ഗവണ്മെന്റ് ഹൈസ്ക്കൂൾ പാറത്തോട്/അക്ഷരവൃക്ഷം/கொரோனா வைரஸ்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
19:49, 5 മേയ് 2020-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- 30085 (സംവാദം | സംഭാവനകൾ) ('{{BoxTop1 | തലക്കെട്ട്= <font size=6> <u>'''கொரோனா வைரஸ்'''</u></font> <!--...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു)
கொரோனா வைரஸ்

உள்ளடக்கம்

முன்னுரை

கொரோனா வைரஸ்

நோயின் அறிகுறிகள்

கொரோனா பரவும் விதம் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள்

சிகிட்சை

முடிவுரை

முன்னுரை

விலங்குகளிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் பரவியது. பின்னர் அனைத்து நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது. இதன் காரணமாக மக்கள் ஆயிரத்திற்கும் மேலானோர் உயிர் இழந்தனர். இந்த கொரோனாவை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கைகள் கீழ்காணும் கட்டுரையில் காணலாம்.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்தினறல் ஆகியவற்றை ஏற்படுத்த கூடிய ஒரு வகை கிருமியாகும். சீனாவின் வூதான் நகரத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

நோயின் அறிகுறிகள்

  • காய்ச்சல்
  • இருமல் மற்றும் சளி
  • உடல் சோர்வு
  • ஒரு சிலருக்கு மூச்சுத்தினறல் ஏற்படும்.

கொரோனா வைரஸ் நோய் பரவும் விதம்

  • நோய் அறிகுறிகள் கண்ட நபர் இருமும் போதும் தும்மும் போதும் வெளிப்படும் நீர்த் திவலைகள் மூலம் நேரடியாக பரவுகிறது.
  • இருமல் மற்றும் தும்மல் மூலம் வெளிப்படும் கிருமிகளை உடைய நீர்த்திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும் பொழுது கைகள் மூலமாகவும் பரவுகிறது.

நோய் தடுப்பு நடவடிக்கைகள்

  • தினமும் 10 முதல் 15 முறை சோப்பு போட்டு, நன்கு தேய்த்து கழுவ வேண்டும்.
  • இருமும் போதும் தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கை குட்டை கொண்டு மூடிக் கொள்ள வேண்டும்.
  • சிகிச்சை தரும் அனைத்து மருத்துவமனைகளிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தமாக துடைத்து பராமரித்தல் வேண்டும்.

சிகிச்சை

  • சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனே அருகிலுள்ள மருத்துவரை பார்க்கவும்.
  • இளநீர், ஓ.ஆர்.எஸ், கஞ்சி போன்ற நீர்ச்சத்து மிகுந்த ஆகாரங்களை பருகுதல் வேண்டும்.

முடிவுரை

கொரோனா வைரஸ் தடுப்பதற்காக அரசால் முடிந்த உதவிகளை அரசு செய்து கொண்டுவருகிறது. மக்களால் முடிந்த உதவி என்பது வீட்டிற்கு உள்ளே இருப்பது, இடைவெளி விட்டு நடப்பது மற்றும் 30 வினாடிக்கு ஒருமுறை கைகளை நன்றாக சோப்பிட்டு கழுவவும். இதுவே கொரோனா வைரஸை அழிக்கும் ஒரே உதவியாகும்.

நாம் உள்ளே..... கொரோனா வெளியே.....


ப்ரியா. பெ
X A [[|ജി.എച്ച്.എസ്, പാറത്തോട്]]
നെടുംകണ്ടം ഉപജില്ല
ഇടുക്കി
അക്ഷരവൃക്ഷം പദ്ധതി, 2020
ലേഖനം