"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2024-25" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
No edit summary
No edit summary
വരി 224: വരി 224:


===அஞ்சல் தினம்===
===அஞ்சல் தினம்===
அக்டோபர் 10, தபால் தினத்தில் சித்தூர் தபால் நிலையத்திற்கு 4 ஆம் வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் களப்பயணம் சென்றனர்.  தபால் நிலையத்தின் செயல்பாடுகளை குழந்தைகள் நேரில் பார்த்து, தபால் அலுவலர் சொல்லிக் கொடுத்த தகவல்களை சேகரித்தனர்.  அனைத்து மாணவர்களுக்கும் தபால் அலுவலர்கள் தபால் அட்டைகள் மற்றும் மிட்டாய்கள் வழங்கினர். தபால் பெட்டி மாதிரி தயாரித்தல், பழங்கால தகவல் தொடர்பு முறையான  கடிதம் (இன்லன்ட்), ஸ்டாம்ப் போன்றவற்றை அறிமுகம் செய்யப்பட்டது.
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-postalday24.jpg|200px]]
|-
|}
அக்டோபர் 9, தபால் தினத்தில் சித்தூர் தபால் நிலையத்திற்கு 4 ஆம் வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் களப்பயணம் சென்றனர்.  தபால் நிலையத்தின் செயல்பாடுகளை குழந்தைகள் நேரில் பார்த்து, தபால் அலுவலர் சொல்லிக் கொடுத்த தகவல்களை சேகரித்தனர்.  அனைத்து மாணவர்களுக்கும் தபால் அலுவலர்கள் தபால் அட்டைகள் மற்றும் மிட்டாய்கள் வழங்கினர். தபால் பெட்டி மாதிரி தயாரித்தல், பழங்கால தகவல் தொடர்பு முறையான  கடிதம் (இன்லன்ட்), ஸ்டாம்ப் போன்றவற்றை அறிமுகம் செய்யப்பட்டது.


===பேநாய்விஷ விழிப்புணர்வு வகுப்பு ===
===பேநாய்விஷ விழிப்புணர்வு வகுப்பு ===
വരി 233: വരി 238:
|-
|-
|}
|}
உலக ரேபிஸ் தினத்தையொட்டி சுகாதார துறையின் உதவியுடன் திருமதி. தீபா என்பவரால் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது. பேன் தொல்லையை தடுக்கும் பல்வேறு வழிமுறைகளை வகுப்பில் விளக்கினர்.  இது குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
உலக ரேபிஸ் தினத்தையொட்டி சுகாதார துறையின் உதவியுடன் அக்டோபர் 9 ஆம் தேதி தீபா என்பவரால் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது. பேன் தொல்லையை தடுக்கும் பல்வேறு வழிமுறைகளை வகுப்பில் விளக்கினர்.  இது குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.


==நவம்பர்==
==நவம்பர்==

14:51, 19 ഡിസംബർ 2024-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം

2024 - 25, பள்ளிச் செயல்பாடுகளும் தினக்கொண்டாட்டங்களும்

ஜூன்

பள்ளி நுழைவுத் திருவிழா 2024-25

நமது பள்ளியின் நுழைவுத் திருவிழா ஓய்வுபெற்ற தலைமையாசிரியை டி. ஜெயலட்சுமி துவக்கி வைத்தார். பிடிஏ தலைவர் பி. மோகன்தாஸ் தலைமை வகித்த இவ்விழாவிற்கு, ஆசிரியை சுனிதா வரவேற்புரை கூறினார். PTA துணைத் தலைவர் ஜி.சுகதன், எஸ்.எம்.சி. தலைவர் கே. பி. ரஞ்சித், எம்.பி.டி.ஏ. தலைவி கே. சுமதி உள்ளிட்டோர் பேசினர். முன்னாள் மாணவன் சுதீஷ் சோபனா இசை பாடினான். புதிய குழந்தைகளுக்கு கற்றல் கருவிகள் வழங்கப்பட்டது. விடுமுறைக்கால செயல்பாடாக நடத்தப்பட்ட நாட்குறிப்பு தயாரிப்பில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வகுப்புகளுக்கு வழி நடத்தப்பட்டது.

