"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/കുരുന്നുകൾ/കവിതകൾ" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
('{| |- | style="background:#F0F8FF; border:4px solid #c240c2; padding:1cm; margin:auto;"| ==<font size=6><center><u>'''ക...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു) |
No edit summary |
||
വരി 313: | വരി 313: | ||
|} | |} | ||
---- | ---- | ||
===<div style="border-top:0px solid #00FF00; border-bottom:1px solid #00FF00;text-align:left;color:#006400;"><font size=5>'''பட்டாம்பூச்சி'''</font></div>=== | ===<div style="border-top:0px solid #00FF00; border-bottom:1px solid #00FF00;text-align:left;color:#006400;"><font size=5>'''பட்டாம்பூச்சி'''</font></div>=== |
13:41, 31 ഡിസംബർ 2019-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
|
பட்டாம்பூச்சி
வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள் பறக்குது பார் வானத்திலே எனக்குப் பிடித்த பட்டாம்பூச்சி பறந்து வருது என்னை பார்க்க நீலம், மஞ்சள், சிவப்பு எத்தனை எத்தனை பட்டாம்பூச்சிகள் வருது பாரு தேன் குடிக்க வண்ணப்பூக்கள் தோட்டத்திலே வானவில்லின் ஏழு நிறத்தில் பறக்கும் பட்டாம்பூச்சிகள் உலவும் அந்த வானிலே பறக்க எனக்கு ஆசையே!!!
-
மீரா.சு- 4.C
எங்கள் வீட்டுப் பூனை!
எங்கள் வீட்டுப் பூனை!-என் இதயம் கவர்ந்த பூனை! வெள்ளை நிறத்துப் பூனை! விழிகள் கறுத்தப் பூனை! காலைச் செல்லமாய் கடித்து-தன் பசியை உணர்த்தும் பூனை! சுவற்றில் பல்லியைக் கண்டால் சுலபமாய் பிடித்து திண்ணும் சுட்டியான பூனை! விட்டில் பூச்சியைக் கண்டால் விரைந்து தாவிப் பிடிக்கும் விந்தையான பூனை! சின்னக் குறும்புகள் செய்யும் செல்லமான பூனை!-என் சிந்தை கவர்ந்த பூனை! பாலை ஊற்றிக் கொடுத்தால் பாங்காய் குடித்து விட்டு சோங்காய் தூங்கும் பூனை! சுத்த வெள்ளைப் பூனை! மீசையுள்ளப் பூனை!-என் ஆசையான பூனை!
-
தயாளன்.கு- 3.C
பட்டாம்பூச்சி
பூக்கள் முழுதும் பறந்து திரியும் பட்டாம்பூச்சியாம் தங்க நிற கருப்பு நிற பட்டாம்பூச்சியாம். தேனை உண்டு மயங்கிப் பறக்கும் பட்டாம்பூச்சியாம். நானும் கூட பறந்து வந்தால் தேன் தருவாயோ. பட்டாம்பூச்சி போல நீயும் பரந்து செல்வாயே பட்டுக்குட்டி நீயும் கூடி சேர்ந்து வாழ்வாயே சுறுசுறுப்பாய் தினமும் காலை எழுந்திடுவாயே காலைக்கடனை முடித்து கல்வி நிலையம் செல்வாயே.
-
ஷியாம்.செ- 3.C
சுத்தம்
நகத்தை நாமும் வளர வளர வெட்டிட வேண்டும்- தினம் காலை மாலை பல்துலக்கி சாப்பிட வேண்டும் காலைக்கடனை கருத்துடனே முடித்திட வேண்டும் முடித்து நீயும் கல்வி நிலையம் சென்றிட வேண்டும் பள்ளிக்கூடம் சுத்தமாக வைத்திட வேண்டும் அதுவும் கலைக்கோவில் என்று உணர்ந்திட வேண்டும் தேவையான உணவை மட்டும் சாப்பிட வேண்டும் நல்ல நல்ல பிள்ளைகளாய் வளர்ந்திட வேண்டும்.
-
அஷ்வின்குமார்.சு- 4.C
|- |}