ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/ஆங்கிலச் சங்கம்/ஆங்கிலச் சங்கம்

ஆங்கிலச் சங்கம்2019 -20,- தொடக்கவிழா

அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளியில் 2019- 20 கல்வியாண்டின் ஆங்கிலச் சங்கத்தினை 10.7.2019, புதன்கிழமை அரசு விக்டோரியா உயர்தொடக்கப்பள்ளி ஆசிரியையான திருமதி. ரீனா அவர்கள் தொடங்கி வைத்தார். வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகும் ஆங்கில மொழியின் பயன்பாடு. நாம் பயன்படுத்துகின்ற பல ஆங்கில வார்த்தைகளும் ஆங்கிலம் அறியாதவர்கள் கூட பயன்படுத்தி வருகின்றனர்.நாம் அறியாமலேயே அவை நம் பேச்சுமொழியில் இடம்பெற்றிருக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். ஆங்கில மொழியின் பிறப்பிடம், பயன்பாடு, அழகு போன்றவற்றை எடுத்துக்காட்டுடன் குழந்தைகளுக்கு புரியச்செய்தார். அவர் குழந்தைகளிடம் ஆங்கிலத்திலேயே உரையாடி நல்ல ஒரு ஆங்கில வகுப்பு சூழ்நிலையை உருவாக்கினார். சைகைப் பாடல்கள், வீடியோக்கள் போன்றவை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆங்கிலத்தை பயமின்றி பயன்படுத்துவதற்கான ஒரு தொடக்கமாக இருந்தது இந்த ஆங்கிலச் சங்க தொடக்க விழா. குழந்தைகளுடைய ஆங்கில மொழித் திறனை வெளிக்காட்ட அவர்களுடைய படைப்புகளை உட்படுத்தி ஒரு ஆங்கில பதிப்பு தயாரிக்கும்படி அறிவுறுத்தினார். மேலும் பதிப்புக்கு Sparkles என்று பெயர் சூட்டும் படியும் கூறினார். தலைமை ஆசிரியை திருமதி. ஷைலஜா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். குழந்தைகளுடைய ஆங்கில மொழிக் கலைநிகழ்ச்சிகள் யாவும் இனிமையாக இருந்தது. பின்பு ஆங்கிலச்சங்கத் தலைவரான திருமதி. சுப்ரபா அவர்கள் நன்றியுரை வழங்கினார்.


ஆங்கில விழா

இந்த வருடத்தின் ஆங்கில விழா பிப்ரவரி 2ஆம் தேதி நடத்தப்பட்டது. பொதுக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் பாகமாக நடத்தப்படுகின்ற ஒரு நிகழ்ச்சியே ஆங்கில விழா. குழந்தைகள் ஆங்கில மொழியில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காகவும் ரசனையோடு கற்பிப்பதற்காகவும் உள்ள ஒரு கற்றல் திட்டமாகும் ஆங்கில விழா. ஜி. வி. ஜி. எச். எஸ். எஸ் சித்தூரின் முன்னாள் பிரின்ஸிப்பாலும், ஆங்கில ஆசிரியையுமான திருமதி. சூரியகுமாரி இவ்விழாவினைத் தொடங்கி வைத்தார். ஆங்கிலக் கல்வியின் சிறப்புக்களைப் பற்றி ஆசிரியை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். எனவே கற்கும் பொழுதும் விருப்பத்தோடு கற்றால் எளிமையாக புரிந்துகொள்ள முடியும் என்று அவர் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தார். குழந்தைகள் அனைவரும் விழாவில் சிறப்பாகப் பங்கேற்றனர். ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் ஒன்றிற்கொன்று சிறப்பானதாகவே இருந்தது. பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் திரு.ஸ்ரீஜித் அவர்கள் விழாவிற்கு தலைமைத் தாங்கினார். ஆங்கில மொழியை விரும்புவதற்கும் எளிமையாக கையாளுவதற்கும் உள்ள ஒரு மனப்பான்மை குழந்தைகளில் வளர்ப்பதற்கான ஒரு தொடக்கமாக இருந்தது இந்த ஆங்கில விழா. இவ்விழாவை மிக நல்ல முறையில் நடத்துவதற்காக குழந்தைகளும் ஆசிரியர்களும் வகித்த பங்கு எடுத்துரைக்க வேண்டிய ஒன்றாகும்.