ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്



அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது.

வரலாறு வசதிகள் துவக்கப் பள்ளி செயல்பாடுகள் அங்கீகாரங்கள்
எனது நாடு... எனது சித்தூர்...
மிகவும் புகழ்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும் சித்தூர். அதுமட்டுமல்ல செல்வ சிறப்பிலும் எப்பொழுதும் முன்னிலையில்தான். இங்குள்ள செல்வச்சிறப்பினைக் கண்டு ஆசைப்பட்டு சித்தூர் தேசத்தை பிடித்தடக்க முயன்ற கொங்கு நாட்டு மன்னனை சித்தூர் காவில் உள்ள பகவதியின் துணையோடு தோற்கடித்து நாட்டை காப்பாற்றிய வீர கதையை நாம் அனைவரும் கேட்டிருப்போம். இதை நினைவுபடுத்தும் விதமாக வருடந்தோறும் சித்தூர் மக்கள் கொங்கன் படை கொண்டாடி வருகின்றனர். இது சித்தூரின் தேசிய திருவிழாவாகும். அம்பாட்டு தரவாடு, தச்சாட்டு தரவாடு, சம்பத்து தரவாடு, எழுபத்து தரவாடு, பொறயத்து தரவாடு போன்றவை சிற்றூரில் உள்ள வரலாற்றுப் புகழ் மிக்க தரவாடுகளாகும். இந்த தரவாடுகளில் உள்ள பெரியவர்களும் ஊர்மக்களும் சேர்ந்துதான் கொங்கன் படையை இன்றளவும் நடத்திவருகின்றனர். கேரளாவின் ஒரே ஒரு ரணோல்சவமாகும் சித்தூர் கொங்கன் படை.

சித்தூரின் பசுமை வளத்தைக் கட்டிக்காப்பதில் சோகநாஷினி நதிக்கு மிக முக்கிய பங்கு உண்டு. இந்நதிக்கரையில் தான் மலையாள மொழியின் தந்தையான திரு.இராமானுஜன் எழுத்தச்சனின் நினைவிடமான துஞ்சன் மடம் அமைந்துள்ளது. இது மிக முக்கியத்துவம் நிறைந்த ஒரு வரலாற்றுச் சின்னம் ஆகும். துஞ்சன் மடத்தைப் பற்றி கூடுதல் தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோர் இவ்விடத்திற்கு வருவதுண்டு. வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த மற்றொரு இடமாகும் துஞ்சன் நினைவு நூலகம். இந்த நூலகத்தின் சுவர்களில் கொங்கன் படையோடு தொடர்புடைய படங்கள் வரைந்து அழகுபடுத்தப்பட்டுள்ளது. திரு பைஜூ தேவ் அவர்களுடைய தலைமையில் தான் இந்த படங்கள் வரையப்பட்டுள்ளது. இது ஓய்வு நேரங்களை பயனுள்ள தாக்குவதோடு வரலாற்றுச் சிந்தனையைத் தூண்டவும் வழிகோலுகின்றது. சித்தூர் மக்களின் அரசுத் தேவைகளை நிறைவு செய்ய கச்சேரி மேட்டில் மினி சிவில் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது. இது சித்தூரின் பெருமையை இன்னும் கூட்டுகிறது.

சித்தூர் அரசுக் கல்லூரியைப் பற்றி அறியாதவர் யாருமே இருக்க மாட்டார்கள். விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ள சித்தூரின் இளைய தலைமுறையினரை கல்வியின் உச்சிக்கு கைப்பிடித்து உயர்த்துவதில் சித்தூர் அரசு கல்லூரிக்கு முக்கிய பங்கு உண்டு.
     இச்சிறப்புகள் அனைத்தும் நிறைந்த சித்தூரின் இதயப் பகுதியில் தான் நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது.    


ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்
21302-schoolphoto.jpg
വിലാസം
சித்தூர்

அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம்
,
678101
സ്ഥാപിതം1961
വിവരങ്ങൾ
ഫോൺ04922221095
ഇമെയിൽgvlpschittur@gmail.com
വെബ്‍സൈറ്റ്
കോഡുകൾ
സ്കൂൾ കോഡ്21302 (സമേതം)
വിദ്യാഭ്യാസ ഭരണസംവിധാനം
റവന്യൂ ജില്ലபாலக்காடு
വിദ്യാഭ്യാസ ജില്ല பாலக்காடு
സ്കൂൾ ഭരണ വിഭാഗം
സ്കൂൾ വിഭാഗംபொதுக் கல்வி
പഠന വിഭാഗങ്ങൾ
എൽ.പി

യു.പി
മാദ്ധ്യമംதமிழ், மலயாளம்
സ്കൂൾ നേതൃത്വം
പ്രധാന അദ്ധ്യാപകൻ
അവസാനം തിരുത്തിയത്
14-07-202021302