சுற்றுச்சூழல் தினம்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க புதிய தலைமுறையினருக்கு நினைவூட்ட மற்றொரு சுற்றுச்சூழல் தினம். பள்ளி காலைக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் தின உறுதிமொழி கூறப்பட்டது. குழந்தைகள் சுவரொட்டிகள் மற்றும் முத்திரை வாக்கியங்களுடன் ஊர்வலம் நடத்தினர். குழந்தைகள் தங்கள் வீடுகளில் மரக்கன்றுகளை நட்டனர். பிடிஏ துணைத் தலைவர் ஜி.சுகதன் குழந்தைகள் பள்ளியில் மரக்கன்றுகள் நடவும் காய்கறி விதைகள் விதைக்கவும் செய்தனர். 3 மற்றும் 4 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மதுரம் மலையாளம்

சித்தூர் ஜெயண்ட்ஸ் குழுவினர் 5 மாத்ருபூமி செய்தித்தாள்களை நமது பள்ளிக்கு வழங்கினர். சித்தூர் ஜெயண்ட்ஸ் குழு தலைவர் ரவிக்குமார், பள்ளி காலைக்கூட்டத்தில் மாணவர் பிரதிநிதிக்கு செய்தித்தாளை வழங்கி துவக்கி வைத்தார். ஜெயண்ட்ஸ் குழு பிரதிநிதிகள், மாத்ருபூமி நிருபர் சுரேந்திரநாத், PTA தலைவர் பி. மோகன்தாஸ், துணைத் தலைவர் ஜி.சுகதன், எஸ்.எம்.சி. தலைவர் கே.பி.ரஞ்சித், ஆசிரியை எஸ். சுனிதா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பேசினர். இது குழந்தைகளிடம் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த உதவும்.

வாசிப்பு தினம்

படித்து வளரவும் சிந்தித்து ஞானம் பெறவும் வேண்டும் என நமக்கு கற்றுத் தந்த பி.என்.பணிக்கரை நினைவுகூற வாசிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. 'வாசிப்பு வாரத்தின் தொடக்கமாக காலைக் கூட்டத்தில் வாசிப்பு உறுதிமொழி கூறப்பட்டது. குழந்தைகள் வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சுவரொட்டிகளை காட்சிப்படுத்தினர். பள்ளி நூலகத்தில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது. வகுப்பு நூலகங்கள் செயல்படத் தொடங்கின. ஒவ்வொரு வகுப்பினரின் செயல்பாடுகளும் காலைக்கூட்டத்தை நிறைவுபடுத்தியது. கவிதை, உரை, பொன்மொழிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளை குழந்தைகள் நிகழத்தினர். குழந்தையுடன் பெற்றோர் பங்கேற்கும் வாய்ப்பை வழங்கும் "நல்ல வாசிப்பு நன்மை வாசிப்பு" என்னும் போட்டியும் குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் கவிதை மொழிதல், கதை சொல்லுதல், புத்தகக்குறிப்பு ஆகியவை உட்படும். வாசிப்பு வாரத்தின் இறுதியில் பிரபல எழுத்தாளர் வைசாகன் குழந்தைகளுடன் உரையாடினார். மேலும் வாசிப்பு வினாடி வினா வெற்றியாளர்களுக்கும் வகுப்புகளில் நடைபெற்ற வாசிப்பு மற்றும் கையெழுத்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

யோகா தினம் மற்றும் இசை தினம்

ஆரோக்கியமான வாழ்வில் யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க ஜூன் 21 ஆம் நாள் யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. வாழும் கலை (Art of living) ஆசிரியை லீலா ஜனார்த்தனன் குழந்தைகளிடம் உரையாற்றினார். மேலும் குழந்தைகளுக்கு சில எளிய யோகா பயிற்சிகளும் சொல்லிக் கொடுத்தார். தலைமை ஆசிரியை தீபா, ஆசிரியை சுனிதா உள்ளிட்டோர் யோகாவின் முக்கியத்துவம் பற்றி பேசினர். 1 ஆம் வகுப்பு மாணவன் ஜின்ஸ்வின் கே மற்றும் முன் தொடக்கப் பள்ளி மாணவர்கள் இசை தினமும் ஆன இந்த நந்நாளில் பாடல்களைப் பாடினர்.

