ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/அறிவியல் சங்கம்/அறிவியல் மேதை

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
15:21, 28 നവംബർ 2019-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- 21302 (സംവാദം | സംഭാവനകൾ) ('{| |- | style="background:#f0f8ff; border:4px solid #008f00; padding:1cm; margin:auto;"| <font size=6><center><u>'''அ...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു)
(മാറ്റം) ←പഴയ രൂപം | ഇപ്പോഴുള്ള രൂപം (മാറ്റം) | പുതിയ രൂപം→ (മാറ്റം)
அறிவியல் மேதை

முகவுரை

அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளியின் 2019- 20 கல்வியாண்டில் துவங்கிய ஒரு சிறப்புச் செயல்பாடாகும் அறிவியல் பிரதிபா. பள்ளி அறிவில் சங்க கன்வீனர் திருமதி.லில்லி தோமஸ் ஆசிரியையும், திருமதி. பபிதா பேபி ஆசிரியையும் சேர்ந்துதான் இச்செயல்பாட்டிற்கு தலைமை வகிக்கின்றனர்.

இலட்சியங்கள்

குழந்தைகளில் அறிவியல் மனப்பான்மை வளர்கிறது. மாணவர்களுக்கு அறிவியலில் ஆர்வம் ஏற்படுத்துவதற்கும், அன்றாட வாழ்வில் அறிவியலின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வதற்கும் இச்செயல்பாடு பெரிதும் உதவும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. அதுமட்டுமல்லாமல் அறிவியல் மனப்பான்மையுடைய ஒரு சிறந்த தலைமுறையை உருவாக்குவதிலும் இது பெரும்பங்கு வகிக்கிறது.

செயல்பாடு

ஒவ்வொரு நாளும் அறிவியல் தொடர்பான ஒரு கேள்வி அறிவிப்புப் பலகையில் எழுதியிடுவோம். குழந்தைகள் அதற்கான பதிலை கண்டுபிடித்து வருகின்றனர். அடுத்த நாள் இக்கேள்வியின் பதிலும் புதிய ஒரு கேள்வியும் எழுதியிடுவோம். குழந்தைகள் தங்களது பதிலை சரிபார்த்துக் கொண்டு புதிய வினாவிற்கான விடை கண்டறிய முயற்சி செய்கின்றனர். இச்செயல்பாடு தொடர்ந்து கொண்டிருக்கும். இது குழந்தைகளுக்கு ஒரு பொதுஅறிவு சேகரிப்புக் கிடைக்க வழிவகுக்கிறது. இக்கேள்விகளை உட்படுத்தி மாதம் ஒருமுறை வினாடி வினாப் போட்டி நடத்தப்படும். இப்போட்டியில் வெற்றி பெறும் குழந்தையை அந்தந்தமாத அறிவியல் பிரதிபா என அறிவிக்கப்படும். வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும். அறிவியல் சங்க செயல்பாடுகள் இதன்மூலம் நல்ல முறையில் நடைபெறுகின்றது.

சிறப்பம்சம்

அறிவியல் துறையிலுள்ள புதிய மற்றும் பழைய அறிவுகள் குழந்தைகளுக்கு வழங்குவதற்கான ஒரு சிறந்த முயற்சியே இச்செயல்பாடு. நவீன தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி, புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், நுணுக்கமான செய்திகள் போன்றவற்றை உட்படுத்தி, குழந்தைகளின் அறிவுச் செல்வத்தை மேன்மேலும் அதிகப்படுத்த இச்செயல்பாடு பெரிதும் துணை புரிகிறது.