ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2020-21

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്

2020 -21, கோவிட் எச்சரிக்கையோடு பள்ளியில் செயல்படுத்தப்பட்ட செயல்பாடுகளும் தினக்கொண்டாட்டங்களும்

கோவிடின் பீதியில் கல்வி கற்கும் நடவடிக்கைகள் தனிக் கவனத்துடன் நடத்த சித்தூர் ஜி.வி.எல்.பி. பள்ளிக்கு முடிந்தது. சுற்றுச்சூழல் தினம், வாசிப்புதினம், சுதந்திர தினம், காந்திஜெயந்தி, ஓணம், குடியரசு தினம் போன்ற முக்கிய தினங்கள் யாவும் ஆன்லைன் வழியாக வித்தியாசமான செயல்பாடுகளைக் கையாண்டு கொண்டாட முடிந்தது. ஓவியப்போட்டி, சுவரொட்டித் தயாரிப்பு, வினாடி வினா, பேச்சுப் போட்டி, கவிதை சொல்லுதல், பதிப்புத் தயாரிப்பு எனப் பல்வேறு வகையான செயல்பாடுகள் ஒவ்வொரு கொண்டாட்டத்தின் போதும் நடத்தப்பட்டது. ஆசிரியர்களின் தெளிவான ஆலோசனைகளும், குழந்தைகளின் ஒத்துழைப்பும், பெற்றோர்களின் ஆதரவும் பெரிதும் துணைபுரிந்தது.

சுற்றுச்சூழல் தினம்

நாம் வாழும் பூமி விலைமதிப்பற்றது என்பதை சுற்றுச்சூழல் தினம் மீண்டும் நம்மை நினைவுபடுத்துகின்றன. சித்தூர் ஜி.வி.எல்.பி பள்ளி மாணவர்கள் கோவிட் சூழலில் ஜூன் 5 சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடினர். சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. மேலும் வாட்ஸ்அப் மூலம் வகுப்புக் குழுக்களில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சுவரொட்டி தயாரித்தல் மற்றும் சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம் தொடர்பான வினாடி வினாக்கள் போன்றன குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன. குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு மரத்தை எவ்வாறு நடவு செய்வது என்பது குறித்த அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

வாசிப்பு தினம்

வாசிப்பு வளரவும் ஞானத்தைப் பெறவும் ஜூன் 19 வாசிப்பு தினம் சித்தூர் ஜி.வி.எல்.பி பள்ளியில் கொண்டாடப்பட்டது. புத்தக ஆர்வலரான பி.என்.பணிக்கரை நினைவுகூரும் இந்த நந்நாளில், எழுத்துக்களின் வெளிச்சத்தை பிரகாசிக்கச் செய்யும் பொருட்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் வாசிப்பு தின நடவடிக்கைகள் வழங்கப்பட்டன. பி.என். பணிக்கரின் வாழ்க்கை வரலாற்று குறிப்புகளைத் தயாரித்தல், வினாடி வினாப் போட்டிகள், வாசிப்புக் குறிப்புகளைத் தயாரித்தல் மற்றும் வாசிப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் புகழ்பெற்ற வசனங்களின் தொகுப்பு தயாரித்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகள் நடத்தப்பட்டன. சொந்த நூலகம் உருவாக்கவும் ஊக்குவிக்கப்பட்டது. இவை அனைத்தும் குழந்தைகளை பரந்த வாசிப்பு உலகிற்கு அழைத்துச் செல்ல உதவும் என்பதில் சந்தேகமில்லை.