போதைப்பொருள் எதிர்ப்பு தினம்

புதிய தலைமுறையை போதைப் பழக்கத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்னும் நோக்கத்தோடு ஜூன் 26ஆம் தேதி போதைப்பொருள் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. குழந்தைகள் சுவரொட்டிகள் ஏந்திக்கொண்டு முத்திரை வாக்கியங்களை முழக்கிக்கொண்டு ஊர்வலம் நடத்தப்பட்டது. போதை வேண்டாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் சின்னமாக பள்ளி முற்றத்தில் குழந்தைகள் நின்றனர். காலைக் கூட்டத்தில் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. போதையின் ஆபத்தில் சிக்காமல் இருக்கத் தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டது.

காய்கறி நாற்றுகள் விநியோகம்

சித்தூர் துஞ்சத்தெழுத்தச்சன் நினைவு நூலக வளாகத்தில், மண்ணுத்தி சவுத் சன் வேளாண் பண்ணை மற்றும் விவசாய பழமர பிரச்சாரக் குழு இணைந்து நடத்திய விழாவில், நமது பள்ளிக்கும் வளர்ப்பு பைகள், காய்கறி நாற்றுகள் மற்றும் இயற்கை உரங்கள் கிடைத்தன. நகரசபைத் தலைவி கே. எல். கவிதா விழாவினைத் துவக்கி வைத்தார். கவுன்சிலர்கள் சுமதி மற்றும் ஷீஜா பேசினர்.

ஜூலை

பஷீர் தினம்

கதைகளின் சுல்தான் வைக்கம் முஹம்மது பஷீரின் நினைவு நாளான ஜூலை 5 ஆம் தேதி பஷீர் தினமாக அனுசரிக்கப்பட்டது. காலைக்கூட்டத்தில் பஷீரின் வாழ்க்கை வரலாறு, படைப்புகள் குறித்து பேசப்பட்டது. குழந்தைகள் தயாரித்து வந்த சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டது. பஷீர் கதாபாத்திரங்களாக வேடமிட்டு வந்த குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் வழங்கப்பட்டது. உலகப் புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரை அறிமுகப்படுத்த இந்த நாள் உதவியது.

நல்ல வாசிப்பு நன்மை வாசிப்பு

நமது பள்ளியில் "நல்ல வாசிப்பு நன்மை வாசிப்பு" என்னும் போட்டி வாசிப்பு தினத்தின் தொடர்பாக நடத்திய செயல்பாடாகும் . இது பெற்றோர் மற்றும் குழந்தை இருவரும் பங்கேற்கும் போட்டியாகும். கவிதைமொழிதல், கதை சொல்லுதல், புத்தகக்குறிப்பு ஆகிய போட்டிகள் இடம்பெற்றன. விக்டோரியா நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் நடுவர்களாக இருந்தனர். மலையாளம் மற்றும் தமிழ் பிரிவுகளில் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் உண்டு. பெற்றோரின் ஆதரவு குழந்தைகளிடம் நம்பிக்கையை வளர்க்கிறது. மேலும் பெற்றோர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்தல் என்பதுவே இப்போட்டிகளின் நோக்கமாகும்.

சந்திர தினம்

மனித குலத்தின் மாபெரும் முன்னேற்றத்தை நினைவுகூரும் வகையில் சந்திர தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் தயாரித்த ராக்கெட் மாதிரிகள் சுவரொட்டிகள் பதிப்புகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன. காலை கூட்டத்தில் குழந்தைகளின் பேச்சு கவிதை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சந்திர தின வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

ஒலிம்பிக் ஜோதி ஓட்டம்

உலகம் முழுவதையும் உற்சாகப்படுத்திய விளையாட்டுப் போட்டியின் தொடக்கத்தின் ஒரு பகுதியாக நமது பள்ளிக் காலைக் கூட்டத்தில் சிறப்பு உறுதிமொழி செய்யப்பட்டது. காலைக் கூட்டத்தில் ஒலிம்பிக்ஸ் விளையாட்டு பற்றி விளக்கப்பட்டது. பின்னர் ஆசிரியர்கள் தலைமையில் குழந்தைகள் ஜோதியை ஏந்தி அணிக்கோடு சந்திப்பு வரை ஊர்வலம் நடத்தப்பட்டது. பின்னர் பள்ளி வளாகத்தில் ஒலிம்பிக் போட்டியின் சின்னமான 5 வளையங்கள் போல மாணவர்கள் அணி நின்றனர். ஒலிம்பிக்ஸ் தொடர்பான பத்திரிகைக் கட்டுரைகள் மற்றும் படங்கள் அடங்கிய ஆல்பம் தயாரிக்க வேண்டும். சிறந்த ஆல்பங்களுக்கு பரிசுகளும் உண்டு.

