ഗവ. എസ് എസ് എൽ പി എസ് കരമന/അക്ഷരവൃക്ഷം/ பாரம்பரிய உணவும் நோய் தடுப்பும்
பாரம்பரிய உணவும் நோய் தடுப்பும்
ஒரு ஊரில் ஒரு தாத்தாவும் பாட்டியும் வாழ்ந்து வந்தனர். அவர்களின் ஒரே மகன் வெளி நாட்டில் வேலை செய்து வந்தான். ஒருநாள் அவன் தன் பெற்றோற்களைக் காண மனைவி மற்றும் மகனுடன் ஊருக்கு வந்தான். மகன், மருமகள் மற்றும் பேரன் ஆகியோரைக்கண்ட தாத்தாவும் பாட்டியும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களுக்கு சத்தான பாரம்பரிய உணவு வகைகளை சமைத்துக்கொடுத்தார் பாட்டி. ஆனால் அந்த உணவு வகைகள் எதையும் பேரன் சாப்பிடமாட்டான். அவன் துரித உணவுகளை மட்டுமே விரும்பி சாப்பிடுவான். சொன்னாலும் கேட்கமாட்டான். இதனால் அவனுக்கு அடிக்கடி நோய் வந்தது. அவனுடைய ஆரோக்கியத்தைப்பற்றி வீட்டிலுள்ள அனைவரும் கவலைப்பட்டனர். ஒருநாள் அவன் மிகவும் கவலையோடு இருந்தான். தாத்தா அவன் அருகில் அமர்ந்து விசாரித்தார். ஊரில் உள்ள பிற குழந்தைகளுடன் என்னால் ஓடியாடி விளையாட முடியவில்லை. மிகவும் சோர்வாக இருக்கிறது என்று கூறி அழுதான். அதைக்கேட்ட தாத்தா, உன்னுடைய தவறான உணவுப்பழக்கத்தால் உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைத்துவிட்டதுதான் இதற்கு காரணம் என்று கூறினார். சிறுதானியங்கள், கீரைகள், காய்கறிகள், பழங்கள் என நம் பாரம்பரிய உணவு வகைகளை சாப்பிட்டால் தான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். எனவே துரித உணவுகளை விட்டுவிட்டு வீட்டில் சமைக்கும் சத்தான உணவு வகைகளை சாப்பிட்டால் விரைவில் குணமடையலாம் என்று கூறினார். அதைக்கேட்ட பேரன், தாத்தா நீங்கள் சொல்வதுபோல் நான் நடந்துகொள்கிறேன் என்றான். சில நாட்களிலேயே அவன் நலமடைந்து சுறுசுறுப்பாகிவிட்டான். வீட்டிலுள்ள அனைவரும் அவனைக்கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
|
- അക്ഷരവൃക്ഷം പദ്ധതിയിലെ സൃഷ്ടികൾ
- തിരുവനന്തപുരം ജില്ലയിലെ അക്ഷരവൃക്ഷം-2020 സൃഷ്ടികൾ
- തിരുവനന്തപുരം സൗത്ത് ഉപജില്ലയിലെ അക്ഷരവൃക്ഷം-2020 സൃഷ്ടികൾ
- അക്ഷരവൃക്ഷം പദ്ധതിയിലെ കഥകൾ
- തിരുവനന്തപുരം ജില്ലയിലെ അക്ഷരവൃക്ഷം കഥകൾ
- തിരുവനന്തപുരം ജില്ലയിലെ അക്ഷരവൃക്ഷം സൃഷ്ടികൾ
- തിരുവനന്തപുരം സൗത്ത് ഉപജില്ലയിലെ അക്ഷരവൃക്ഷം-2020 കഥകൾ
- തിരുവനന്തപുരം ജില്ലയിൽ 05/ 05/ 2020ന് ചേർത്ത അക്ഷരവൃക്ഷം സൃഷ്ടികൾ
- അക്ഷരവൃക്ഷം 2020 പദ്ധതിയിൽ നാലാം ഘട്ടത്തിൽ പരിശോധിച്ച സൃഷ്ടികൾ
- അക്ഷരവൃക്ഷം 2020 പദ്ധതിയിൽ നാലാംഘട്ടത്തിൽ പരിശോധിച്ച കഥ
- അക്ഷരവൃക്ഷം 2020 തമിഴ് രചനകൾ