"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2025-26" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 183: വരി 183:
27/08/2025 அன்று பள்ளியில் ஓணவிழா சிறப்பாக நடைபெற்றது. ஓண விருந்து ஏற்பாடுகளுக்காக பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் ஒன்று கூடி திட்டமிட்டது. ஓண விருந்திற்கான பொருட்களை பெற்றோர்கள் வழங்கினர். சாதம், சாம்பார், அவியல், தோரன், இஞ்சிப் புளி, பப்படம், பழம், சர்க்கரை வரட்டி, சிப்ஸ், சேமியா பாயசம் போன்ற பல்வேறு வகையான உணவுகள் ஓணவிருந்தில் இடம் பெற்றிருந்தன. பள்ளி வளாகத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து ஓணப்பூக்கோலம் அமைத்தனர். மாணவர்கள் மாவேலி, வாமனன், புலிக்குட்டிகள், மலையாளி மங்கை போன்ற வேடமிட்டனர். அனைத்து வகுப்புகளிலிருந்தும் ஓணத்தை ஒட்டி குழு நடனம், குழுப் பாடல், உரை, ஓணப்பாட்டு, திருவாதிரை போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. தாய்மார்களின் திருவாதிரையும் அரங்கேறியது. ஓண விருந்து முடிந்ததும், ஒன்று, இரண்டு வகுப்புக் குழந்தைகளுக்காக புளியங்கொட்டை பொறுக்குதல் போட்டியும், மூன்று, நான்கு வகுப்புக் குழந்தைகளுக்காக மியூசிக் சேர் போட்டியும் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியை தீபா. எ பரிசுகளை வழங்கினார். அதன் பின் கயிறு இழுத்தல் போட்டியும் நடைபெற்றது. உற்சாகமான கயிறு இழுத்தல் போட்டியுடன் இவ்வாண்டின் ஓணவிழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றது.

* வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=BMyqAT5R4QU '''ஓணவிழா - 2025''']

வண்ணக்கூடாரம் அமைத்தல் - தொடக்க விழா
நமது முன் தொடக்க பள்ளிக்காக கிடைத்த ஸ்டார்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ள வண்ணக்கூடாரம் அமைத்தல் திட்டத்தின் தொடக்க விழா ஆகஸ்ட் 27 புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது. இறை வணக்கத்துடன் கூட்டம் ஆரம்பித்தது. தலைமையாசிரியை தீபா. எ அனைவரையும் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சி.எ ஸ்ரீஜித் குமார் தலைமை வகித்தார். சித்தூர் - தத்தமங்கலம் நகராட்சியின் துணைத் தலைவர் சிவகுமார் குழந்தைகளுக்கு ஒரு உற்சாகமான ஓணப்பாட்டு பாடி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
சித்தூர் பி.ஆர்.சி.யின் பி.பி.சி. சௌதாமா வண்ணக்கூடாரம் திட்டத்தைப் பற்றி விரிவாக விளக்கினார்.  வார்டு உறுப்பினர் ஸ்ரீதேவி ரகுநாத், ஜி.வி.ஜி. ஹெச்.எஸ்.எஸ். முதல்வர் கிரி.டி, ஜி.வி.ஜி. ஹெச்.எஸ்.எஸ். தலைமையாசிரியை பினிதா.கே.ஜி, எஸ்.எம்.சி. தலைவர் பி. மோகன்தாஸ், எஸ்.எம்.சி. துணைத் தலைவர் ரஞ்சித்.கே.பி ஆகியோர் வாழ்த்துகள் தெரிவித்தனர். ஆசிரியர் செயலாளர் ஹிதாயத்துல்லா நன்றியுரை கூறினார்.
முன்தொடக்கப் பள்ளி வகுப்புக் குழந்தைகள் பெற வேண்டிய அனைத்து திறன்களையும் விளையாட்டின் மூலமும், வரைதலின் மூலமும், உருவாக்கத்தின் மூலமும் எளிதாக கற்றுக்கொள்ளும் வகையில் வகுப்பறையின் உட்புறமும் வெளிப்புறமும் முழுமையாக சீரமைக்கப்படும் இந்த வர்ணக் கூடாரம் திட்டம் பள்ளியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.