ஆகஸ்ட்

ஹிரோஷிமா - நாகசாகி தினம்

போரும் போருக்குப் பிந்தைய உலகமும் எப்பொழுதும் நமக்கு ஒரு எச்சரிக்கையே. உலக மனசாட்சியை அதிர வைத்த நாட்களான ஆகஸட் 6 ஆம் தேதி ஹிரோஷிமா தினமும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி நாகசாகி தினமும் அனுசரிக்கப்பட்டது. போர் எதிர்ப்பு சுவரொட்டிகள் மற்றும் முத்திரை வாக்கியங்களை குழந்தைகள் தயார் செய்து வந்தனர். பள்ளிக் காலைக்கூட்டத்தில் தலைமை ஆசிரியை தீபா போரினால் மனித குலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினார். போருக்கு எதிராக பள்ளி முற்றத்தில் உள்ள மரத்தில் சடகோ கொக்குகளை குழந்தைகள் தொங்கவிட்டனர். போர் எதிர்ப்பு ஊர்வலமும் நடத்தப்பட்டது.


பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக்கூட்டம்

2024-25ஆம் கல்வியாண்டுக்கான முதல் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக்கூட்டம் ஆகஸ்ட் 8ஆம் தேதி மதியம் 2 மணிக்கு பள்ளியிலுள்ள லீலா மந்திரத்தில் வைத்து நடைபெற்றது. ஏறக்குறைய 200 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் தலைமை ஆசிரியை தீபா அனைவரையும் வரவேற்றார். PTA பொதுக்கூட்டத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக PTA வின் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் பள்ளியின் முன்னேற்றத்திற்கான கலந்துரையாடலும் நடைபெற்றது. அதன்பிறகு, ஆசிரியை சுனிதா எஸ். கடந்த ஒரு வருடத்தின் செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார். கடந்த ஆண்டின் PTA வரவு செலவு கணக்குகளை தற்போதைய PTA தலைவர் பி. மோகன்தாஸ் வெளியிட்டார். கற்றல் செயல்பாடுகளுடன் கற்றல் இதா செயல்பாடுகளிலும் குழந்தைகளுக்கு ஆர்வமூட்ட இசை மற்றும் நடன வகுப்புகள் பள்ளியில் தொடங்க வேண்டும் என்று பெற்றோர்கள் கருத்த்து தெரிவித்தனர். மேலும் பள்ளியில் ஆங்கில வழிக் கற்றல் தொடங்குவதற்கான கலந்துரையாடலும் நடைபெற்றது. கட்டிட குறைபாட்டின் காரணமாக தற்போது ஆங்கில வழிக்கல்வி தொடங்க இயலாது என்றும், புதிய கட்டிடம் கிடைத்தால், வரும் ஆண்டுகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கலாம் என்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர். பின்னர் புதிய பிடிஏ தேர்வு நடத்தப்பட்டது. பிடிஏ நிர்வாகக் குழு, மதர் பிடிஏ , பள்ளி மேலாண்மைக் குழு ஆகிய மூன்று குழுக்களுக்குப் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். PTA தலைவராக மோகன்தாஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். செயற்குழு உறுப்பினர் ஜி.சுகதன், PTA துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மதர் PTA கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனையின்படி, கே. ரஷ்மி MPTA தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைவரின் ஆலோசனைப்படி எஸ்எம்சி தலைவராக கே.பி.ரஞ்சித் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பள்ளியின் அனைத்து நடவடிக்கைகளிலும், பி டி ஏ வின் முழு ஒத்துழைப்பும் உறுதி செய்யப்படும் என,பிடிஏ தலைவர் பி.மோகன்தாஸ் கூறினார். பெற்றோர்களின் கருத்துக்களை மனதிற் கொண்டும் குழந்தைகளின் பாதுகாப்பை முன்நிறுத்தியும் குழந்தைகளை அழைத்து வரும் வாகனங்களை பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும் வாயிலுக்கு வெளியே நிறுத்தினால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டது. பள்ளியில் நடைபெறும் கற்றல் செயல்பாடுகள் பற்றியும் குழந்தைகளின் கற்றல் தரம் பற்றியும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோர்கள் தங்களது கருத்துக்களைக் கூறினர்.