പ്രോജക്ടുകൾ
തിരികെ വിദ്യാലയത്തിലേക്ക്
എന്റെ ഗ്രാമം
നാടോടി വിജ്ഞാനകോശം
സ്കൂൾ പത്രം
അക്ഷരവൃക്ഷം
ഓർമ്മക്കുറിപ്പുകൾ
എന്റെ വിദ്യാലയം
Say No To Drugs Campaign
ഹൈടെക് വിദ്യാലയം
കുഞ്ഞെഴുത്തുകൾ


21302gvlps.jpg
சித்தூர் தத்தமங்கலம் நகரசபையின் முக்கிய இடத்தில் அதாவது அணிக்கோடுக்கு அருகில் அரசு விக்டோரியா பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இரண்டு வார்டுகள் (வால்முட்டி, கிழக்கேத்தரை) எல்லைகளாக உள்ள இந்தப் பள்ளிக்கூடம் 1930 ல் நிறுவப்பட்டது.


தலைமை ஆசிரியை

எங்களுடைய இந்த சிறிய ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் பணிபுரியக்கூடிய ஒவ்வொருவரும் இப்பள்ளிக்கூடத்தை உயிரினும் மேலாக நேசிக்கின்றனர். இதன் வளர்ச்சிக்காக இரவு, பகல் பாராமல் உழைக்கின்றனர் என்றால் அது மிகையல்ல. இதன் சிறப்புக்கு முன்னாள் மாணவர்களுடையவும், ஆசிரியர்களுடையவும் ஆசிர்வாதம் உறுதுணையாகிறது. இங்கு பணிபுரிகின்ற ஒவ்வொருவருக்கும் இந்த எண்ணம் அனுபவித்து அறிய முடிகின்றது. ஒவ்வொரு வருடமும் கலை, விளையாட்டு, கைவண்ணம், அறிவியல், கணித துறைகளில் நாம் பெறுகின்ற ஒவ்வொரு வெற்றியும் நமது ஜி. வி. எல். பி மண்ணின் பெருமையை எடுத்துரைக்கின்றது. இன்றும் அது தொடர்ந்து கொண்டிருக்கின்றது. உணவு சமைப்பவர் முதல் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வரை ஒரே குடும்பம் போலவே நாங்கள் உற வாடுகின்றோம். இதுதான் எங்களது வெற்றிக்கு காரணம். ஜி.வி.எல்.பி.எஸ். குடும்பத்திலுள்ள நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுடைய பரிபூரணமான சேவையை செய்து வருகின்றோம். இடர்கள் எத்தனை வரினும் சித்தூர் தாலுக்காவிலுள்ள மிகச்சிறந்த ஒரு ஆரம்பப் பள்ளிக் கூடமாக திகழ்கின்றது எங்களுடைய அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம்.

பைலட் பள்ளிக்கூடம்

சித்தூர் தாலுக்காவில் உள்ள ஒரே ஒரு பைலட் ஸ்கூல் ஆகும் நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம். இதனால் நமக்கு 10 மடிக்கணினியும், 4 ப்ரொஜெக்டர்களும் IT@Shool -ல் இருந்து கிடைத்துள்ளது. இவற்றை பயன்படுத்தி தான் வகுப்புச் செயல்பாடுகள் நடத்தப்படுகின்றது. இதன்மூலம் கற்க வேண்டிய பாடங்கள் அனைத்தும் குழந்தை நேரில் கண்டும், கேட்டும் கற்க முடிகிறது. கற்றல் குறைபாடுகளை நீக்க இந்த IT வகுப்புகளால் முடிகிறது. அனைத்து தரத்தில் உள்ள குழந்தைகளை கவர்வதற்கும், ஒவ்வொரு குழந்தைகளுக்கும் உள்ள செயல்பாடுகள் திட்டமிட்டு பாதுகாப்பதற்கும் முடிகின்றது. காலத்திற்கேற்ப மாணவர்களில் மாற்றங்களை ஏற்படுத்தவும், அறிவியலின் வளர்ச்சியை நல்ல முறையில் பயன்படுத்தவும் இதனால் முடிகின்றது.

வெற்றி முரசு

21302-vetrimurasu1.JPG 21302-vetrimurasu2.JPG 21302-vetrimurasu3.JPG 21302-vetrimurasu4.JPG
பாலக்காடு மாவட்ட அளவிலான தமிழ் வழி மொழிக்கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு பொதுக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக ஏற்படுத்தப்பட்ட திட்டமான தமிழ் தென்றலின் நிறைவு விழாவே வெற்றி முரசு.

எங்கள்பள்ளி மேதைகளுடன்...!

21302-prathiba04.png 21302-prathiba05.png

பொதுக்கல்வி பாதுகாப்பு வேள்வியின் பாகமாக நடத்தப்படுகின்ற எங்கள்பள்ளி மேதைகளுடன் எனும் அரசாங்கத்தின் திட்டத்தை நாங்கள் மிக மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம்....

