ഉള്ളടക്കത്തിലേക്ക് പോവുക

"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2025-26" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 181: വരി 181:
|-
|-
|}
|}
27/08/2025 அன்று பள்ளியில் ஓணவிழா சிறப்பாக நடைபெற்றது. ஓண விருந்து ஏற்பாடுகளுக்காக பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் ஒன்று கூடி திட்டமிட்டது. ஓண விருந்திற்கான பொருட்களை பெற்றோர்கள் வழங்கினர். சாதம், சாம்பார், அவியல், தோரன், இஞ்சிப் புளி, பப்படம், பழம், சர்க்கரை வரட்டி, சிப்ஸ், சேமியா பாயசம் போன்ற பல்வேறு வகையான உணவுகள் ஓணவிருந்தில் இடம் பெற்றிருந்தன. பள்ளி வளாகத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து ஓணப்பூக்கோலம் அமைத்தனர். மாணவர்கள் மாவேலி, வாமனன், புலிக்குட்டிகள், மலையாளி மங்கை போன்ற வேடமிட்டனர். அனைத்து வகுப்புகளிலிருந்தும் ஓணத்தை ஒட்டி குழு நடனம், குழுப் பாடல், உரை, ஓணப்பாட்டு, திருவாதிரை போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. தாய்மார்களின் திருவாதிரையும் அரங்கேறியது. ஓண விருந்து முடிந்ததும், ஒன்று, இரண்டு வகுப்புக் குழந்தைகளுக்காக புளியங்கொட்டை பொறுக்குதல் போட்டியும், மூன்று, நான்கு வகுப்புக் குழந்தைகளுக்காக மியூசிக் சேர் போட்டியும் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியை தீபா. எ பரிசுகளை வழங்கினார். அதன் பின் கயிறு இழுத்தல் போட்டியும் நடைபெற்றது. உற்சாகமான கயிறு இழுத்தல் போட்டியுடன் இவ்வாண்டின் ஓணவிழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றது.
* வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=BMyqAT5R4QU '''ஓணவிழா - 2025''']
* வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=BMyqAT5R4QU '''ஓணவிழா - 2025''']

08:12, 1 സെപ്റ്റംബർ 2025-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം

2025 - 26, பள்ளிச் செயல்பாடுகளும் தினக்கொண்டாட்டங்களும்

ஜூன்

பள்ளி நுழைவுத் திருவிழா 2025-26

2025-26 கல்வியாண்டுக்கான பள்ளி நுழைவு விழா நமது பள்ளியில் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. பொதுக்கல்வியை வலுப்படுத்தும் நோக்கத்தில் மாநில அளவில் அமுல்படுத்தப்பட்ட " ஒருங்கிணைந்த கல்வி மேன்மை திட்ட"த்தின் தாக்கம் பள்ளி நுழைவு விழாவிலும் தெளிவாகக் காணப்பட்டது.

நிகழ்ச்சியை சித்தூர் தத்தமங்கலம் நகராட்சித் தலைவி கே.எல். கவிதா தொடங்கி வைத்தார். நகர சபை கவுன்சிலர்கள் சுமதி, ஸ்ரீதேவி ரகுநாத், ஷீஜா ஆகியோரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி. மோகன்தாஸ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் தீபா எ வரவேற்புரை நிகழ்த்தினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் ஜி. சுகதன், எம்.பி.டி.ஏ தலைவர் ரஷ்மி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் கே.பி. ரஞ்சித் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினர். ஆசிரியை சுனிதா எஸ் நன்றி கூறினார்.

புதிய மாணவர்களுக்கு கற்றல் கருவிகள் மற்றும் வண்ணக் கண்ணாடிகள் பரிசாக வழங்கப்பட்டது. மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் லட்டு வழங்கப்பட்டது. இவ்வருட பள்ளி நுழைவு விழா புதிய கல்வியாண்டின் சிறந்த தொடக்கமாக அமைந்தது. இது மாணவர்களிலும் பெற்றோர்களிலும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தூண்டி, பள்ளியின் சமூக உறவுகளை மேலும் வலுப்படுத்தியது.


