സഹായം Reading Problems? Click here


ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/மேதைகளுடன் - ஜி.வி.எல்.பி.எஸ், சித்தூர்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
< ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ‎ | தமிழ்
15:21, 5 ഡിസംബർ 2019-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- 21302 (സംവാദം | സംഭാവനകൾ) ('{| |- | style="background:#F0F8FF; border:4px solid #401abf; padding:1cm; margin:auto;"| <font size=6><center><u>'''ம...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു)

(മാറ്റം) ←പഴയ രൂപം | ഇപ്പോഴുള്ള രൂപം (മാറ്റം) | പുതിയ രൂപം→ (മാറ്റം)
மேதைகளுடன் - ஜி.வி.எல்.பி.எஸ், சித்தூர்
21302-prathiba04.png 21302-prathiba05.png

பொதுக்கல்வி பாதுகாப்பு வேள்வியின் பாகமாக நடத்தப்படுகின்ற பள்ளிக்கூடம் மேதைகளுடன் எனும் அரசாங்கத்தின் திட்டத்தை நாங்கள் மிக மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம். பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளான குழந்தை கள்தினத்தில் ஜி.வி.எல்.பி பள்ளிக்கூடம், "எங்கள் பள்ளி மேதைகளுடன் " என்னும் நிகழ்ச்சிக்கு தொடக்கமிட்டது. பள்ளிக்கூடத்திற்கு அருகாமையிலுள்ள கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகளில் கேரளத்திலும் வெளி மாநிலத்திலும் அறியப்படுகின்ற புகழ்பெற்ற மேதைகளைக் கண்டறிந்து, அவர்களை கௌரவப்படுத்த முடிந்ததில் நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம். இந்த மேதைகளுக்கு பல்லாயிரம் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றோம்.

1. திரு. ஜெயசீலன் (இலக்கியலாளர், எழுத்தாளர்)

21302-prathiba07.png 21302-prathiba06.png 21302-prathiba08.png

சித்தூரின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த திரு. ஜெயசீலன் அவர்களை கெளரவப்படுத்திக் கொண்டு இத்திட்டத்திற்கு தொடக்கமிட்டோம். தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா என்.கே, ஆசிரியர்களான திருமதி. ஜெயஸ்ரீ.டி, திருமதி. சுனிதா, திருமதி. ஹேமாம்பிகா, திரு.பவில்தாஸ் போன்றவர்களுடைய தலைமையில் ஒன்று முதல் நான்கு வரையுள்ள வகுப்புகளிலிருந்துள்ள குழந்தைகள் ஒன்றாகச் சேர்ந்து திரு. ஜெயசீலன் அவர்களது வீட்டிற்கு சென்றோம். புன்னகையோடு குழந்தைகளுக்கு மிட்டாய்கள் வழங்கி அனைவரையும் வரவேற்றார். எளிமையாகவும் சிறந்த மொழி நடையிலும் குழந்தைகளது வினாக்களுக்கு பதிலளித்தார். அவரது பிறப்பிடமான இயல் (திருச்சூர்) என்னும் கிராமத்தைப் பற்றியும் தன்னுடைய எழுத்துக்களைப் பற்றியும் கூறினார். விருப்பமான எழுத்தாளர்கள், புத்தகங்கள் போன்றவற்றைப் பற்றியும் கூறினார். மேலும் அனைத்து குழந்தைகளுக்கும் புத்தகங்களைப் பரிசாக வழங்கினார். குழந்தைகள் அவருக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தனர். எலுமிச்சை பானத்தின் இனிமையை சுவைத்துக்கொண்டு அவரது பேச்சினைக் கேட்டு மகிழ்ந்து, விடைபெற்று பள்ளிக்கூடத்திற்கு திரும்பினோம்.