தமிழ்தென்றல்

21302-tamilthendral3.jpg 21302-tamilthendral1.jpg 21302-tamilthendral2.jpg 21302-tamilthendral4.jpg
27.1.2020 திங்களன்று ஜி.வி.எல்.பி. பள்ளியில் தமிழ்தென்றலின் தொடக்க விழா நடந்தது. இப்பள்ளியின் முன்னாள் தமிழ்மாணவரும், இப்பள்ளியிலேயே மேனிலைப்பள்ளி முதல்வராக பணியாற்றியவரும் மலப்புறம் RDD ஆக பணி உயர்வு பெற்று ஓய்வு பெற்றவருமான திரு. K. சிவன் அவர்கள் நிகழ்வினைத் தொடங்கி வைத்தார். தமிழின் பெருமைகளைப் பற்றியும், தாய்மொழியான அனைத்து மொழிகளின் சிறப்பைப் பற்றியும் விரிவாக உரையாற்றினார். அனைவரும் அவரவர் தாய்மொழி ஏதோ அதன் வழியே கற்றுத் தேர்ந்து உயர்நிலையை அடைய வேண்டும் எனவும் அதுவே சிறந்த, எளிய வழியாகும் எனவும் சிறப்பாக கூறினார். சிறப்பு விருந்தினராக கொல்லங்கோடு BPO திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டார். அவர் தமிழின் முக்கியத்துவம் பற்றியும், தமிழ்த்தென்றலின் நோக்கம் பற்றியும் சிறப்புரையாற்றினார். 1 முதல் 4 ஆம் வகுப்பு வரையுள்ள குழந்தைகளின் பாடல், செய்யுள் மொழிதல், மற்றும் 4. C பிள்ளைகளின் விவசாயம் பற்றிய வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் இனிதே நடைபெற்றது. திருமதி. ஜெயஸ்ரீ ஆசிரியரின் நன்றி உரையுடன் தமிழ் தென்றலின் முதல் பகுதி நிறைவுபெற்றது. தொடர்ந்து பறவை ஆராய்ச்சியாளரான திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பறவைகள் பற்றிய ஒரு சிறப்பான வகுப்பினை மாணவர்களுக்காக நடத்தினார். மிகவும் பயனுள்ள வகுப்பாக இது அமைந்தது. தமிழ்தென்றல் இரு பகுதிகளாக சிறப்புடன் நடைபெற்றது.

காணொளி காண்போம் -*தமிழ்தென்றல்

அக்ஷரமுற்றம்-2019, உப மாவட்ட வினாடி வினாப் போட்டி- இரட்டை வெற்றி

21302-ak sub1.jpg 21302-ak sub2.jpg
2019- ஆம் ஆண்டின் அக்ஷரமுற்றம் உப மாவட்ட அளவிலான வினாடி வினாப் போட்டியில் நமது பள்ளியிலிருந்து இரண்டு குழந்தைகள் பங்கேற்றனர். நிரஞ்சன்.எம் எனும் மாணவன் முதலிடத்தையும், ரிது எனும் மாணவி மூன்றாம் இடத்தையும் பெற்றனர். மிகநல்ல முறையில் இவ்விரு குழந்தைகளும் பங்கேற்றனர் அக்டோபர் 12 சனிக்கிழமை ஜி.பி.யு.பி.எஸ் தத்தமங்கலத்தில் வைத்து நடைபெற்ற இப்போட்டியில் 82ற்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். இதில் முதலிடத்தையும், மூன்றாம் இடத்தையும் பெற்று நம் பள்ளிக்கு பெருமை தேடித் தந்துள்ளனர் நமது குழந்தைகள். வெற்றியாளர்களுக்குக் கிடைத்த விருதுகளும், சான்றிதழ்களும் மற்ற மாணவர்களுக்கு ஊக்கமூட்டுவதாக அமைந்தது. முதலிடத்தைப் பெற்ற நிரஞ்சன் என்னும் மாணவனுக்கு மாவட்ட அளவிலான அக்ஷரமுற்றம் வினாடி வினாப் போட்டியில் பங்கேற்பதற்கான பொன்னான வாய்ப்புக் கிடைத்தது. குழந்தைகளது முறையான பயிற்சியும், பெற்றோர்களுடையவும், ஆசிரியர்களுடையவும் உறுதுணையுமே குழந்தைகளது இந்த வெற்றிக்குக் காரணம். வெற்றி பெற்ற மாணவ, மாணவிக்கு காலைக்கூட்டத்தில் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் வழங்கப்பட்டது.