சுற்றுச்சூழல் தினவிழா

"நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகளை வெல்லுவோம்" என்ற முழக்கத்துடன் நமது பள்ளியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தின விழாவை பெற்றோர்கள் ஆசிரியர் சங்கத் தலைவர் பி. மோகன்தாஸ் தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் ஜி. சுகதன், தலைமை ஆசிரியர் தீபா எ ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பள்ளி காலைக் கூட்டத்தில் மாணவர்கள் சுற்றுச்சூழல் தின உறுதிமொழி கூறினர். மாணவர்கள் தயார் செய்த போஸ்டர்கள், முத்திரை வாக்கியங்கள், படங்கள், பிரசுரங்கள் ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றன. மாணவர்கள் சுற்றுச்சூழல் தின உரை, கவிதை மற்றும் பாடல் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். சுற்றுச்சூழல் தொடர்பான வினாடி-வினா போட்டியும் நடத்தப்பட்டது. மாணவர்கள் கொண்டுவந்ததும், சித்தூர் தொழில்நுட்ப பள்ளியிலிருந்து (JTS Chittur) கிடைத்ததுமான மரக்கன்றுகள் பள்ளியில் நடப்பட்டது. மேலும் மாணவர்களின் வீடுகளுக்கு கொடுத்துவிடவும் செய்யப்பட்டது.


வாசிப்பு தினம்

வருங்கால தலைமுறையினரை வாசிக்கத் தூண்டி, சிந்திக்க வைக்கும் திறனை வளர்த்து, விவேகம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஜூன் 19-ம் தேதி பள்ளியில் வாசிப்பு நாள் கொண்டாடப்பட்டது. காலைக்கூட்டத்தில் வாசிப்பு நாள் உறுதிமொழி மாணவர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது. மாணவர்கள் தயாரித்து வந்த போஸ்டர்கள், பதிப்புகள், சுவரொட்டிகள் ஆகியவை கண்காட்சிக்காக வைக்கப்பட்டது.

இந்த வாசிப்பு தினத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியரான குரியாக்கோஸ் மாஸ்டர் மாணவர்களுடன் உரையாடி, வாசிப்பு தினத்தை தொடங்கி வைத்தார். வாசிப்பின் முக்கியத்துவத்தை மாணவர்கள் நன்கு புரிந்து கொள்வதற்கு அவரது உரை மிகுந்த உதவியாக அமைந்தது. இது ஒரு மாதம் நீடிக்கும் வாசிப்புச் செயல்பாடுகளுக்கு தொடக்கமாக இருந்தது. விடுமுறைக்காலத்தில் சிறந்த முறையில் நாட்குறிப்பு எழுதிய மாணவர்களுக்கு டிரோஃபிகள் வழங்கப்பட்டது. வாசிப்பு போட்டி, கைஎழுத்துப் போட்டி, பேச்சுப் போட்டி, வினாடி வினா (Quiz) கொஞ்சம் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி நூலகத்தில் உள்ள புத்தகங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டன. மேலும் மாணவர்களுக்கு விருப்பமான புத்தகங்கள் வழங்கி வாசிப்பை ஊக்குவிக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும், மாணவர்கள் தயார் செய்த வாசிப்பு குறிப்புகள் காலை கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.

வாசிப்பு மாதத்தின் நிறைவாக, பெற்றோர்களின் வாசிப்புப் பழக்கத்தையும், படைப்பாற்றல் திறனையும் ஊக்குவிக்க, ரசனைப்பணிக்கூடம் (ரசனை முகாம்) நடத்தப்பட்டது. ஓய்வுபெற்ற ஆசிரியை பி. லதா பெற்றோர்களுக்கான வகுப்பை நடத்தினார். பங்கேற்ற பெற்றோர்களின் படைப்புகள் தொகுக்கப்பட்டன. இது ஒருபுதிய அனுபவமாக இருந்தது அனுபவம் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.