பள்ளி தலைவர் தேர்தல்

நமது பள்ளியில் ஆகஸ்ட் 13ஆம் தேதி ஜனநாயக முறைப்படி பள்ளித் தேர்தல் நடத்தப்பட்டது. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து தேர்தல் சின்னங்களை வைத்து பிரச்சாரம் செய்தனர். EVM App போன்களில் பதிவிறக்கி நவீன முறையில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. குழந்தைகளே தலைமை அதிகாரி மற்றும் வாக்குச்சாவடி அதிகாரியின் கடமைகளை வகித்தனர். விரல்களில் மை வைத்து வாக்களித்தது குழந்தைகளுக்கு ஆர்வமாக இருந்தது. 4 A வகுப்பு மாணவி எம். ஜெ இஷா பள்ளித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 4பி வகுப்பைச் சேர்ந்த ஹெலன் ஷைன் இரண்டாவது தலைவராகவும், 4 ஏ வகுப்பைச் சேர்ந்த அரிஜித் மூன்றாவது தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மறுநாள் பள்ளிக் காலைக்கூட்டத்தில் பதவிப் பிரமாணமும் செய்யப்பட்டது.

சுதந்திரதின விழா

78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகம் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டது. சரியாக 9 மணிக்கு தலைமையாசிரியை தீபா கொடியேற்றினார். பிடிஏ உறுப்பினர்களும் பங்கேற்றனர். பின்னர் கொடிப்பாடல் பாடப்பட்டது. தலைமை ஆசிரியை தீபா, பிடிஏ தலைவர் பி.மோகன்தாஸ், எஸ்எம்சி தலைவர் கே.பி.ரஞ்சித் ஆகியோர் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். சுதந்திரத்திற்காக போராடிய தேசத்தலைவர்கள் போல் வேடமணிந்து குழந்தைகள் சுதந்திர தின விழாவை சிறப்பித்தனர். பின்னர் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குழந்தைகள் தேசபக்தி பாடல்கள், சுதந்திரதின உரை, நடன நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினர். பின்னர் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

துஞ்சன் மடம் - களப்பயணம்

4 ஆம் வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து நவீன மலையாள மொழியின் தந்தை துஞ்சத் ராமானுஜனின் நினைவிடமான துஞ்சன் மடத்திற்குக் களப்பயணம் செல்லப்பட்டது. மலையாள மொழியின் தந்தையான எழுத்தச்சன் தனது இறுதி 35 ஆண்டுகள் சித்தூர் துஞ்சன் மடத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும், அவரது முக்கியப் படைப்புகளான அத்யாத்ராமாயணம் கிளிப்பாட்டு, மகாபாரதம் கிளிப் பாட்டு முதலியவை இங்கு வைத்து இயற்றப்பட்டதாகவும் கருதப்படுகிறது. ஆகஸ்ட் 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு நான்காம் வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் துஞ்சன் மடத்தை சென்றடைந்தனர். எழுத்தச்சன் பயன்படுத்திய எழுத்தாணி, பனை ஓலை, புத்தகங்கள், மிதியடி , அவரது சமாதி போன்றவற்றைப் பார்க்கும் வாய்ப்பு குழந்தைகளுக்குக் கிடைத்தது. துஞ்சன் மடத்தின் முக்கியத்துவத்தை ஓய்வு பெற்ற சமஸ்கிருத ஆசிரியர் சோமசேகரன் குழந்தைகளுக்கு எடுத்துரைத்தார் . துஞ்சன் மடத்தின் வரலாற்றை மிகத் தெளிவாகச் சொல்லிக் கொடுத்தார். மேலும் ராமாயணத்தின் முக்கியத்துவம் மற்றும் அதை எப்படி வாசிக்க வேண்டும் என்பது பற்றியும் பாரதப்புழைக்கு சோகனாசினி புழா என்ற பெயர் எப்படி வந்தது என்பதையும் குழந்தைகளுக்கு எடுத்துரைத்தார். கூறினார். மேலும் சில குழந்தைகள் அங்கு ராமாயணத்தை ஆர்வமாக வாசித்தனர். ஆசிரியை ஹேமாம்பிகா .வி, வகுப்புக்கு தலைமை தாங்கிய துஞ்சன்மட நிர்வாகிகள் மற்றும் சோமசேகரனுக்கு நன்றி கூறினார்.