சுதந்திர தினம்

சித்தூர் ஜி.வி.எல்.பி பள்ளி இந்த கல்வியாண்டில் சுதந்திர தினத்தை கோவிட் காலத்தின் முன்னெச்சரிக்கை வழிமுறைகளைப் பின்பற்றி கொண்டாடியது. பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சுவாமிநாதன் தேசியக் கொடியை ஏற்றி, இன்றைய சமூக சூழலில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் குறித்து பேசினார். தலைமை ஆசிரியை ஷைலாஜா இந்த சுதந்திர தினம் பள்ளிக்குச் செல்லாமல் மாணவர்கள் கொண்டாடும் முதல் அனுபவம் என்பதை நினைவுபடுத்தினார். சக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் தேசியக்கொடிக்கு வணக்கம் தெரிவித்தனர். இருப்பினும், மாணவர்கள் தங்கள் வீட்டில் பாதுகாப்பாக இருந்து ஓவியம், உரைகள், தேசபக்தி பாடல்கள், மற்றும் பதிப்புகளில் ஈடுபட்டனர். ஆன்லைன் வினாடி வினா போட்டியும் நடத்தப்பட்டது. இதற்குப் பின்னால் ஒரு திட்டமிட்ட மற்றும் ஒழுங்கான நடவடிக்கை இருந்தது. மாணவர்களுக்கு முன்னரே கொடுக்கப்பட்ட கேள்வித்தாளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதும் அல்லாததுமான கேள்விகளை உள்ளடக்கிய கேள்வித்தாள் மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பப் பட்டது. அவர்கள் அனுப்பிய விதைகளில் இருந்து வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பள்ளி திறக்கும்போது பரிசு விநியோகமும் நடைபெறும். குழந்தைகளின் சுறுசுறுப்பான பங்கேற்பை உள்ளடக்கிய வீடியோவும் தயாரிக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான அனுபவத்தை அளித்து இந்த சுதந்திர தினமும் நிறைவேறியது.

ஓண விழா

கோவிட்-19 சூழலில் நமது பள்ளியில் ஓணம் கொண்டாட்டங்கள் ஆன்லைனில் நடைபெற்றன. இந்த கொண்டாட்டத்தில் அதிகபட்ச மாணவர்கள் பங்கேற்றனர். குழந்தைகள் ஒணப்பூக்களம், ஓணப்பாட்டுகள், ஓணப்பதிப்புகள், ஓண விளையாட்டுகள் ஆகியவற்றை நிகழ்த்தினர். குழந்தைகளின் ஓண அனுபவங்கள் வீடியோவாக பகிரப்பட்டன. குடும்பத்துடன் சேர்ந்துள்ள ஓண அனுபவம் ஒற்றுமையை உணரச் செய்தது. வண்ண மலர்களால் ஆன ஓணப் பூக்களம் கண்ணைக் கவரும் விதத்தில் இருந்தது. கவர்ச்சிகரமான ஓணப் பதிப்புகள் செய்யப்பட்டன. ஓணப் பாடல்கள் பல தாளங்களிலும் ராகங்களிலும் பாடப்பட்டன. குழந்தைகளின் ஓணம் விளையாட்டு மிகவும் அருமையாக இருந்தது. இந்த ஆண்டு ஓணக் கொண்டாட்டம் வித்தியாசமான முறையில் அமைந்தது.

தொலைதூர மேடை (விதூர வேதி)

