ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/கூடுதல் விவரங்கள்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
07:23, 12 ഡിസംബർ 2019-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- 21302 (സംവാദം | സംഭാവനകൾ) ('{| |- | style="background:#F0F8FF; border:4px solid #6c6c51; padding:1cm; margin:auto;"| ==<font size=6><center><u>'''க...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു)
(മാറ്റം) ←പഴയ രൂപം | ഇപ്പോഴുള്ള രൂപം (മാറ്റം) | പുതിയ രൂപം→ (മാറ്റം)

கற்றல் திருவிழா - ஜி.வி.எல்.பி பள்ளியின் பிரதிபா சங்கமம்

முகவுரை

ஜி.வி.எல்.பி பள்ளியின் கற்றல் திருவிழா மிகவும் நல்ல முறையில் நடந்தேறியது. பிரதிபா சங்கமம் என்ற பெயரை நாங்கள் கற்ற திருவிழாவிற்காக தேர்ந்தெடுத்தோம். சித்தூரின் இதயப்பகுதியான துஞ்சத்து ஆச்சாரியன் நினைவு நூலகத்தில் 14.2.2019 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சித்தூர்-தத்தமங்கலம் முனிசிபாலிட்டி செயர்மன் திரு .கே.மது அவர்கள் பிரதிபா சங்கமத்தை தொடங்கி வைத்தார். வார்டு கெளன்சிலர் திரு. சிவகுமார் அவர்கள் இவ்விழாவிற்கு தலைமை தாங்கினார். நூலக அலுவலர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. கே.பி இரஞ்சித், தலைமையாசிரியை திருமதி.ஷைலஜா, அரசு விக்டோரியா மேனிலைப்பள்ளி முதல்வர் திரு.இராஜீவன், BPO திரு. மனு சந்திரன் போன்றவர்கள் இவ்விழாவிற்கு வாழ்த்துரை வழங்கினர். நமது பள்ளியில் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் நடத்துவது பெற்றோர்களும் ஆசிரியர்களும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் ஒன்றிணைந்தே ஆகும். இதுவே நமது பள்ளியின் வெற்றியின் ரகசியம்.

குழந்தை மேதைகளின் கற்றல் மேன்மைகள்

சித்தூரின் இதயப்பகுதி என்பதால் நிறைய பொதுமக்களும் பெற்றோர்களும் நமது பிரதிபா சங்கமத்தில் பங்கு வகித்தனர். மேலும் எங்களது குழந்தைகளின்திறமைகள் யாவும் சபையோர் அனைவரையும் கவர்ந்திழுத்தது. பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களையும் உட்படுத்திக் கொண்டுள்ள சிறப்பான ஒரு விழாவாக இருந்தது என்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். குழந்தை மேதைகளுடைய கற்றல் மேன்மைகளை நேரடியாக அறிந்து கொள்ள இது ஒரு அரிய வாய்ப்பு. கவிதை, நாட்டுப்புறப்பாடல், விவசாயப் பாடல், நாடகம், கணித அறிவியல் வினாடி வினா (உடனடி பரிசு, ஆங்கில பேச்சுப் போட்டி, திருட்டுப் பழக்கம் தவறானது என்னும் உண்மையை உணர்த்தும் இரண்டாம் வகுப்பு மாணவர்களின் நாடகம், தண்டியாத்திரை, தமிழின் சிறப்பை உணர்த்தும் ஒரு கும்மியாட்டம் போன்ற பல கற்றல் மேன்மைகள் பிரதிபா சங்கமத்தில் இடம்பெற்றது.கேரளம் அனுபவித்த மிகப்பெரிய துன்பம் 2018ல் நடந்த வெள்ளப்பெருக்கு. அதனால் ஏற்பட்ட கொடுமைகளும் கேரள மக்களின் மனதில் அழியாமல் இருக்கிறது. இதன் நேரடி காட்சிகளை உட்படுத்திக் கொண்டு எங்களது குழந்தைகளின் நடனம் பள்ளியின் சிறப்பை பன்மடங்கு உயர்த்தியது. பார்வையாளர்களுக்கு வெள்ளப்பெருக்கக் காட்சிகளை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்த இதனால் முடிந்தது. இந்த மாபெரும் வெள்ளப்பெருக்கத்திற்கு காரணம் மனிதர்களாகிய நாமே என்ற உண்மையை உணர முடிந்தது. ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் மதிப்புடையதாகவும் பார்வையாளர்களைக் கவரும்படியாகவும் இருந்தது. பிரதிபா சங்கமம் என்ற தலைப்பு 100% வீதமும் பொருத்தமானதாக இருந்தது. ஆசிரியர் திருமதி. ஜெயஸ்ரீ அவர்கள் நன்றியுரை கூறி பிரதிபா சங்கமம் 2018 - 19 முற்றுப்பெறச் செய்தார். மற்றுள்ள பள்ளிகளிலிருந்து எங்கள் பள்ளியை வித்தியாசமானதாக்குவது எங்களது ஒற்றுமையும் திட்டமிடலுமேயாகும். இதுவே எங்களது பள்ளியின் வெற்றியின் அடிப்படை.