உலகச் சாதனையாளர் நமது பள்ளியில்

21302-abilash 01.jpg 21302-abilash 02.jpg 21302-abilash 04.jpg 21302-abilash 03.jpg
அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளியின் வரலாற்றில் நடந்த ஒரு வேறுபட்ட அனுபவம். எங்களது பள்ளியின் கலைச் சங்கத்தினைத் துவங்கி வைத்தது உலகச் சாதனையாளரான திரு. அபிலாஷ் புதுக்காடு என்பவராவார். இது மிக நல்ல ஒரு தருணமாக இருந்தது. இவர் புகழ்பெற்ற பின்னணிப் பாடகியான திருமதி. எஸ். ஜானகி அவர்களைப் பற்றி எழுதிய ஆலாபனத்திலே ஏதேனும் வயம்பும் என்னும் புத்தகத்தைக் குழந்தைகளுக்கு வழங்குவதற்காகவே நம் பள்ளிக்கு வருகையளித்தார். ஒரு பாடகியைப் பற்றி எழுதப்பட்ட உலகத்திலேயே மிகப் பெரிய புத்தகமாகும் இது. அதுமட்டுமல்லாமல் இப்புத்தகம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் 36க்கும் மேற்பட்ட வெகுமதிகளைப் பெற்றுள்ளது. இவர் தனது சிறுவயது அனுபவங்களைக் குழந்தைகளிடம் பகிர்ந்து கொண்டார். இப்புத்தகம் எழுதுவதற்கான முக்கிய காரணம் தன்னுடைய தாய் எனவும், ஏறத்தாழ 11 வருடங்கள் அரும்பாடுபட்டு இப்புத்தகம் முழுமையாக்கபட்டது எனவும் கூறினார். பாடகி எஸ். ஜானகி அம்மாவின் சில பாடல்கள் கேட்க குழந்தைகளுக்கு வாய்ப்புக் கிடைத்தது. இது குழந்தைகளுக்கு அளவற்ற மகிழ்ச்சியை தந்தது. புகழ்பெற்ற பாடகி பி.லீலா படித்த பள்ளிக்கூடத்திற்கு வர முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி என்றார். பாடகி எஸ். ஜானகி அம்மாவின் பாடல்கள் நிறைய கேட்க வேண்டும் என்று குழந்தைகளிடம் கூறி, தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா அவர்களுக்கு தனது புத்தகத்தை வழங்கினார். மேலும் பள்ளிக் கலைச் சங்கத்தைத் துவங்கி வைத்ததாகவும் கூறினார் திரு. அபிலாஷ் புதுக்காடு. குழந்தைகளுக்கு ஒரு நல்வழிப்பாடம் இவரது வருகையால் கிடைத்தது. பாடகி எஸ். ஜானகி கல்வி கற்றதில்லை. முறையாக சங்கீதம் கற்றதில்லை. இருந்தும் கூட அவர் உலகப் புகழ் பெற்ற பாடகியானார். இதற்குக் காரணம் அவர் சங்கீதத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். செய்யும் தொழிலை தெய்வமாக மதித்தார். பலனை எதிர்பார்க்காமல் செயலாற்றினார். எனவே நாமும் நம் செயல்களில் உண்மையாளராக இருந்தால் நமக்கும் உன்னத நிலையை அடைய முடியும். நாம் அனைவரும் எந்த செயலையும் கவனமாகவும், நுணுக்கமாகவும் செய்ய வேண்டும் எனவும் திரு.அபிலாஷ் புதுக்காடு கூறினார். இது அனைவருக்கும் மிகச்சிறந்த ஒரு அனுபவமாக இருந்தது. திருமதி. சுப்பரபா ஆசிரியை நன்றியுரை வழங்கி இச்சிறப்புத் தருணத்தை இனிதே முற்றுப்பெறச் செய்தார்.

காணொளி காண்போம் -*உலகச் சாதனையாளர் நமது பள்ளியில்

கருணை நிறைந்த குழந்தை உள்ளம்

21302-ranjan.jpg
கேரளம் எதிர்கொண்ட மிகப்பெரிய இயற்கை சீற்றமாகும் வெள்ளப்பெருக்கம். 2019-ல் வெள்ளப்பெருக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட முதலமைச்சருடைய வெள்ளப்பெருக்க நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி, ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்கியுள்ளான் நமது அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி மாணவன். முன் தொடக்கப் பள்ளியில் பயிலும் ரஞ்சன் எனும் மாணவன் தான் உண்டியலில் சேமித்து வைத்த பணம் முழுவதும் வெள்ளப்பெருக்க நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கினான். இச்செயல் பள்ளிக்கும் வரும் தலைமுறைக்கும் மிகச்சிறந்த மாதிரிச் செயல்பாடு என்று தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா அவர்கள் கூறினார். பள்ளிப் பொதுக்கூட்டத்தில் வைத்து தனது உண்டியலை ரஞ்சன் தலைமையாசிரியைக்கு வழங்கினான். இந்த மகத்தான தருணத்தில் அனைத்து குழந்தைகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் பங்கு சேர்ந்தனர்.

