ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /அங்கீகாரங்கள்/2019-20ல் பெற்ற அங்கீகாரங்கள்/வெற்றி முரசு

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്

வெற்றி முரசு

மாவட்ட கல்வி பயிற்சி மையம் (DIET) சார்பில் 25.2.2020 செவ்வாய்கிழமையன்று மேனோன் பாறையிலுள்ள B N பேபி ஹாலில் நடந்தேறியது. பாலக்காடு மாவட்ட அளவிலான தமிழ் வழி மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு பொதுக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக ஏற்படுத்தப்பட்ட திட்டமான தமிழ் தென்றலின் நினைவு விழாவே வெற்றி முரசு. பாலக்காடு மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிக்கூடத்திலுள்ள மாணவ மாணவியர் பங்கேற்ற நிகழ்வாகும் இது.

தொடக்கம்

பெரும்பாறைச்சள்ளை ஆசிரியை திருமதி. தாமரைச்செல்வி அவர்களின் இறைவணக்கத்துடன் காலை 10 மணிக்கு இனிதே தொடங்கியது வெற்றி முரசு. Dr.V. T.ஜெயராம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். வடகரப்பதி பஞ்சாயத்து தலைவி குழந்தை தெரசா இவ்விழாவிற்கு தலைமை தாங்கினார். நெம்மாறை MLA K. பாபு விழாவை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தினை பற்றி DIET பிரின்சிபால் டாக்டர் A. ராஜேந்திரன் விளக்கவுரை ஆற்றினார். வாசிப்பு வசந்தம் என்ற வாசிப்பு அட்டை வெளியீடு பாலக்காடு DPO M. ஜெயராஜன் நிறைவேற்றினார். தொடர்ந்து சித்தூர் உபமாவட்ட கல்விஅலுவலர் ஜெயஸ்ரீ வாழ்த்துரை வழங்கினார். DIETலுள்ள ஆசிரியை K.V. ராதா நன்றியுரை வழங்கினார். தொடர்ந்து St. செபஸ்தியன் சீனியர் பேசிக் பள்ளி மாணவியரின் வரவேற்பு நடனத்துடன் நிகழ்வு இனிதே தொடர்ந்தது. தமிழ்நாடு திருமூர்த்தி DIET Rtd. பிரின்சிபால் நடேசன் வெற்றி முரசின் தமிழ் கருத்தரங்கிற்கு நெறியாளராக பங்கேற்றார். மொழிப் பாடங்களில் கற்பிக்கும் செயல்பாடுகளைப் பற்றி பல்வேறு பள்ளியை சார்ந்த ஆசிரியர்கள் காணொளியின் உதவியுடன் விளக்கினர். மாணவர்களின் நிகழ்வுகளும் நேரடியே நடந்தது.

கருத்தரங்கில் பங்கேற்றவர்களும் தலைப்புகளும்

  • மொழிப் பாடத்தில் நாடகத்தின் பங்கு - பிந்து M.R (GUPS, கொழிஞ்சாம்பாறை)
  • நாட்டுப்புறப் பாட்டும் மொழிப் பாடமும் - ஆரோக்கியதாஸ் (GTHS, மட்டத்துக்காடு)
  • நாட்டுப்புறக் கலைகளுக்கு மொழிப் பாடத்தில் உள்ள இடம் - முகமது காசிம் (GLPS, பாம்பாம்பள்ளம்)
  • வில்லுப்பாட்டும் தமிழ் மொழியும் - சுப்ரபா. S (GVLPS, சித்தூர்)
  • கதை சொல்லுதலில் மொழிப் பாடப் பங்கு - விஜயா. K (GUPS, RVP புதூர்)
  • உரையாடல் மொழிப் பாடத்தில் - தாமரைச்செல்வி. M (GUPS, பெரும்பாறைச்சள்ளை)
  • கவிதைக்கு மொழிப் பாடத்தில் உள்ள பங்கு - K.V.குப்புசாமி (GHS, மீனாட்சிபுரம்)
  • தனியாள் நடிப்பும், மொழிப் பாடமும் - ஷெஃபினி. S (KKMLPS, வண்டித்தாவளம்)
  • கவிதை மொழிதலும் மொழிப் பாடமும் - சுரஜா. R (GUPS, R.B. கூடம்)
  • நாட்டுப்புறக் கலைகள்வழியே மொழிப் பாட ஊக்குவிப்பு - சர்புதீன். K. M (GUPS, மேனோன்பாறை)
  • கலையும் மொழிப் பாடமும் - சகோ. அருள் செல்வி (St. Peter's, எருத்தேன்பதி)

நிறைவு விழா

நிறைவு விழாவுக்கு சித்தூர் B.P.C மனுசந்திரன் வரவேற்புரை வழங்க, சித்தூர் உபமாவட்ட கல்விஅலுவலர் ஜெயஸ்ரீ தலைமை தாங்கினார். கல்வி நிகழ்வுகள் அளித்த மாணவ, மாணவியருக்கு டயட் பிரின்சிபால் ராஜேந்திரன் சான்றிதழ் வழங்கினார். கருத்தரங்கில் பங்கு பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. சித்தூர் BRCயின் பயிற்சியாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றியுரைத்தார். இவ்வனைத்து நிகழ்வுகளையும் காலை முதல் மாலை வரை தொகுத்து வழங்கியவர்கள் சுரஜா மற்றும் ஆரோக்கியதாஸ் ஆவார்கள். கணினியை இயக்கி காணொளித் தொகுப்பாளினியாக இருந்தவர் ஜி.வி.எல்.பி பள்ளி, சித்தூர் ஆசிரியை ரசியா பானு ஆவார். மாலை 4:30 மணிக்கு தேசிய கீதத்துடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.