உலகம் பெரும் மாற்றத்தின் பாதையில் உள்ளது. கொரோனா வைரஸின் பரவலானது வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவிட்-19 நமது கல்வித் துறையை கடுமையாக பாதித்துள்ளது. அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. வீட்டுப் பாதுகாப்பில் மாணவர்கள் ஆன்லைன் கற்றலை சார்ந்திருக்கிறனர். இது ஒரு தற்காலிக ஏற்பாடு என்னும் பள்ளி செயல்பாடுகள் ஒவ்வொன்றும் நல்லபடியாகவே நடந்து வருகின்றன. ஒவ்வொரு மாணவரும் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் இல்லாமல் சலிப்பான படிப்பு நேரத்தை எதிர்கொள்கின்றனர். அது அவர்களை மனரீதியாக பாதிக்கிறது. இந்த சூழ்நிலையில் குழந்தைகளுக்கு வேடிக்கை, உற்சாகம் மற்றும் ஊக்கத்தை வழங்குவதற்காக கலை போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆசிரியை லில்லியின் தலைமையால் இச்செயல்பாடு மேலும் பலப்படுத்தப்பட்டது. ஆன்லைன் பள்ளிக் கலைவிழாவானாலும் சாதாரணக் கலைவிழாவை நடத்தும் அதே முறையைப் பின்பற்றியே நடத்தப்பட்டது. ஒவ்வொரு வகுப்புக் குழுவிற்கும் போட்டிகள், வாட்ஸ்அப் மூலம் அனுப்ப வேண்டிய தேதிகள், நேரங்கள் மற்றும் பிற அறிவிப்புகள் நோட்டீஸ் மூலம் ஒவ்வொரு வகுப்புக் குழுவிற்கும் அறிவிக்கப்பட்டது. பின்னர் குழந்தைகள் நிகழ்ச்சிகளின் வீடியோக்களை குறிப்பிட்ட தேதிகளில் வகுப்பு ஆசிரியர்களுக்கு அனுப்பினர். வகுப்பு ஆசிரியர்கள் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை வென்றவர்களைத் தேர்ந்தெடுத்தனர். ஒவ்வொரு போட்டிக்கும் தீர்ப்பளிக்க ஒவ்வொரு ஆசிரியரும் நியமிக்கப்பட்டனர். வகுப்பு ஆசிரியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட 3 சிறந்த நிகழ்ச்சிகள் அந்தந்த பொறுப்பான ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டன. இவ்வாறு ஒவ்வொரு பிரிவிலும் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை வென்றவர்கள் அடையாளம் காணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. போட்டியின் முடிவுகள் ஆசிரியர்கள் குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வகுப்புக் குழுக்கள் மூலம் மாணவர்களுக்கு வாழ்த்துக்களுடன் அறிவிக்கப்பட்டது. பள்ளி திறந்த பிறகு பரிசுகளும் விநியோகிக்கப்படும். தொலைதூர மேடையைப் பற்றி பெற்றோர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். இத்தகைய வாய்ப்பு கிடைத்ததில் குழந்தைகளும் பெருமகிழ்ச்சியடைந்தனர். இந்த திட்டத்தின் வெற்றி சித்தூர் ஜி.வி.எல்.பி பள்ளியின் தனித்துவமான செயல்களுக்கு மற்றொரு பரிமாணத்தை சேர்த்துள்ளது.

காந்தி ஜெயந்தி

சித்தூர் ஜி.வி.எல்.பி பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கொரோனா கால பாதுகாப்பைப் பின்பற்றி நமது தேசத் தந்தையின் பிறந்த நாளை இனிதே கொண்டாடினர். ஆன்லைன் வகுப்புக் குழுவில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி ஆசிரியர்கள் குழந்தைகள் அனுப்பிய அவர்களது நிகழ்ச்சியின் வீடியோக்களை பள்ளிக் குழுவிடம் ஒப்படைத்தனர். பின்னர் பள்ளி அளவிலான வீடியோ உருவாக்கப்பட்டது. உரைகள், காந்தி கவிதைகள், பாடல்கள், காந்தி வசனங்களின் தொகுப்பு, ஓவியம் வரைதல், காந்தி வினாடி வினா, காந்தியின் வசனங்களைப் பகிர்தல், பதிப்பு தயாரித்தல், மாறுவேடம் மற்றும் பல செயல்பாடுகள் நடத்தப்பட்டது. இதன் மூலம் குழந்தைகளுக்கு மகாத்மாவைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள முடிந்தது. உலக அகிம்சை நாள் மற்றும் பாபுஜியின் வாழ்க்கை செய்தி உண்மை, அகிம்சை மற்றும் எளிமை போன்ற மதிப்புகளை வளர்ப்பதற்கான வாய்ப்பையும் இது வழங்கியது.