எல்.எஸ்.எஸ் வெற்றி

21302-lss2019-1.jpg
அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளியின் வெற்றிகளில் எடுத்துச் சொல்ல வேண்டிய ஒன்றாகும் வருடந்தோறும் அதிகரித்து வரும் எல்.எஸ்.எஸ் குழந்தைகளின் எண்ணிக்கை. ஒவ்வொரு வருடமும் சிறப்பான வெற்றிகளை குவித்து வருகின்றனர் இங்குள்ள குழந்தைகள். 2018 - 19 கல்வி ஆண்டில் நமது பள்ளியில் ஸ்ரீயா. எஸ், ஆராமிகா. ஆர், சனிகா. எஸ், வைகப்பிரபா. கெ.எ, சூர்யா சுனில்குமார். எஸ், சிவானி. ஆர் என்னும் ஆறு குழந்தைகள் எல்.எஸ்.எஸ் பெற்றனர். நம் பள்ளியை சித்தூர் தாலூக்காவிலேயே அதிக எல்.எஸ்.எஸ் பெற்ற பள்ளிகளில் ஒன்றாக திகழச் செய்தது இந்த அழிவுக் கதிர்களே. எல்.எஸ்.எஸ்ஸிற்கு பள்ளியில் மிக முக்கியத்துவம் அளிப்பதுண்டு. ஆசிரியர்களுடையவும், குழந்தைகளுடையவும் கடின உழைப்பே ஒவ்வொரு வருடமும் கூடுதல் குழந்தைகள் எல்.எஸ்.எஸ் பெறுகின்றனர் என அறிந்துகொள்ள முடியும். தேர்வு எழுதும் குழந்தைகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்பது அவர்களின் தன்னம்பிக்கையும், உறுதியும் அதிகரிக்கிறது. நம் பள்ளியின் எல்.எஸ்.எஸ் வெற்றிச் சரித்திரத்தின் அடிப்படை இங்கிருந்து குழந்தைகளுக்கு அளித்து வருகின்ற ஒழுங்கான பயிற்சியாகும். ஒவ்வொரு வருடமும் கற்றல் முறையில் ஏற்படுத்துகின்ற மாற்றங்கள் குழந்தைகளின் வெற்றி சதவீதத்தை அதிகரிக்கிறது என்பது ஆச்சரியத்திற்குரியதாகும். பள்ளியில் எல்.எஸ்.எஸ்ஸிற்கு அளித்து வருகின்ற முறையான பயிற்சியைக் கண்டு ஏராளமான குழந்தைகள் இங்கு வந்து சேர்கின்றனர். எங்களது பள்ளியில் எல்.எஸ்.எஸ் பயிற்சி அளிப்பது திரு. பவில்தாஸ் ஆசிரியராவார்.

பள்ளியோடு நின்றுவிடுவதில்லை ஆசிரியர் மாணவர் தொடர்பு...

21302-hv01.jpg 21302-hv02.jpg 21302-hv03.jpg 21302-hv04.jpg
எங்களது குழந்தைகளை முழுமையாக புரிந்து கொண்டு, அவர்களது தனித் திறமைகளைக் கண்டறிந்து, அதனை வெளிக் கொணர்ந்து, அவர்களை வெற்றிப் பாதையில் வழிநடத்துவதே அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் முக்கிய பணியாகும். வெறும் பள்ளியோடும், வகுப்பறையோடும் நின்றுவிடாமல் ஒவ்வொரு குழந்தையிலும் ஆழ்ந்து செல்ல வேண்டும் என்னும் நோக்கத்தோடு பிப்ரவரி மாதத்தில் குழந்தைகளின் வீடுகளுக்குச் செல்லப்பட்டது. அனைத்து ஆசிரியர்களும் பல குழுக்களாகப் பிரிந்து, இடங்களை தேர்வு செய்து இந்த நற்செயல் நடத்தப்பட்டது. ஒவ்வொரு குழந்தையும் வாழ்கின்ற சூழ்நிலை, குடும்பச் சூழல், சமூக நிலை போன்றவற்றை மிக நுணுக்கமாக ஆராய்ந்து அவர்களை முன்னேற்றத்திற்கான வழியில் கொண்டு செல்வதற்கான செயல்பாடுகளை நாங்கள் திட்டமிட்டு நடத்தி வருகின்றோம். பள்ளியிலும், வகுப்பறையிலும் நாம் பார்க்கின்ற குழந்தைகள் அல்ல ஒவ்வொரு வீடுகளிலும் நாம் காண்பது. ஒவ்வொரு குழந்தையையும் நாம் முழுமையாகத் தெரிந்துகொள்ள அவர்களது வீட்டு சூழ்நிலை தெரிந்து கொள்வது மிக அவசியமாகும். பள்ளியில் உள்ள அனைத்து குழந்தைகளின் வீடுகளுக்கும் சென்று நாங்கள் விசாரிப்பதுண்டு. ஒவ்வொரு வருடமும் இந்த செயல்பாடு நல்ல முறையில் ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே ஒரு சிறந்த பாசப்பிணைப்பு உண்டாகிறது. இது ஒவ்வொரு குழந்தையும் புரிந்து கற்பிக்க ஆசிரியர்களுக்கு பெரிதும் துணை புரிகிறது.