யோகா தினம்

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பதை நினைவூட்டும் வகையில், ஜூன் 21 அன்று யோக தினம் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியை ஏ. தீபாவின் தலைமையில் ஆசிரியர்களும் மாணவர்களும் யோக ஆசனங்களைப் பயிற்சி செய்தனர். எளிய யோகப் பயிற்சிகள் உடலுக்கும் மனதுக்கும் உற்சாகத்தையும் ஆரோக்கியத்தையும் அளிக்கும் என்று தீபா ஆசிரியர் குழந்தைகளுக்கு எடுத்துரைத்தார். உடல் நலத்தைப் பேணுவதில் யோகாவின் முக்கியத்துவத்தை உணரச் செய்யும் விதமாக இந்த தின விழா அமைந்தது.


போதைப்பொருள் ஒழிப்பு தினம்

நாட்டையே விழுங்கக்கூடிய பேராபத்தை எதிரிட, போதையின் சங்கிலியை உடைத்து எறிந்து முன்னேற மாணவர்கள் தயாராக வேண்டும் என்பதற்காக, போதைப்பொருள் ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது. காலைக் கூட்டத்தில் மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி கூறினர். போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு செய்திகளும் படங்களும் அடங்கிய மாணவர்கள் உருவாக்கிய போஸ்டர்கள் பள்ளியில் காட்சிக்கு வைக்கப்பட்டன. போதைப் பொருளுக்கு எதிரான மனநிலையை உறுதிப்படுத்த விளையாட்டு பயிற்சியின் தலைமையில் “சும்பநடனம்” என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நமது முதலமைச்சர் பிணராய் விஜயனின் போதைப்பொருள் ஒழிப்பு தின அறிக்கையின் வீடியோவும் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

ஜூலை

பஷீர் தினம்

மலையாள இலக்கியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீரின் நினைவுநாளான ஜூலை 5 ஆம் தேதி, குழந்தைகள் பஷீரின் கதாபாத்திரங்களாக வேடமணிந்து பள்ளிக்கு வந்தனர். பஷீரின் படைப்புகளும் வாழ்க்கையும் தொடர்பான உரைகள், புத்தக அறிமுகம், கதை வாசிப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சந்திர தினம்

மனிதன் சந்திரனில் காலடி வைத்தது நினைவுகூரும் வகையில், இவ்வாண்டும் ஜூலை 21 ஆம் நாள் 56ஆவது சந்திர தினம் கொண்டாடப்பட்டது. விளக்கப்படங்கள், பாடல்கள், நிலாப்பாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குழந்தைகள் தயாரித்த ராக்கெட், சூரிய குடும்ப மாதிரிகள் ஆகியவற்றைக் கொண்ட கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், சந்திரயான்–3 தொடர்பான வீடியோக் காட்சி மற்றும் வினாடி வினா போட்டிகள் குழந்தைகளின் அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில் அமைந்தன.

பள்ளி நிலை அறிவியல், கணித, கைவேலைத்திறன் விழா

இவ்வாண்டு பள்ளி நிலை அறிவியல், கணித, கைவேலைத்திறன் விழா ஜூலை 29, 30, 31 தேதிகளில் நடைபெற்றது. கற்றலுடன் இணைத்து, பிற செயல்பாடுகளிலும் மாணவர்களின் விருப்பம் மற்றும் திறமைகளை அறிய இத்தகைய நிகழ்வுகள் பெரிதும் உதவுகின்றன.

கணித விழாவின் ஒரு பகுதியாக கணித மாதிரி (Still Model), எண் அட்டவணை (Number Chart), வடிவியல் அட்டவணை (Geometrical Chart), கணிதப் புதிர் (Math Puzzle) போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.

அறிவியல் விழாவின் ஒரு பகுதியாக சார்ட் தயாரிப்பு போட்டி நடைபெற்றது.

