സെന്റ് പോൾസ്.എച്ച്.എസ്. കൊഴിഞ്ഞാംപാറ/தமிழ் விக்கி/ജൂനിയർ റെഡ് ക്രോസ്

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
2021-22 ലെ സ്കൂൾവിക്കി പുരസ്കാരം നേടുന്നതിനായി മൽസരിച്ച വിദ്യാലയം.

தூய சின்னப்பர் உயர்நிலைப் பள்ளியில் செஞ்சிலுவை சங்கம் ( ஜூனியர் ரெட் கிராஸ் ) ஆனது மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது 2 யூனிட்டுகளில் 40 மாணவர்களாக அங்கத்தினர்களாக உள்ளனர். எங்கள் பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்களுக்கு பாடங்களை சொல்லிக் கொடுத்து அவர்களை தேர்வுக்கு தயார் செய்து நல்ல மதிப்பெண் பெற்று 10-ஆம் வகுப்பில் கிரேஸ் மார்க் கிடைப்பதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது. இதை முன்னின்று நடத்திய ஆசிரியர்கள் சோபி , ஷர்மிளா , ரேஷ்மா , திவ்யா முதலானோர் ஆவார்கள். தற்போது இதை வழி நடத்தும் ஆசிரியர்கள் ஷர்மிளா , சந்திரிகா. தமிழ் , ஆங்கிலம் , மலையாளம் மூன்று மொழிகளிலும் பாடங்கள் வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது. இச்சங்கத்தில் உள்ள உறுப்பினர்களான மாணவர்கள் பள்ளிக்கு உறுதுணையாக உள்ளனர் . குறிப்பாக இந்த காலகட்டத்தில் பள்ளிக்கு வருகின்ற மாணவர்களுக்கு சனிடைசர் வழங்குவதும் பின்பு நோயுற்ற மாணவர்களுக்கு முதலுதவி கொடுப்பதற்கும் இவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.

வருடத்தில் ஒருமுறை இவர்களுக்கு கேம்ப் நடத்தப்படுகிறது. கேம்பில் முதலுதவி பற்றியும் , விஷப்பாம்புகள் பற்றியம் குறிப்பாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை சுந்தர்ராஜ் அடிகள் அவர்களால் அவர்களை ஆசீர்வதித்து மாணவர்களை ஊக்கப்படுத்தி பள்ளிப்பேருந்து இலவசமாக பரீட்சை எழுதச் செல்லும் பள்ளிக்கு அனுப்பி வைப்பார்.

  • கொரானா காலகட்டம் ஆனதால் இந்த முறை ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு A LEVEL தேர்வு தூய சின்னப்பர் உயர்நிலைப் பள்ளியில் வைத்து 12 .01. 2022 அன்று காலை 9.30 முதல் 10.30 வரை தேர்வு நடைபெற்றது.
  • பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு A LEVEL மறு தேர்வும் தூய சின்னப்பர் உயர்நிலைப் பள்ளியில் வைத்து 12 .01. 2022 அன்று காலை 9.30 முதல் 10.30 வரை தேர்வு நடைபெற்றது.
  • ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு B LEVEL தேர்வு தூய சின்னப்பர் உயர்நிலைப் பள்ளியில் வைத்து 19 .01. 2022 அன்று காலை 9.30 முதல் 10.30 வரை தேர்வு நடைபெற்றது.
  • பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு B LEVEL தேர்வு தூய சின்னப்பர் உயர்நிலைப் பள்ளியில் வைத்து 19 .01. 2022 அன்று காலை 9.30 முதல் 10.30 வரை தேர்வு நடைபெற்றது.

தற்போது செஞ்சிலுவை சங்கத்தில் (ஜூனியர் ரெட் கிராஸ்) எட்டாம் வகுப்பில் 40 மாணவர்களும், ஒன்பதாம் வகுப்பில் 31 மாணவர்களும் , பத்தாம் வகுப்பில் 40 மாணவர்களும் உள்ளனர்