பள்ளி அளவிலான விளையாட்டு போட்டி

இவ்வருட பள்ளி அளவிலான விளையாட்டுப் போட்டி ஆகஸ்ட் 19ஆம் தேதி திங்கட்கிழமை பள்ளி மைதானத்தில் நடத்தப்பட்டது. ஆசிரியர்களின் தலைமையில் ஒன்று முதல் நான்கு வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் பிறந்த தேதியின் அடிப்படையில் எல்பி மினி மற்றும் எல்பி கிட்டீஸ் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். ஓட்டப்பந்தயம் நடத்துவதற்காக உயர்நிலைப்பள்ளி மாணவிகள், விளையாட்டு ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டுக் கழகப் பொறுப்பாசிரியர் ஹிதாயத்துல்லா தலைமையில் மைதானத்தில் பத்து தடங்கள் அமைக்கப்பட்டது. பள்ளி விளையாட்டுப் போட்டிகள் குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்ததால், குழந்தைகள் போட்டிகளில் பங்கேற்க தயாராக வந்திருந்தனர். பின்னர் எல் பி மினி மற்றும் எல் பி கிட்டீஸ் பிரிவின் சிறுவர், சிறுமிகளுக்கான ஓட்டப்பந்தயம், எல்.பி மினி பிரிவில் ஸ்டுட் ஜம்ப், எல்.பி. கிட்டீஸ் பிரிவில் நீளம் தாண்டுதல் போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் மூன்று இடங்களைப் பிடித்து வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு வரும் நாட்களில் துணை மாவட்ட விளையாட்டு கண்காட்சியில் பங்கேற்க பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

Ecube ஆங்கில மொழி ஆய்வகம் - திறப்புவிழா

ஆகஸ்ட் 23ஆம் தேதி ஈக்யூப் ஆங்கில மொழி ஆய்வகத்தை எழுத்தாளர் நாடக ஆசிரியர் மற்றும் ஆங்கில மொழி ஆசிரியரான காளிதாஸ் புதுமனை திறந்து வைத்தார். பாலக்காடு கைட் மாஸ்டர் ட்ரெய்னர் பிரசாத் ஈக்யூபின் அம்சங்கள் குறித்து தெளிவுபடுத்தினார். பின்னர் ஈக்யூப்பில் உள்ள செயல்பாடுகள் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு குழந்தையும் தங்கள் சொந்த பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை தயார் செய்து செயல்பாடுகளை செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது.

கலைவிழா

பள்ளி கலைவிழா - கிலுக்கம் 2024- ஆகஸ்ட் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெற்றது. சித்தூர் - தத்தமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் எம்.சிவக்குமார் விழாவைத் துவக்கி வைத்தார். எஸ். எம்.சி தலைவர் ரஞ்சித் தலைமை வகித்தார். சித்தூர் தத்தமங்கலம் பேரூராட்சி 17வது வார்டு கவுன்சிலர் ஸ்ரீதேவி ரகுநாத் மற்றும் எம் பி டி ஏ தலைவர் ரஷ்மி வாழ்த்துரை வழங்கினர். குழந்தைகள் பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், கதைசொல்லுதல், சைகைப் பாடல், மெல்லிசை, கன்னடம் கவிதை சொல்லுதல், மலையாளக் கவிதை சொல்லுதல், ஆங்கிலக் கவிதை சொல்லுதல், மாப்பிள்ளைப் பாடல், உரை, அரபுக் கவிதை சொல்லுதல் மற்றும் தனியாள் நடிப்பு போன்ற போட்டிகளில் பங்கேற்றனர். தமிழ் கலைவிழாவில் திருக்குறள் ஒப்பு வித்தல், கதை சொல்லுதல் மற்றும் தேசபக்தி பாடல் போன்ற போட்டிகளில் தமிழ் குழந்தைகள் கலந்து கொண்டனர். வரவழைக்கப்பட்ட நடுவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் கலைவிழா சிறப்பாக நடைபெற ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கினர். வெற்றி பெற்றவர்களுக்கு துணை மாவட்ட போட்டியில் பங்கேற்பதற்கான பயிற்சியும் பரிசுகளும் வழங்கப்படும்.

