"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2023-24" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 118: വരി 118:
மலையான வருடப்பிறப்பான சிங்ஙம் 1, உழவர் தினமாக அனுசரிக்கப்பட்டது. விவசாயிகளான கங்காதரன், அவரது மகன் சுகதன், பள்ளி மாணவியின் பாட்டி வள்ளியம்மை ஆகியோர்கள் கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை டி. ஜெயலட்சுமி வரவேற்புரை வழங்கினார். வள்ளியம்மா குழந்தைகளுக்கு நாட்டுப்புற பாடலைப் பாடி கொடுத்தார். பள்ளியின் சமையற்காரரான இரமாவிற்கு கங்காதரன் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். ஆசிரியை ஹேமாம்பிகா அறுவடை பாடலை குழந்தைகளுடன் இணைந்து பாடினார். இந்நிகழ்ச்சிக்கு ஆசிரியை சுனிதா நன்றியுரை கூறினார்.
மலையான வருடப்பிறப்பான சிங்ஙம் 1, உழவர் தினமாக அனுசரிக்கப்பட்டது. விவசாயிகளான கங்காதரன், அவரது மகன் சுகதன், பள்ளி மாணவியின் பாட்டி வள்ளியம்மை ஆகியோர்கள் கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை டி. ஜெயலட்சுமி வரவேற்புரை வழங்கினார். வள்ளியம்மா குழந்தைகளுக்கு நாட்டுப்புற பாடலைப் பாடி கொடுத்தார். பள்ளியின் சமையற்காரரான இரமாவிற்கு கங்காதரன் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். ஆசிரியை ஹேமாம்பிகா அறுவடை பாடலை குழந்தைகளுடன் இணைந்து பாடினார். இந்நிகழ்ச்சிக்கு ஆசிரியை சுனிதா நன்றியுரை கூறினார்.
* வீடியோவைப் பார்ப்போம் -  [https://www.youtube.com/watch?v=Tdhm40AY5Cc '''விவசாயிகள் தினம்- 2023''']
* வீடியோவைப் பார்ப்போம் -  [https://www.youtube.com/watch?v=Tdhm40AY5Cc '''விவசாயிகள் தினம்- 2023''']
===ஓணவிழாவும் ஓணவிருந்தும்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-onam23 1.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-onam23 2.jpg|200px]]
|-
|}
ஓணத் தேர்வு முடிந்து ஆகஸ்ட் 25ஆம் தேதி ஓணவிழா கொண்டாடப்பட்டது. முன் தொடக்கப் பள்ளி முதல் நான்காம் வகுப்பு வரையிலான குழந்தைகள் இக்கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். பள்ளி வளாகத்தில், குழந்தைகள் பூக்கோலமிட்டனர். வாமனன் மற்றும் மகாபலி வேடமணிந்து குழந்தைகள் ஓணக் கொண்டாட்டத்தை சிறப்பித்தனர். புலி வேடமணிந்த குழந்தைகள் செண்டை மேளத்துடன் புலியாட்டம் ஆடினர். குழந்தைகள் ஓணப்பாடல், உரை, குழுப்பாடல், திருவாதிரை போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினர். குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் நாற்காலி விளையாட்டு நடத்தப்பட்டது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து ஓணவிருந்து (ஓண சத்யா) தயாரித்தனர்.
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=GjDQO1lFnJ4 '''ஓணவிழா - 2023''']
==செப்டம்பர்==
===ஆசிரியர் தினம்===
செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. காலைக் கூட்டத்தில் குழந்தைகள் ஆசிரியர் தினம் தொடர்பான உரை மற்றும் கவிதைகளை கூறினர். தலைமையாசிரியை ஜெயலட்சுமிக்கு குழந்தைகள் மலர் பூச்செண்டுகள் வழங்கினர். ஆசிரியர் தினத்தின் முக்கியத்துவம் குறித்து தலைமையாசிரியர் குழந்தைகளுக்கு விளக்கினார். ஒவ்வொரு குழந்தைகளும் தங்கள் வகுப்பு ஆசிரியருக்கு மலர்கள் மற்றும் சுயமாக உருவாக்கிய வாழ்த்து அட்டைகளை வழங்கினர். குழந்தைகள் ஆசிரியர் தினத்திற்கான பதிப்புகளை உருவாக்கினர்.