எனது செய்தித்தாள்

21302-entepathram.jpg
நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கு தேசாபிமானி செய்தித்தாள் வர வைப்பதற்கான எனது செய்தித்தாள் என்னும் திட்டம் ஆகஸ்ட் 21 ஆம் நாள் சி.பி.எம் வட்டாரச் செயலாளர் திரு. சிவப்பிரகாஷ் அவர்கள் பள்ளி மாணவர் தலைவனுக்கு செய்தித்தாள் வழங்கித் துவங்கி வைத்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும், கெ.எஸ்.டி.எவும் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

மதுரம் மலையாளம்

21302-mathuram.jpg
நமது பள்ளியில் ஜயின்ட்ஸ் சங்கத்தினரின் தலைமையில் மதுரம் மலையாளம் திட்டம் துவங்கப்பட்டது. பள்ளிக்கு தினந்தோறும் 5 மாத்ருபூமி செய்தித்தாள்கள் வழங்குதல் என்பதுவே இத்திட்டத்தின் நோக்கமாகும். ஆகஸ்ட் 22 ஆம் நாள் மதிப்பிற்குரிய சித்தூர் தத்தமங்கலம் நகரசபை தலைவர் திரு. மது அவர்கள் இத்திட்டத்தினைத் துவங்கி வைத்தார்.சித்தூர் ஜயின்ட்ஸ் சங்க அங்கத்தினர்களும் இந்த நல்ல தருணத்தில் பங்கெடுத்தனர். பள்ளியில் உள்ள மொத்த குழந்தைகளின் சார்பாக நான்காம் வகுப்பில் உள்ள ஐந்து மாணவர்கள் செய்தித்தாள்களை பெற்றுக்கொண்டு மதுரம் மலையாளம் திட்டத்தை மனமார வாழ்த்தி வரவேற்றனர்.

சந்திரயான்-2 நேரடி ஒளிபரப்பு

21302-chandrayan01.jpg 21302-chandrayan02.jpg 21302-chandrayan03.jpg 21302-chandrayan04.jpg
இந்தியாவின் இரண்டாவது வரலாற்றுச் சாதனை மனிதன் சந்திரனில் கால் வைத்து அரை நூற்றாண்டாகும் இவ்வேளையில் இந்தியா சந்திரனுக்குள்ள இரண்டாவது பயணத்திற்குத் தயாராகிறது. 2019 ஜூலை 22-ஆம் நாள் மதியம் 2 : 43 மணிக்கு பாகுபலி என்னும் பெயரில் அறியப்படும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து வானில் பறந்து யரும் வேளையில் நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.கணினி சோதனைச்சாலையில் மாணாக்கர்களின் மகிழ்ச்சி அலையடித்தது. புரொஜக்டரின் உதவியுடன் ராக்கெட் ஏவுதல் நேரடி ஒளிபரப்பாக குழந்தைகளுக்குக் காண்பித்து நாட்டின் முன்னேற்றத்தை கண்டறிய வாய்ப்பளிக்கப்பட்டது. நவீன தொழில்நுட்ப ஆதிக்கம் கல்வித்துறையில் ஏற்படுத்திய மாற்றத்திற்கு இது ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். இச்செயல்பாட்டின் மூலம் ஐ.எஸ்.ஆர்.ஓ, ஜி.எஸ்.எல்.வி போன்றவற்றை பற்றி மாணவர்களுக்கு தெரிந்து கொள்ள முடிந்தது.


பள்ளியின் மாதிரி பெற்றோர்கள்

21302-gift1.jpg 21302-gift3.jpg 21302-gift4.jpg 21302-gift5.jpg
நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூட முன்னேற்றத்தில் பெற்றோர்களுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு. குழந்தைகளுடையவும், பள்ளியினுடையவும் முன்னேற்றத்திற்காக இவர் பெரிதும் செயலாற்றி வருகின்றனர். இந்த வருடத்தில் படிக்கின்ற சில ஏழை மாணவர்களுக்கு புத்தகப் பையும் நோட்டுப் புத்தகங்களும் வழங்கி பள்ளிக்கூடத்திற்கே மாதிரியாகத் திகழ்கிறார் திரு. அப்துல் சலீம் என்னும் பெற்றோர்.முன் துவக்கப்பள்ளி முதல் நான்காம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் இருந்து ஏழ்மையான குழந்தைகளை தேர்ந்தெடுத்து இச்சேவை செய்யப்பட்டது. வரும் வருடங்களிலும் இந்த சேவை தொடரும் என்று இவர் வாக்குறுதி அளித்துள்ளார். திரு. அப்துல் சலீம் அவர்களே நேராக வந்து குழந்தைகளுக்கு புத்தகப்பையும், நோட்டுப் புத்தகங்களும் வழங்கினார். இவரது சேவை மனப்பான்மைக்கு தலைமை ஆசிரியரான திருமதி. ஷைலஜா ஆசிரியர், அனைத்து ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் நன்றி செலுத்தினோம்.

