ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/ஸ்கூள்விக்கி விருது 2021-22/முதன்மை சபரீஷ் நினைவு விருது

முதன்மை சபரீஷ் நினைவு விருது மாவட்ட அளவில் இரண்டாம் இடம்

 

நமது விக்டோரியா அரசு ஆரம்பப் பள்ளிக்கு ஒரு பொன் மகுடம் கூட! ஆமாம் அனைத்து ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் மிக மிக மகிழ்ச்சி அடைந்த தருணம் ஆகும் அது. மாநிலத்தில் மிகவும் நல்ல முறையில் ஸ்கூல்விக்கி பதிவு செய்கின்ற பள்ளிகளுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாநில அளவில் முதலிடம் பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 25 ஆயிரம் ரூபாயும் மற்றும் சான்றிதழ்களும், விருதுகளும். மாவட்ட அளவில் முதல் பரிசாக பத்தாயிரம் ரூபாயும், ஐந்தாயிரம் ரூபாயும் மற்றும் சான்றிதழ்களும், விருதுகளும். துவக்கம் முதல் ஸ்கூல் விக்கி செயல்பாடுகளுக்கு முன்னோடியாக இருந்த மலப்புரம் மாவட்டத்தில் KITE னுடைய முதன்மை பயிற்சியாளரான கே. சபரீஷ் அவர்களின் நினைவாக இவ்விருது வழங்கப்பட்டது. ஸ்கூல்விக்கி - 2018 என்னும் போட்டியில் நமது விக்டோரியா அரசு ஆரம்பப் பள்ளி என்னும் குட்டி பள்ளிக்கூடமும் பங்கேற்றது. 15000 பள்ளிகளுக்கு மேல் அங்கங்களாக உள்ள ஸ்கூல்விக்கியில் அனேகம் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை வென்று பாலக்காடு மாவட்டத்தில் இரண்டாவது இடத்தை நமது பள்ளிக்கூடம் சொந்தமாக்கியது.

பரிசளிப்பு

  • தேதி - 04.10.2018
  • நேரம் - மாலை 3 மணி
  • இடம் - அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மலப்புறம்.


அக்டோபர் மாதம் நான்காம் நாள் மாலை 3 மணிக்கு மலப்புறத்திலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு KITE கன்வீனர் அன்வர் சாதத் அவர்கள் வரவேற்புரை அளித்தார். மலப்புறம் எம்.எல்.ஏ, உபயதுல்லா அவர்கள் தலைமை தாங்கினார். பொதுக் கல்வி அமைச்சர், பேராசிரியர் திரு. சி ரவீந்திரநாத் அவர்கள் துவக்கவுரை ஆற்றி பரிசுகளை வழங்கினார். இச்சிறப்பு விழாவில் தலைமையாசிரியை ஷைலஜா என். கே, PSITC ரசியா பானு. அ, மற்று ஆசிரியர்களான சுப்ரபா.எஸ், சுனிதா .எஸ், கீதா கே. வி, பவில்தாஸ், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கே. பி ரஞ்சித் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மோகன்தாஸ், சுகதன் என்பவர்கள் ஒன்று சேர்ந்து விருதை பெற்றுக் கொண்டனர். KITE ன் பாலக்காடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சசிகுமாரும் இத்தருணத்தில் எங்களுடன் இருந்தார். இது மகிழ்ச்சி பொங்கும் நிமிடங்களாக இருந்தது. ஒரு சிறு வட்டாரத்தில் மட்டும் ஒதுங்கி இருந்த எங்களது பள்ளியின் புகழ் உலக அளவில் பரவியதற்கு துணையாக இருந்த ஸ்கூல்விக்கிக்கும், எங்களது PSITC க்கும், எங்களுக்கு எப்பொழுதும், எந்த நேரத்திலும், எல்லா செயல்களிலும் எங்களது சந்தேகங்களை சரிசெய்து, எங்களுக்கு உதவுகின்ற முதன்மை பயிற்சியாளர் பிரசாத்திற்கும் இத்தருணத்தில் நன்றி செலுத்துகின்றோம்!


மகிழ்ச்சித் தருணங்கள்

 
30.09.2018ல் தேசாபிமானி- செய்தித் துணுக்கு
 
06.10.2018ல் தேசாபிமானி- செய்தித் துணுக்கும், படமும்
 
17.10.2018ல் மாத்ருபூமி- செய்தித் துணுக்கும், படமும்