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=OLB5zIDIkZ4 '''ஆசிரியர் தினம் - 2023''']
===வகுப்பு PTA===
12.09.2023 அன்று மதியம் 2 மணிக்கு ஓணத் தேர்வில் குழந்தைகளின் தரம் குறித்து கலைந்துரையாட வகுப்புதல பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் நடத்தப்பட்டது.
===பள்ளி தேர்தல்===
14-09-2023 அன்று பள்ளித் தேர்தல் ஜனநாயக முறையில் நடத்தப்பட்டது. போட்டியிடும் மாணவர்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அறிவிப்பு கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு விருப்பமான சின்னங்களில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. மொபைல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் குழந்தைகள் வாக்களித்தனர். வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டது. குழந்தைகளே தேர்தல் அதிகாரிகளாக அமர்ந்து தேர்தலை நடத்தினர். வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வகுப்புத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்கள் பள்ளித் தலைவர் தேர்தலில் போட்டியிட்டனர். பள்ளித் தலைவர் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று 4 A வகுப்பில் பயிலும் Abin B பள்ளித் தலைவராகவும் அதே வகுப்பில் பயிலும் அகிலா எம் ஏ துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பள்ளிக் காலைக் கூட்டத்தில் இருவரும் பதவிப் பிரமாணம் செய்து பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=UHBLv1JuSvk '''பள்ளி தேர்தல் - 2023''']
===பள்ளி விளையாட்டு விழா - 2023===
19.09.2023 அன்று பள்ளி அளவிலான விளையாட்டுப் போட்டிகள்  நடத்தப்பட்டது. துவக்கப்பள்ளி மினி பிரிவு குழந்தைகளுக்கான 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், ஸ்டுட் ஜம்ப் மற்றும் தொடர் ஓட்டப் போட்டிகளும், துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கான 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் மற்றும் தொடர் ஓட்டப் போட்டிகளும் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற குழந்தைகளை துணை மாவட்ட போட்டிகளுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=GzPe9smW0KU '''பள்ளி விளையாட்டு விழா - 2023''']
===அறிவியல், சமூக அறிவியல், கணிதம், கைவேலை கண்காட்சி===
செப்டம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் பள்ளி அளவிலான அறிவியல், சமூக அறிவியல், கணிதம் மற்றும் கைவேலை பிரிவுகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. சாக்பீஸ் தயாரித்தல், ஊதுபத்தி தயாரித்தல், பாசியில் (மணி) ஆபரணங்கள் தயாரித்தல், களிமண் உருவம் தயாரித்தல், கழிவுப் பொருட்கள் வைத்து உபயோகமுள்ள பொருட்கள் தயாரித்தல், மூங்கில் பொருட்கள் தயாரிப்பு, ஃபேப்ரிக் பெயின்ட்டிங், காய்கறி அச்சு (பிரிண்ட்டிங்), காகிதப்பூக்கள் தயாரிப்பு (பேப்பர் கிராஃப்ட்), வாலிபால் வலை தயாரித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ்களும் துணை மாவட்ட அளவில் பங்கேற்பதற்கான வாய்ப்பும் கிடைத்தது.
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=CSJazUt5hag '''அறிவியல், சமூக அறிவியல், கணிதம், கைவேலை கண்காட்சி - 2023''']
===பள்ளிக் கலைவிழா - 2023===
பள்ளி அளவிலான கலை விழா செப்டம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. குழந்தைகள் பரதநாட்டியம், கர்நாடக இசை, மெல்லிசை, கவிதை மொழிதல், மாப்பிள்ளைபாட்டு, கதைசொல்லுதல், சைகைப் பாடல், ஆங்கிலக் கவிதை சொல்லுதல், தனியாள் நடிப்பு, நாட்டுப்புற நடனம், தேசபக்தி பாடல், குழு நடனம் போன்ற போட்டிகளில் கலந்து கொண்டனர். இரண்டாம் நாள் தமிழ் கலை விழா நடைபெற்றது. திருக்குறள் ஒப்புவித்தல், கதை சொல்லுதல், கவிதை சொல்லுதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. தரத்தை நிர்ணயிக்கவும் வெற்றியாளர்களைத் தீர்மானிக்கவும் வெளிப்புற நடுவர்கள் வரவழைக்கப்பட்டனர். வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ்களும் துணை மாவட்டக் கலைவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்தது.
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=IfPeiBFfjcg '''பள்ளிக் கலைவிழா - 2023''']