எதிர்காலத்தின் மாதிரி மாணவர்கள்

21302-boat.jpg
அரசு விக்டோரியா ஆரம்ப பள்ளியில் நான்காம் வகுப்பிலிருந்து தேர்ச்சி பெற்றுச் சென்ற தருண்கிருஷ்ணா என்னும் மாணவன் பள்ளிக்கு ஒரு கப்பலின் மாதிரியையும், பள்ளி நூலகத்திற்குப் புத்தகங்களும் வழங்கி மாணவர்கள் அனைவருக்கும் மாதிரியாக விளங்கினான். படித்துச் சென்ற பள்ளிக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை மிக நல்லதாகும். எதிர்காலத் தலைமுறையினரும் இதனை சிறந்த மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும் என தலைமை ஆசிரியை திருமதி. ஷைலஜா அவர்கள் கூறினார். புத்தகங்களும், கப்பலின் மாதிரியையும் ஏற்று வாங்கியது தலைமையாசிரியரே. தருண்கிருஷ்ணாவின் இந்த குணம் மற்ற குழந்தைகளையும் வியப்படையச் செய்தது. இனி உள்ள வாழ்விலும் இந்த நல்ல மனப்பான்மை தொடர வேண்டும் என்று ஆசிரியர்களும், பெற்றோர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து தருணைப் பாராட்டி மகிழ்ந்தனர்.

நண்பர் கூட்டம்

21302-ck1.jpg 21302-ck2.jpg 21302-ck4.jpg 21302-ck5.jpg
அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் படிக்கின்ற செரிப்ரல் பாள்ஸி எனும் நோயினால் பாதிக்கப்பட்ட சாந்த்ரா.எஸ் என்னும் குழந்தைக்காக பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி தேதி நண்பர் கூட்டம் என்னும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சாந்த்ராவை வரவேற்க பள்ளியில் உள்ள அனைத்து குழந்தைகளும் தயாராக இருந்தனர். பெற்றோருடன் சேர்ந்து வந்த சாந்த்ராவை பூச்செண்டுகள் கொடுத்து பள்ளி குழந்தைகள் வரவேற்றனர். அனைத்து குழந்தைகளும் மிக உற்சாகத்துடன் பல நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டனர். பள்ளியில் உள்ள ஊனமுற்ற குழந்தைகளை உட்படுத்தி நடத்தப்பட்ட காலைக்கூட்டம் அனைவருக்கும் மிகச்சிறந்த ஒரு அனுபவத்தைத் தந்தது. மேலும் எல்லா குழந்தைகளும் சேர்ந்து சாந்த்ராவை ஊர்வலமாக வகுப்பிற்கு அழைத்துச் சென்றனர். ஆசிரியர்கள் அனைவரும் சந்த்ராக் குட்டியை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். எல்லா வகுப்பிலிருந்தும் குழந்தைகள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். பாட்டுப் பாடியும், நடனமாடியும், விளையாடியும் மகிழ்ச்சி நிறைந்த ஒரு அற்புத உலகத்திற்கு குழந்தைகள் அனைவரும் சாந்த்ராவை அழைத்துச் சென்றனர். அவள் மிக மகிழ்ச்சியுடன் இருந்தாள். பள்ளியிலுள்ள நண்பர்கள் அனைவரும் சேர்ந்து சாந்த்ராவிற்காக உருவாக்கிய நண்பர் கூட்டம் என்னும் நிகழ்ச்சி மிகப்பெரும் வெற்றியை தந்தது. அனைவராலும் ஒதுக்கப்படுகின்ற ஊனமுற்ற குழந்தைகளுக்கு இவ்வளவு அதிக முக்கியத்துவம் கொடுத்து சிறப்பான நிகழ்ச்சியை உருவாக்கியதற்கு சந்திராவின் பெற்றோர்கள் மிகவும் சந்தோஷத்துடன் மனம் திறந்து அனைத்து குழந்தைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
காணொளி காண்போம் -*நண்பர் கூட்டம் 

கற்றல் திருவிழா - பிரதிபா சங்கமம் 2019...!

