ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/வித்யாரங்கம்/ஓவியக்கூட்டம்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
അച്ചടി പതിപ്പ് നിലവിൽ പിന്തുണയ്ക്കുന്നില്ല, അതിൽ റെൻഡറിങ് പിഴവുകൾ ഉണ്ടാവാനിടയുണ്ട്. ദയവായി താങ്കളുടെ ബ്രൗസർ ബുക്ക്മാർക്കുകൾ പുതുക്കുക, ബ്രൗസറിൽ സ്വതേയുള്ള അച്ചടി സൗകര്യം ഉപയോഗിക്കുക.

ஓவியக்கூட்டம்

ஓவியக்கூட்டத்தை தொடங்கி வைத்தது பெருமைக்குரிய சித்தூரின் ஓவியரான திரு.இராஜேந்திரன் அவர்களே. குழந்தைகளிடம் சிறு உரையாடல் நடத்திக்கொண்டு, ஓவியம் வரைய செய்தார். ஒவியக்கலை மிகவும் நுணுக்கமான ஒன்றாகும் என்று கூறினார். அவர் குழந்தைகளிடம் பிடித்தமான படங்கள் வரையச் செய்தார். குழந்தைகள் ஆர்வத்துடன் வரைந்தனர். ஒவ்வொரு படத்திலும் கருத்துக்கள் மறைந்திருக்கின்றன. அதனை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் ஒரு நல்ல ஓவியராக வேண்டும் என்றும் திரு. ராஜேந்திரன் அவர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தார். மேலும் கரும்பலகையில் ஒரு குழந்தையினுடைய படத்தை வரைந்த பின்பு அதனோடு தொடர்புடைய நிறைய படங்களையும் வரைந்தார். இது குழந்தைகளுக்கு வியப்பாக இருந்தது. ஒவ்வொரு படத்தையும் ஆழத்தில் சென்று பார்த்தால் மட்டுமே ஒரு நல்ல ஓவியராக முடியும் என்பதை குழந்தைகளால் புரிந்துகொள்ள முடிந்தது. நாம் பார்க்கின்ற ஒவ்வொரு ஓவியத்திற்கு பின்னிலும் கடினஉழைப்பு உண்டு என்று ஆசிரியர் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தார். மிகநல்ல ஒரு அனுபவத்தைத் தந்தது இந்த ஓவியக்கூட்டம்.