ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /எழுத்து மரம்/சுற்றுப்புறம் இன்றி மனிதன் இல்லை

சுற்றுப்புறம் இன்றி மனிதன் இல்லை

ஒரு ஊரில் ஒரு சிறுவன் இருந்தான். அவன் பெயர் கிருஷ்ணன். அவனுக்கு சுற்றுப் புறம் என்றால் பிடிக்காது. ஆனால் அவன் நண்பர்களுக்கு மிகவும் பிடிக்கும். மரம், செடி,கொடி ,கல், மண்,காற்றுஇவை சேர்ந்தது தான் சுற்றுப்புறம் என அவனுக்கு தெரியாது. அவன் ஒரு நாள் ஒரு புத்தகம் வாசித்தான். அதில் சுற்றுப்புறம் பற்றி எழுதியிருந்தது. அப்புத்தகத்தை பிடிக்காமல் எரித்து சாம்பலே ஆக்கி விட்டான். அவன் அப்பாவும் அம்மாவும் அவனை எண்ணி வருந்தி அவனை சுற்றுலா கொண்டு சென்றனர். அவர்கள் சென்ற இடத்தில் கடைகளோ, பூந்தோட்டங்களோ ஒன்றும் இல்லை. கிருஷ்ணா நாம் சில நாட்கள் இங்கு கூடாரம் அமைத்து தங்கப் போகிறோம் என்று அவனது அப்பா கூறினார்.. சில நாட்களில் இயற்கைச் சூழல் அவனைக் கவர்ந்தது. சுற்றுப்புறம் இன்றி மனிதன் இல்லை என புரிந்து கொண்டான். சுற்றுப்புறத்தை அன்றிலிருந்து நேசித்தான் அச்சிறுவன்.

ஷ்யாம்
4 C ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ
ചിറ്റൂർ ഉപജില്ല
പാലക്കാട്
അക്ഷരവൃക്ഷം പദ്ധതി, 2020
കഥ


 സാങ്കേതിക പരിശോധന - Mohammedrafi തീയ്യതി: 24/ 01/ 2022 >> രചനാവിഭാഗം - കഥ