2. திரு.சிவக்குமார் (இலக்கியலாளர், கலைஞர்)

21302-prathiba01.png 21302-prathiba02.png 21302-prathiba03.png

மேதைகளை கெளரப்படுத்தல் என்னும் நிகழ்ச்சியின் பாகமாக பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த பெருமைக்குரிய திரு. சிவகுமார் அவர்களை கெளரவித்தோம். இலக்கியம், கலை போன்ற துறைகளில் விளங்கி நிற்கின்ற சிறந்த மேதையே சிவக்குமார் அவர்கள். இவர் பல்வேறு அங்கீகாரங்களைப் பெற்றுள்ளார். தொடர்ச்சியாக 4 வருடங்கள் பல்கலைக்கழக அளவில்மிமிக்ரி கலைஞருக்கான விருதை பெற்றுள்ளார். அதுமட்டுமல்ல நம்முடைய தேசத்தந்தையான மகாத்மா காந்திஜியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு காந்திக்விஸ் என்னும் புத்தகத்தையும் இயற்றியுள்ளார். பொன்னாடையும் பூச்செண்டும் வழங்கி இவரை குழந்தைகள் கெளரவப்படுத்தி மகிழ்ந்தனர். ஒவ்வொரு துறையிலும் அவரது வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பகிர்ந்துகொண்டார். அதுமட்டுமல்ல இவர் ஒரு நாடக கலைஞனும் ஆவார். பாலக்காட்டிலுள்ள ஒரு சிறப்புமிக்க நாடகக் குழுவில் இவர் நடித்துள்ளார். நம்முடைய லட்சியத்தை எக்காரணத்தாலும் கைவிடக்கூடாது என்றும் தவறு கண்டால் அதனைச் சுட்டிக்காட்ட தயங்கக்கூடாது என்றும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தார். ஆழ்ந்த வாசிப்பு நம்மை மேதை ஆக்கும் என்னும் பாடத்தை இந்த மேதையின் வாயிலாக நாங்கள் எங்களது குழந்தைகளுக்கு புரியச் செய்தோம்.

3. திரு. கே.கே சுரேந்திரன் (புகழ்பெற்ற விளையாட்டு வீரர்)

21302-prathiba24.png 21302-prathiba22.png 21302-prathiba21.png

திரு. கே.கே சுரேந்திரன் என்னும் முன்னாள் விளையாட்டு வீரரை கெளரவிப்பதற்காக அத்திக்குழி என்னும் இடத்தில் உள்ள அவரது வீட்டிற்கு குழந்தைகளும் ஆசிரியர்களும் சென்றோம். 1982 காலகட்டத்தில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கெடுத்த விளையாட்டு வீரரே இவர். நமது கேரளத்திற்காக தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் தங்க மெடல்கள் பெற்றுத் தந்துள்ளார். ஏசியாடு கேம்ஸில் (Asiad Games) பங்கெடுத்த வீரராவார். படிக்கும் காலத்தில் திரு. சுரேந்திரன் அவர்கள் பல்கலைக்கழக அளவில் பலமுறை வெற்றி மகுடம் சூடியுள்ளார். KSEB லிருந்து ஓய்வுபெற்ற இவர், புதிய தலைமுறையினருக்காக விவசாயத்தின் முக்கியத்துவத்தை அறியச்செய்ய ஜைவ விவசாயம் 100 மேனி விளைவித்து வெற்றிபெற்றுள்ளார். இவரது வீட்டில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள கலப்பை இந்தப் புது தலைமுறை குழந்தைகளுக்கு ஒரு அற்புத காட்சியாக இருந்தது.

