரியராக அருட்தந்தை அலேசு சுந்தர்ராஜ் ஆகியோர் உள்ளனர்.
ஆண்டு மேலாளர்கள்
1947 மேதகு உபகார சுவாமி
1948 அருட்திரு மனுவேல் அடிகளார்
1969 அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில்
1977 அருட்திரு கே.பி.வின்சென்ட்
1986 அருட்திரு எஸ்.எம்.அமலதாஸ்
1993 அருட்திரு எம்.குருசாமி
2000 அருட்திரு அமல்ராஜ்
2003 அருட்திரு மரிய இருதய நாதர்
2008 அருட்திரு மதலைமுத்து
2014 அருட்திரு லூயிஸ் மரிய பாப்பு

முன்னாள் தலைமை ஆசிரியர்கள்

இப்பள்ளியின் பணிபுரிந்த முன்னாள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணிபுரியும் தலைமை ஆசிரியர் , அவர்கள் பணிபுரிந்த வருடமும்.
1947 விஷ்வநாத ஐயர்
1948 சவரிமுத்து
1950 அருட்தந்தை இம்மானுவேல்
1969 ஞானாமிர்தம்
1986 காதர் பாட்ஷா
1987 பிலமின்ராஜ்
1997 குஞ்சப்பன்
1998 வெங்கிடசாமி
1999 அருணாட்சலம்
2000 ஹில்டாமேரி
2009 சிஸிலி ஆண்டனி சரோஜா
2011 ஜோன் போஸ்கோ
2013 ஆண்டனி அமல்ராஜ்
2017 அருட்தந்தை அலேஸ் சுந்தர்ராஜ்

பிரபல முன்னாள் மாணவர்கள்

  1. 1972ல் கிரி என்ற மாணவர் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் முதல் ரேங்க் பெற்று பள்ளி வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளார்.
  2. இப்பள்ளியில் 2008 ஆம் வருடம் பயின்ற டீனா என்ற மாணவி எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் எட்டாம் ரேங்க் பெற்று பள்ளி வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளார்.
  3. எங்கள் பள்ளியில் 2007 ஆம் வருடம் 10 : J வகுப்பில் படித்த அனிஷா என்ற மாணவி 2020 நல்லேபிள்ளி கிராம பஞ்சாயத்து தலைவியாக உள்ளார்.
  4. எங்கள் பள்ளியில் 2013 ஆம் வருடம் படித்த அபுதாஹிர் என்ற மாணவன் டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் குடியரசுத்தலைவர் பிரதீபா பட்டேல் ரிப்பப்ளிக் டே பரேட் மெடலை அபுதாஹிர்க்கு அணிவித்தார்.

வழிகாட்டி

https://www.google.com/maps/place/St.+Pauls+High+School+Kozhinjamaparai/@10.7429479,76.828662,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3ba841d4b2e2785b:0xb3f79b5962998cde!8m2!3d10.7429716!4d76.8308086

"https://schoolwiki.in/index.php?title=தமிழ்&oldid=1366368" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്