பள்ளி அளவிலான பணி அனுபவ கண்காட்சி

செப்டம்பர்

ஆசிரியர் தினம்

காலைக் கூட்டத்தில் ஆசிரியர் தினம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆசிரியர் தின உரை, கவிதைகள் போன்றவை குழந்தைகள் கூறினர் . தலைமையாசிரியை தீபா குழந்தைகளுக்கு ஆசிரியர் தினத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். ஒவ்வொரு குழந்தைகளும் தங்கள் ஆசிரியர்களுக்கு மலர்கள், வாழ்த்து அட்டைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கவுரவித்தனர். நான்காம் வகுப்பு மாணவி எம்.ஜே.இஷாவும், மூன்றாம் வகுப்பு மாணவி ஜஸ்ரீனாவும் ஆசிரியைகள் வேடத்தில் வந்து ஆசிரியர்களுக்கு வகுப்பு எடுத்தனர். குழந்தைகள் ஆசிரியர் தினத்திற்கான பதிப்புகளையும் செய்தனர்.

ஓண விழாவும் ஓண விருந்தும்

இவ்வருட ஓணக் கொண்டாட்டம் மற்றும் ஓண விருந்து செப்டம்பர் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்தொடக்கப் பள்ளி முதல் நான்காம் வகுப்பு வரையிலான குழந்தைகளும் அவர்களது பெற்றோர்களும் ஓணம் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். பள்ளி முற்றத்தில் குழந்தைகள் பூக்கோலம் போட்டனர். வாமனன் மற்றும் மகாபலியின் வேடமணிந்த குழந்தைகள் ஓணம் கொண்டாட்டத்தை சிறப்பித்தனர். புலி வேடம் அணிந்த குழந்தைகள் செண்டை மேளத்துடன் புலியாட்டம் ஆடினர். குழந்தைகள் ஓணப்பாடல், உரை, குழுப்பாடல், திருவாதிரை, நாற்காலி விளையாட்டு ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தினர். பெற்றோர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து ஓணம் விருந்து தயாரித்தனர்.

அக்டோபர்

காந்தி ஜெயந்தி

உலக அகிம்சை தினமான மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். உரை, கவிதைகள், காந்தி வசனங்கள், பதிப்புகள், சுவரொட்டிகள் போன்றவைகள் இடம்பெற்றன. பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் ஆசிரியர்களும் வாழ்த்துரை வழங்கினர். வகுப்பறைகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்ததன் மூலம் காந்தி வழியின் மகத்துவத்தை குழந்தைகள் புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

அஞ்சல் தினம்

அக்டோபர் 9, தபால் தினத்தில் சித்தூர் தபால் நிலையத்திற்கு 4 ஆம் வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் களப்பயணம் சென்றனர். தபால் நிலையத்தின் செயல்பாடுகளை குழந்தைகள் நேரில் பார்த்து, தபால் அலுவலர் சொல்லிக் கொடுத்த தகவல்களை சேகரித்தனர். அனைத்து மாணவர்களுக்கும் தபால் அலுவலர்கள் தபால் அட்டைகள் மற்றும் மிட்டாய்கள் வழங்கினர். தபால் பெட்டி மாதிரி தயாரித்தல், பழங்கால தகவல் தொடர்பு முறையான கடிதம் (இன்லன்ட்), ஸ்டாம்ப் போன்றவற்றை அறிமுகம் செய்யப்பட்டது.

பேநாய்விஷ விழிப்புணர்வு வகுப்பு

உலக ரேபிஸ் தினத்தையொட்டி சுகாதார துறையின் உதவியுடன் அக்டோபர் 9 ஆம் தேதி தீபா என்பவரால் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது. பேன் தொல்லையை தடுக்கும் பல்வேறு வழிமுறைகளை வகுப்பில் விளக்கினர். இது குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

நவம்பர்

கேரளப்பிறவி

உணவு கண்காட்சி

குழந்தைகள் தினம்