4. திரு. கலாபவன் சுனில் (சிறந்த மிமிக்ரி கலைஞர்)

21302-prathiba17.png 21302-prathiba18.png 21302-prathiba20.png

சித்தூரின் கலை பாரம்பரியத்தில் முத்திரை பதித்த கலைஞராவார் திரு. கலாபவன் சுனில். கொச்சியிலுள்ள கலாபவனில் மிமிக்ரி பயின்றும், கலாபவன் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தும் முன்னேறிய பெருமைக்குரிய ஒரு கலைஞரே இவர். மழவில் மனோரமா என்னும் தொலைக்காட்சி சேனலில் காமெடி உற்சவம் என்னும் நிகழ்ச்சியில் மிமிக்கிரி செய்த, சித்தூரின் மதிப்பிற்குரிய ஒரு கலைஞரே கலாபவன் சுனில். 15க்கும் மேற்பட்ட குழந்தைகளும் ஆசிரியர்களும் அவருடைய வீட்டிற்குச் சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்தும் பூச்செண்டு வழங்கியும் கெளரவப்படுத்தினர். கலைத்துறையில் அவருடைய அனுபவங்களை பற்றித் தெரிந்துகொள்ள நமது குழந்தைகள் அவருடன் ஒரு நேர்காணல் நடத்தினர். சிறந்த முறையில் குழந்தைகளது கேள்விகளுக்கு பதிலளித்தார். பாலக்காடு மாவட்டத்திலும் வேறு மாவட்டங்களிலும் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். மேலும் குழந்தைகளுக்காக அவர்களது வேண்டுகோளுக்கு இணங்கி மிமிக்ரி செய்து காண்பித்தார். இது குழந்தைகளுக்கு மிகவும் வியப்புக்குரியதாக இருந்தது. கலைத்துறையில் இன்றும் திகழ்ந்து நிற்கின்ற நமது கலைஞர் பல அங்கீகாரங்களைப் பெற்றுள்ளார்.

5. திருமதி. கே.பி. தீபா (நாட்டுப்புறப்பாடல் கலைஞர்)

21302-prathiba10.png 21302-prathiba12.png 21302-prathiba11.png

மேதைகளை கௌரவித்தல் என்னும் திட்டத்தின் பாகமாக பள்ளிக்கூடத்திற்கு அருகிலுள்ள வால்முட்டி என்னும் இடத்திலுள்ள நாட்டுப்புறப் பாடல் கலைஞரான திருமதி. கே.பி. தீபா அவர்களை கெளரவித்தோம். கேரள கலாச்சாரத்துறை நடத்துகின்ற ஆயிரம் கலைஞர்களை கௌரவப்படுத்துகின்ற விழாவில் நாட்டுப்புறப்பாடல் துறையில் பெலோஷிப்பிற்கு தகுதிபெற்ற ஒரேஒரு கலைஞரே தீபா அவர்கள். கலைத்துறையிலும் கல்வித்துறையிலும் திகழ்ந்து நிற்கின்றவரே இவர். இது குழந்தைகளுக்கு வித்தியாசமான ஒரு அனுபவமாக இருந்தது. 15ற்கும் மேற்பட்ட குழந்தைகளும் ஆசிரியர்களும் சேர்ந்து கௌரவிப்பதற்காகச் சென்றோம். குழந்தைகள் கேட்ட வினாக்களுக்கு நல்ல முறையில் பதிலளித்தார். இவர் ஒரு ஆசிரியராக இருந்ததனால் குழந்தைகளது கேள்விகளுக்கு மிக நல்ல முறையில் பதிலளிக்க அவரால் முடிந்தது. மேலும் குழந்தைகளது கட்டாயத்திற்கு இணங்கி ஒரு நாட்டுப்புறப் பாடலும் குழந்தைகளுக்காக பாடிக் கொடுத்தார். கேரள அரசின் "அரங்கு" என்னும் நிகழ்ச்சியில் மாநில அளவில் வெற்றி பெற்றவர். நாட்டுப்புறப்பாடல் துறையில் ஆராய்ச்சி நடத்துவதற்கான முயற்சியில் உள்ளார். மேதைகளை கெளரவித்தல் என்னும் நிகழ்ச்சி மிகச் சிறந்த ஒன்றாகும் என்று கூறினார். நாட்டுப்புறப் பாடல் துறையில் சிறந்து விளங்க குடும்பத்தினுடைய ஊக்குவிப்பு மிக முக்கியம் என்று கூறினார். இன்றைய தலைமுறையிலுள்ள குழந்தைகள் தனித்திறன் படைத்தவர்கள் என்றும் வாய்ப்பு கிடைக்கும் வரையில் திறமையை உயர்த்திக் கொண்டு வர வேண்டும் என்றும் ஒரு நல்ல பாடம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தார்.