கைவேலைத்திறன் விழாவின் ஒரு பகுதியாக காகிதப் பூக்கள் தயாரித்தல், காய்கறி அச்சிடுதல் (Vegetable Printing), ஒரிகாமி, குடை தயாரித்தல், களிமண் வடிவங்கள் உருவாக்குதல், முத்துக்களால் ஆபரணம் தயாரித்தல், துணியில் ஓவியம் வரைதல் (Fabric Painting), பூத்தையல், கழிவுப் பொருட்களால் பயனுள்ள தயாரிப்புகள், பத்தி தயாரித்தல், தேங்காய் ஓடு பொருட்கள் தயாரித்தல், கயிறு மிதியடி தயாரித்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றன.

பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். வெற்றியாளர்களுக்கு உபமாவட்ட நிலை போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

ஆகஸ்ட்

ஹிரோஷிமா தினம்

ஆகஸ்ட் 6 புதன்கிழமை, பள்ளியில் ஹிரோஷிமா தினம் அனுசரிக்கப்பட்டது. பள்ளிக் காலைக் கூட்டத்தில் தலைமையாசிரியை தீபா ஏ, போரின் விளைவுகளை மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். மாணவர்கள் போர் எதிர்ப்பு போஸ்டர், சுவரொட்டி, பதிப்புகள், சடாக்கோ கொக்குகள் ஆகியவற்றை தயாரித்து வந்தனர். பள்ளி வளாகத்தில் போர் எதிர்ப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது. பின்னர், மாணவர்கள் தயாரித்த சடாக்கோ கொக்குகள் பள்ளியின் முன்புறத்திலுள்ள மரத்தில் தொங்கவிடப்பட்டது. போரின் பயங்கரத்தைக் காட்டும் வீடியோவும் மாணவர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. போர் அல்ல, அமைதியே தேவை என்பதை மாணவர்கள் உணர்வதற்கான ஒரு வாய்ப்பாக இது அமைந்தது.

பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொது கூட்டம்

பாட, பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளில் மாணவர்களது வளர்ச்சிக்கு துணையாக நிற்கும் பெற்றோர்கள், பள்ளிக்கு மட்டுமன்றி சமூகத்திற்கும் வலிமை சேர்க்கின்றனர். 2025–26 கல்வியாண்டின் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொது கூட்டம் ஆகஸ்ட் 8, வெள்ளிக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு நடைபெற்றது.

தலைமை ஆசிரியை தீபா. ஏ. வரவேற்புரை ஆற்றினார். பி. மோஹன்தாஸ் தலைமையில் சேர்ந்த இப்பொதுக் கூட்டத்தில் ஆசிரியை அனு. ஏ. அறிக்கை வாசித்தார். பின்னர் பெற்றோர்கள் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

புதிய பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக ஸ்ரீஜித் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசிரியர் ஹிதாயத்துல்லா. கே. நன்றியுரை ஆற்றினார்.

பள்ளித் தேர்தல்

2025–26 கல்வியாண்டின் பள்ளி மாணவர் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சிறப்பான முறையில் நடைபெற்றது. போட்டியாளர்கள் தங்களது வேட்புமனுக்களை சமர்ப்பித்து, தங்களது தேர்தல் சின்னங்களுடன் வகுப்பு தோறும் சென்று பிரச்சாரம் நடத்தினர்.

நவீன வாக்குப்பதிவு முறைக்கு இணையாக, மொபைல் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தி தேர்தல் நடத்தப்பட்டது. குழந்தைகளே பிரிசைடிங் ஆபீசர், போளிங் ஆபீசர்கள் போன்ற பொறுப்புகளை மேற்கொண்டனர்.

4 A வகுப்பு மாணவி அன்சிகா பள்ளித் தலைவராகவும், 4 B வகுப்பு மாணவி ஸ்ரீகாபிரஷாந்த் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவர்கள் சத்தியப்பிரமாணம் செய்து பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்.

