ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/வித்யாரங்கம்/கவிதைக் கூட்டம்

< ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ‎ | தமிழ்‎ | வித்யாரங்கம்
12:28, 4 ജനുവരി 2020-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- 21302 (സംവാദം | സംഭാവനകൾ) (→‎கவிதைக்கூட்டம்)
(മാറ്റം) ←പഴയ രൂപം | ഇപ്പോഴുള്ള രൂപം (മാറ്റം) | പുതിയ രൂപം→ (മാറ്റം)

கவிதைக்கூட்டம்

21302-poem1.jpg 21302-poem2.jpg 21302-poem3.jpg

ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் கவிதை எழுதும் திறன்படைத்த குழந்தைகளை கண்டுபிடித்து கவிதை கூட்டம் உருவாக்கப்பட்டது.திருமதி. கீதா ஆசிரியை குஞ்ஞுண்ணி கவிஞரின் ஒரு கவிதையை சொல்லிக்கொண்டு இக்கூட்டத்தைத் தொடங்கிவைத்தார். மேலும் குழந்தைகளைக் குழுக்களாக்கி கவிதை சொல்வதற்கான வாய்ப்புக்கள் கொடுக்கப்பட்டது. பின்பு வைலோப்பிள்ளி என்னும் கவிஞரின் மாம்பழம் என்னும் கவிதை குழந்தைகள் கேட்கும் படி ஒலிபரப்பப் பட்டது .இதிலிருந்த ஒவ்வொரு கவிதைக்கும் இராகமும் தாளமும் உண்டு என்று ஆசிரியர் சொல்லிக்கொடுத்தார். ஒவ்வொரு கவிதையும் அதனுடைய பொருளைப் புரிந்துகொண்டு சொல்லவேண்டும் என்று குழந்தைகள் புரிந்துகொண்டனர். குழுவாக மட்டுமல்லாமல் தனிநபராகவும் கவிதை சொல்வதற்கான வாய்ப்பு குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்டது. ஒற்றுமை, கருணை, அன்பு போன்றவற்றை உணர்த்தும் சில கவிதைகள் குழந்தைகளுக்கு கேள்விக்கப்பட்டது. இது குழந்தைகளுக்கு மிகவும் நல்ல ஒரு அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு கவிதையும் அதனுடைய ஆழத்தில் சென்று நாம் சொல்லும் போதுதான் அதன் அழகு கூடுகிறது என்று திரு. பவில்தாஸ் ஆசிரியர் கூறினார். மேலும் அவர் குஞ்ஞுண்ணி கவிஞரின் ஒரு கவிதை சொல்ல குழந்தைகள் அதை திரும்ப சொல்லிக் கொண்டு கவிதைக்கூட்டம் இனிதே தொடங்கியது.