21302-padanothsavam.jpg 21302-padanothsavam 1.jpg 21302-padanathsavam 2.jpg
புதுப்பள்ளி பாதுகாப்பு வேள்வியின் பாகமாக உருவாக்கப்பட்டதே கற்றல் திருவிழாக்கள். 2019 ஜனவரி 26 முதல் பள்ளி நுழைவு திருவிழா வரை நீண்டு நிற்கின்ற ஒரு நிகழ்ச்சி ஆகும் இது. அரசு ஆரம்பப் பள்ளி சித்தூரின் முதல் கற்றல் திருவிழாவே சிறப்பான வெற்றியை தந்தது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். இத்திருவிழாவில் மூன்றாம் வகுப்பில் படிக்கும் தயாளன் என்னும் மாணவனது ஆங்கிலப் பேச்சு மிக மிக சிறப்பானதாக இருந்தது. Cleanliness என்னும் தலைப்பில் மிக அருமையாகப் பேசினான். இது பார்வையாளர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது என்பது தான் உண்மை. ஆங்கில மொழிக் கல்வியின் சிறப்பை இந்த மூன்றாம் வகுப்பு மாணவனின் பேச்சின் மூலம் நமக்கு புரிந்து கொள்ள முடியும். பொது கல்விக் கூடங்கள் சிறப்பாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக விளங்குகிறது இக்குழந்தையின் பேச்சாற்றல். பார்வையாளர்களில் ஒருவரான அரசு ஆரம்ப பள்ளி சள்ளையின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் இந்த பேச்சாற்றலைக் கண்டு வியந்து, அவனது பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் புகழ்ந்து பாராட்டினார். எதிர்காலத்தில் வெற்றியின் உச்சியை தயாளன் அடையட்டும் என ஆசிர்வதித்து ஒரு பரிசு வழங்கவும் செய்தார். எங்களது கற்றல் திருவிழாவிற்கு இவ்வளவு சிறப்பான ஒரு பலன் கிடைக்கும் என்று யாருமே நினைக்கவில்லை. எனவே எல்லா ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் உறுப்பினர்களும், பெற்றோர்களும் பார்வையாளர்களும் மகிழ்ச்சிப் பெருங்கடலில் மூழ்கினர். ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் ஒரு உறைவிடம் உண்டு என்பது சத்தியமாகும். அதுபோல இப்பள்ளியின் ஒவ்வொரு வெற்றிக்கும் காரணம் இங்கு பயிலும் மாணவர்களே. ஒவ்வொரு குழந்தைகளும் பல்வேறு துறைகளில் திறமை வாய்ந்தவர்களே என்பது இன்னொரு சிறப்பம்சம் ஆகும் என்று நம் அனைவராலும் புரிந்துகொள்ள முடியும்.
ஒரு கண்ணோட்டம் - * பிரதிபா சங்கமம் 2019 

கற்றல் திருவிழா - 2

21302-padanathsavam2-1.jpg 21302-padanathsavam2-2.jpg 21302-padanathsavam2-3.jpg 21302-padanathsavam2-5.jpg
அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி சித்தூரின் இரண்டாவது கற்றல் திருவிழா சித்தூர் காவிற்கு அருகாமையில் உள்ள கிராம அலுவலகத்திற்கு முன் நடத்தப்பட்டது. கற்றல் திருவிழாவில் குழந்தைகளுடைய கற்றல் செயல்பாடுகளின் மேன்மை பொதுமக்களின் முன்னிலையில் காண்பிக்கப்பட்டது. சித்தூர் தத்தமங்கலம் நகரசபை கவுன்சிலர் இத்திருவிழாவை தொடங்கி வைத்தார். பொம்மலாட்டம், நாடகங்கள், நாட்டுப்புறப் பாடல், கவிதை சொல்லுதல், பேச்சுப்போட்டி போன்ற கலை நிகழ்ச்சிகளை குழந்தைகள் நிகழ்த்தினார். இரண்டாவது திருவிழாவில் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் அனைவரையும் கவர்ந்தது. குழந்தைகளின் செண்டை மேளம் மிக சிறப்பாகவே இருந்தது.
21302-padanathsavam2-6.jpg 21302-padanathsavam2-7.jpg 21302-padanathsavam2-8.jpg 21302-padanathsavam2-9.jpg

எங்களது குட்டி செஸ் சாம்பியனை அறிந்து கொள்வோம்

நான் தான் வைகப்பிரபா. க.அ

செயல் திட்டங்கள்

இதர செயல்பாட்டுக் குழுக்கள்

சங்கங்கள்

முந்தைய தலைமை ஆசிரியர்கள்

  • திரு.வி.ராஜன்
  • திரு.டி.சி. தாமஸ்
  • திருமதி.ஷம்சத் பேகம்
  • திருமதி.க.ப.விஜயகுமாரி
  • திருமதி.ஜி.அம்பிகா
  • திருமதி.நளினி சி.ஐ

பிரபலமான முன்னாள் மாணவர்கள்


* திருமதி.பி.லீலா (பாடகி) * திருமதி.சாந்தா தனஞ்செயன் (பிரபல பரத நாட்டியக் கலைஞர்) * திரு.ஜான்பால் (பிரபல திரைக்கதை எழுத்தாளர்) * திருமதி.ராதா லட்சுமி பத்மராஜன் (பிரபல எழுத்தாளர் திரு பத்மராஜன் அவர்களுடைய மனைவி) * திரு.ஹரிசாத்ந் சரண் (நடிகர்)


  • திருமதி.மானசி பாய் (முன் Additional DPI)
  • டாக்டர் லதா வர்மா
  • திரு.கே.சிவன் (ஓய்வுபெற்ற ஆர்.டி.டி)

காணொளி பள்ளியில் நடத்தப்பட்ட செயல்பாடுகளும்,தினக்கொண்டாட்டங்களும்

படைப்புகள்- குழந்தைகளுடையவும்,ஆசிரியர்களுடையவும்

வழிகாட்டி

சித்தூர் நகரத்தின் இதயப்பகுதியான அணிக்கோட்டிலிருந்து தபால் நிலையம் சாலை வழியாக அரைக் கிலோமீட்டர் நடந்தால் வலதுபுறம் காணப்படும் அரசு விக்டோரியா பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு பின்புறத்தில் தான் நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது.

Loading map...