ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/வித்யாரங்கம்/கதைக் கூட்டம்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
< ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ‎ | தமிழ்‎ | வித்யாரங்கம்
12:27, 4 ജനുവരി 2020-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- 21302 (സംവാദം | സംഭാവനകൾ) (→‎கதைக்கூட்டம்)
(മാറ്റം) ←പഴയ രൂപം | ഇപ്പോഴുള്ള രൂപം (മാറ്റം) | പുതിയ രൂപം→ (മാറ്റം)

கதைக்கூட்டம்

21302-story1.jpg 21302-story2.jpg

வயது வித்தியாசம் பாராமல் அனைவரும் விரும்பக்கூடிய ஒன்றாகும் கதை. கதைக்கூட்டத்தில் மிகவும் நல்ல நிகழ்ச்சிகளை குழந்தைகளுக்காக திருமதி. ஜெயஸ்ரீ ஆசிரியை தயாராக்கி இருந்தார். மேலும் இக்கூட்டத்தை தொடங்கி வைத்தார். தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா அவர்கள் தலைமை தாங்கினார். ஒரு நல்ல கதையை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து கொண்டு ஆசிரியர் குழந்தைகளோடு கருத்துக்களை பரிமாறினார். மேலும் குழந்தைகளுக்கு கதை சொல்வதற்கான வாய்ப்புகளும் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு கதையும் உருவாவது கதை எழுத்தாளரின் கற்பனைத் திறனைப் பொறுத்தேயாகும். இரண்டு வகையான கதைகள் உண்டு என்று ஆசிரியர் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தார். ஒன்று உண்மைக்கதை மற்றொன்று கற்பனைக்கதை. ஒரு கதையைப் படித்து, அதன் பொருளைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் அனைவருக்கும் நல்ல வாசிப்புப் பயிற்சி வேண்டும் என்று ஆசிரியர் கூறினார். திருமதி. கீதா ஆசிரியை முயலும் மானும் என்ற ஒரு தலைப்புக் கொடுத்து புதிய கதைகள் உருவாக்க குழந்தைகளுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மிக நல்ல முறையில் குழந்தைகள் கதைகள் கூறினர். எல்லா குழந்தைகளுக்கும் பாராட்டுக்கள் வழங்கப்பட்டது. அனைவரும் நல்ல கதை எழுத்தாளராக முடியும் என ஊக்கப்படுத்திக்கொண்டு கதைக்கூட்டம் என்ற புதிய ஒரு அற்புத உலகிற்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல முடிந்தது.