கேரளப்பிறவிதினம்

கேரளப்பிறவிதினம் கொண்டாட வேண்டியது எப்படி என்று இரண்டே நாள் முன் தனது கூகிள் மீட் வழி SRGல் முடிவுசெய்யப்பட்டது. கேரளப்பிறவி தின வினாடி வினா போட்டியின் முன்னோடியாக ஐம்பது கேள்விகள் வழங்கப்பட்டன. ஒரு நாள் பத்து கேள்விகள் வீதம் வழங்கப்பட்டது. நவம்பர் 1 மாலை 6 மணிக்கு ஆன்லைன் வழியாக போட்டி நடத்தப்பட்டது. ஏராளமான குழந்தைகள் நன்றாகப் படித்து வினாடி வினா போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியில் 20 கேள்விகள் கேட்கப்பட்டது. அனைத்துக் கேள்விகளும் கேரளாவுடன் தொடர்புடையவையாகும். பல குழந்தைகளும் முழு மதிப்பெண்களைப் பெற்றனர். கேரளப்பிறவி தினத்தன்று குழுவில் பகிர்ந்த மலையாள மங்கையாக வேடமணிந்த குழந்தைகளின் புகைப்படங்கள் மிகவும் நன்றாக இருந்தது. குழந்தைகள் ஆன்லைன் வழியாக பாடல், பேச்சுப்போட்டி, சுவரொட்டி, பதிப்பு போன்ற நிகழ்ச்சிகளில் மிகவும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். நம் நாட்டை பற்றிய குழந்தைகளின் உரைகள் மிகவும் நன்றாக இருந்தன. கேரளாவிலுள்ள முக்கியமான இடங்கள் குழந்தைகளுக்கு வீடியோ மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாறு ஆன்லைன் கேரளப்பிறவி தினக்கொண்டாட்டம் இனிதே முடிந்தது.


குழந்தைதினம்

ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14ஐ மிகவும் சிறப்பாக கொண்டாட SRG யில் முடிவு செய்யப்பட்டது. குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய செயல்பாடுகள் தீர்மானிக்கப்பட்டன. வினாடி வினாப் போட்டிக்கு முன்னோடியாக ஒரு நாள் 10 கேள்விகள் வீதம் சுமார் 100 கேள்விகள் வழங்கப்பட்டன. நவம்பர் 1 ஆம் தேதி மாலை 6 மணிக்கு மாலை வினாடி வினாப் போட்டி நடத்தப்பட்டது. குழந்தைகள் உற்சாகத்துடன் போட்டியில் கலந்து கொண்டனர். குழந்தைகள் தினத்தன்று குழந்தைகள் நேரு மாமாவின் வேடமிட்டுள்ள புகைப்படங்கள் குழுவில் பகிர்ந்தனர். குழந்தைகளை நேசிக்கும் நேரு மாமாவின் பாடல்களைக் குழந்தைகள் பாடினர். குழந்தைகள் தின பாட்ஜூம் சுவரொட்டியும் ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பல புகைப்படங்களும் குழுவில் பகிர்ந்தனர். இவ்வாறு இணையதளம் மூலம் குழந்தை தினக் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.


கிறிஸ்துமஸ்

குழந்தையேசுவின் பிறந்தநாளான கிறிஸ்துமஸ்ஸுடன் தொடர்புடைய பல நிகழ்ச்சிகளைக் குழந்தைகள் நிகழ்த்தினர். புல் கூடுகள் கட்டப்பட்டு அதன் புகைப்படமும் வீடியோவும் குழுவில் பகிர்ந்தனர். கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடியும், படங்கள் வரைந்தும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நடந்த இந்த ஆன்லைன் கொண்டாட்டத்தினால் குழந்தைகள் அனைவருக்கும் மற்றவர்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைக் கண்டு மகிழ வாய்ப்பு கிடைத்தது.