நண்பனுக்கு ஒரு செடி

குழந்தைகளில் இயற்கையின்மீது நாட்டத்தை வளர்க்கும் நோக்கில் பள்ளியில் "நண்பனுக்கு ஒரு செடி" எனும் முகாம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி நடத்தப்பட்டது. ஆகஸ்ட் 14 வியாழக்கிழமை அனைத்து குழந்தைகளும் தங்களது வீட்டிலிருந்து மரக்கன்றுகள் கொண்டு வந்து, நண்பர்களிடம் மாற்றிக் கொண்டனர். பழமரங்கள், நிழல் மரங்கள் ஆகியவையே குழந்தைகள் கொண்டு வந்தனர். மா, பலா, புளி, வேப்பு, பப்பாளி, நெல்லி, கறிவேப்பிலை, அசோகம் போன்ற செடிகளை மாணவர்கள் மாற்றிக்கொண்டனர்.

தலைமை ஆசிரியை தீபா. எ, இக்கோ கிளப் ஒருங்கிணைப்பாளர்களான பத்மபிரியா, ஷாமிலி ஆகியோருடன் பள்ளியின் பிற ஆசிரியர்களும் முகாமில் பங்கேற்றனர்.

சுதந்திர தின விழா

இந்தியாவின் 79-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளி வளாகம் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டது. தலைமை ஆசிரியை தீபா. எ தேசியக் கொடியை ஏற்றினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சி.ஆர். ஸ்ரீஜித், எஸ்.எம்.சி. தலைவர் பி. மோகன்தாஸ், எம். பி.டி.ஏ. தலைவி சரண்யா, பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் ஜி. சுகதன் ஆகியோர் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்னர் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்தொடக்கப் பள்ளி மாணவர்களின் பன்னி நடனத்துடன் கலைநிகழ்ச்சிகள்தொடங்கப்பட்டது. தேசபக்திப் பாடல், சுதந்திர தின உரை, நாடகம், வந்தே மாதரம் - நடனம் ஆகியவை இடம்பெற்றன. சுதந்திர வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் இனிப்பு வழங்கி இவ்வாண்டு சுதந்திர தின விழா நிறைவு பெற்றது.

ஓணவிழா

27/08/2025 அன்று பள்ளியில் ஓணவிழா சிறப்பாக நடைபெற்றது. ஓண விருந்து ஏற்பாடுகளுக்காக பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் ஒன்று கூடி திட்டமிட்டது. ஓண விருந்திற்கான பொருட்களை பெற்றோர்கள் வழங்கினர். சாதம், சாம்பார், அவியல், தோரன், இஞ்சிப் புளி, பப்படம், பழம், சர்க்கரை வரட்டி, சிப்ஸ், சேமியா பாயசம் போன்ற பல்வேறு வகையான உணவுகள் ஓணவிருந்தில் இடம் பெற்றிருந்தன. பள்ளி வளாகத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து ஓணப்பூக்கோலம் அமைத்தனர். மாணவர்கள் மாவேலி, வாமனன், புலிக்குட்டிகள், மலையாளி மங்கை போன்ற வேடமிட்டனர். அனைத்து வகுப்புகளிலிருந்தும் ஓணத்தை ஒட்டி குழு நடனம், குழுப் பாடல், உரை, ஓணப்பாட்டு, திருவாதிரை போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. தாய்மார்களின் திருவாதிரையும் அரங்கேறியது. ஓண விருந்து முடிந்ததும், ஒன்று, இரண்டு வகுப்புக் குழந்தைகளுக்காக புளியங்கொட்டை பொறுக்குதல் போட்டியும், மூன்று, நான்கு வகுப்புக் குழந்தைகளுக்காக மியூசிக் சேர் போட்டியும் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியை தீபா. எ பரிசுகளை வழங்கினார். அதன் பின் கயிறு இழுத்தல் போட்டியும் நடைபெற்றது. உற்சாகமான கயிறு இழுத்தல் போட்டியுடன் இவ்வாண்டின் ஓணவிழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றது.