6. திரு.மோகனன் (நாட்டுப்புறப் பாடல் கலைஞர்)

21302-prathiba27.png 21302-prathiba25.png

எங்கள்பள்ளி மேதைகளுடன் என்னும் நிகழ்ச்சியின் பாகமாக புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடல் கலைஞரான திரு.மோகனன் அவர்களது வீட்டிற்கு ஆசிரியர்களும் 15 குழந்தைகளும் சேர்ந்து சென்றோம். இவர் நாட்டுப்புற பாடல் துறையில் கேரளாவிலும் இந்தியாவிலும் சிறந்து விளங்குகின்றார். பள்ளிக்கூடத்திலுள்ள பல்லுயிர் பூங்காவிலுள்ள பூக்களாலான பூச்செண்டைக் கொடுத்தும் பொன்னாடை அணிவித்தும் கெளரவித்தோம். பின்பு குழந்தைகள் அவருடன் நேர்காணல் நடத்தினர். நாட்டுப்புறப் பாடலில் அவருக்கு ஆர்வம் ஏற்படுவதற்கான காரணமும் சிறப்புக்களும் குழந்தைகளிடம் எடுத்துரைத்தார். அவரது வீட்டு முற்றத்திலுள்ள மண்ணிற்கும் கலை வாசனை உண்டு. சித்தூர் வால்முட்டியில் நாட்டுப்புறப் பாடல் கலைஞர்கள் நிறைந்திருக்கின்றனர். இவரது சீடர்களும் உள்ளனர். நாட்டுப்புறப் பாடலில் சிறந்து விளங்க உறுதுணையாக இருப்பது இவரது தாயாரே. அன்றைய காலத்தில் பல கஷ்டங்களால் கூடுதல் படிக்க முடியவில்லை என்ற கவலை இப்பொதும் அவருக்குண்டு. குழந்தைகளுக்காக ஒரு பாடல் பாடிக் கொடுத்தார்.

7. திரு. இராஜேந்திரன் (புகழ்பெற்ற ஓவியர்)

21302-prathiba15.png 21302-prathiba14.png 21302-prathiba13.png 21302-prathiba16.png

சித்தூரின் புகழ்பெற்ற ஓவியர் திரு.இராஜேந்திரன் அவர்களை குழந்தைகளும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஒன்று சேர்ந்து கெளரவிக்கச் சென்றோம். அனைவருக்கும் லட்டு வழங்கி அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். ரோஜா மலர் கொடுத்து, பொன்னாடை அணிவித்தோம். குழந்தைகள் அவருடன் நேர்காணல் நடத்தினர். உங்களது குரு யார்? எத்தனாவது வயதில் ஓவியம் வரையத் தொடங்கினீர்கள்? முதலில் வரைந்த ஓவியம் எது? எந்த வகை ஓவியங்கள் வரைய நீங்கள் விரும்புகிறீர்கள்? அனைவரும் ஓவியக்கலையை விரும்புவது எதனால்? உங்களது வாழையிலை ஓவியத்தை எவ்வாறு வரைத்தீர்கள்? போன்ற குழந்தைகளின் கேள்விகளுக்கு அவர்களுக்கு புரியும்படி எளிமையாக பதிலளித்தார். இவர் வாழையிலையில் வரைத்த பத்மநாபனின் ஓவியம் மிகப் பெரியதாகும். இதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் . செய்வதற்கான முயற்சியில் இருக்கின்றார். ஓவியம் வரைவது தாய்லான்ட் முறையிலாகும். இந்தியாவில் முதன்முதலில் வாழை இலையில் ஓவியம் வரைந்த ஓவியர் நமது திரு. ராஜேந்திரன் அவர்களே.