ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/தனித்துவமான செயல்பாடுகள்/குட்டிச் சோதனைகள்
குட்டிச் சோதனை
அறிவியல் சங்கத்தின் துவக்கத்தில் காலைக் கூட்டத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகுப்பு வீதம் ஒரு சோதனை (மொத்தம் 50 சோதனைகள்) நடத்த தீர்மானிக்கப்பட்டது. குழந்தைகளில் அறிவியல் மனப்பான்மை வளர்க்க வேண்டும் என்பது தான் இதன் முக்கிய லட்சியம். சிறிய குழந்தைகளில் உற்றுநோக்கல் திறன், கண்டறியும் திறன், சோதனைகளில் நாட்டம், எச்சரிக்கையுடன் சோதனைக் கருவிகளைக் கையாளுதல் போன்ற பல்வேறு திறன்களை வளர்த்தி எடுக்க இது உதவுகிறது.
இலட்சியங்கள்
- குழந்தைகளில் அறிவியல் மனப்பான்மை வளர்கிறது.
- உற்றுநோக்கல் திறன் பெறுகின்றனர்.
- சுயமாக சோதனைகள் செய்யவும், சோதனை முடிவுகளை கண்டறியவும் செய்கின்றனர்.
- தனியாகவும், குழுவாகவும் எளிய சோதனைகள் செய்கின்றனர்.
- தேவையான சோதனைக் கருவிகளை கண்டுபிடிக்கவும், ஒழுங்குபடுத்தவும் திறன் பெறுகின்றனர்.
- எச்சரிக்கையாக சோதனைக் கருவிகளை கையாளும் திறன் பெறுகின்றனர்.
- சோதனை குறிப்புகள் தயாராக்குகின்றனர்.
செயல்பாடுகள்
ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்ற எளிமையான சோதனைகள் மட்டுமே இங்கே செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகுப்பு மாணவர்கள் காலைக்கூட்டத்தில் சோதனை செய்து காண்பிக்கின்றனர். இது அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் காண வாய்ப்பளிக்கிறது. ஒவ்வொரு நாளும் நல்ல நல்ல சோதனைகள் செய்ய மாணவர்கள் முயல்கின்றனர். சோதனைகளுக்குப் பிறகு குழந்தைகள் சுயமாக சோதனைக் குறிப்பும் எழுதுகின்றனர். குழந்தைகள் சோதனைகளை நேரில் கண்டு புரிந்து கொள்வதால் இவை யாவும் குழந்தைகளது மனதில் பசுமரத்தாணி போல பதிகின்றது. அறிவியல் சங்க செயல்பாடுகள் இதன்மூலம் நல்ல முறையில் நடைபெறுகின்றது.
சிறப்பம்சம்
ஒன்றாம் வகுப்பு மாணவர்களும் கூட அவர்களுக்கு ஏற்ற சோதனைகளை காலை கூட்டத்தில் செய்து காண்பிக்கின்றனர் என்பது இந்த எளிய சோதனையின் மிகப்பெரிய சிறப்பம்சமாகும். ஒவ்வொரு வகுப்பினரும் சுயமாக காலை கூட்டத்தில் அறிவியல் கூடம் தயார் செய்கின்றனர். இதற்கு தேவையான முன்னேற்பாடுகளை ஒவ்வொரு வகுப்பினரும் போட்டி மனப்பான்மையோடு செய்கின்றனர்.
சில சோதனைகள்
1. ஆழம் கூடும் தோறும் அழுத்தம் கூடுகிறது.
3. பலூன் பம்பரம் - காற்றின் சக்தி உள்ளது
4. ஜலகன்யகா - வாயுவின் பலம் பயன்படுத்த முடியும்
5. பலூன் உயர்த்தலாம் - வாயுவின் பலம் பயன்படுத்தபடுகிறது.
6. வேர் தண்ணீரை உறிஞ்சுகிறது.
7. எல்லாமே மேல் மண்ணில் .
8. குதித்த நாணயம் - வாயு நிமிடம் செய்ய வேண்டிய இடம்.
9. சிதறியோடும் குரு மிளகுப்பொடி - பிரதலபலம்
10. நிறைந்து ஒழுகாத தண்ணீர் - தண்ணீரை
11. பலூன் பாட்டில் - வாயுவிற்கு சக்தி உள்ளது.
12. குளிக்கும் பலூன் - காற்றின் அழுத்தம்.
13. சோப்பில் இருந்து க்ளிசரின் பிரித்தல் - சோப்பு உப்பு நீருடன் சேரும் போது க்ளிசரின் பிரிகிறது.
14. யானை பீப்பி - வாயுவின் அதிர்வு காரணமாக ஒலி எழுகிறது.
15. வாயுவிற்குபாரம் உள்ளது.
16. உப்பு நீரின் அடர்த்தி.
17. கை நனையாமல் நாணயம் எடுக்கலாம் - நீருக்கும் காற்றுக்கும் நிலை கொள்ளஇடம் தேவை.
18. காற்று அழுத்தம் கூடிய இடத்தில் இருந்து குறைந்த இடத்திற்கு செல்லும்.
19. பெரிதாகும் பலூன் .
20. காற்றில்நீராவி உள்ளது.
21. சிப்சை எரிக்கலாம் - நல்ல ஆரோக்கியத்திற்கு எண்ணெய் தின்பண்டங்களை தவிர்க்கவும்.
22. நீரில் மிதக்கும் ஊசி. தண்ணீரின் மேல் பரப்பின் அழுத்தம்.
23. ஒளிவிலகல் - ஒளி ஒரு திசையில் இருந்து வேறொரு பகுதிக்கு செல்லும் போது ஏற்படுகிறது
24. நடனமாடும் நாப் தலின் உருண்டை வினாகிரியும் நாப்தலின் உருண்டையும்சேரும் போது கார்பன் டை ஆக்ஸைடு ஏற்படுகிறது.
25. மண்ணெண்ணையும் தண்ணீரும்- அடர்த்திவேறுபாடு.
26. தண்ணீரின் வெளியே புகைச்சுருள்கள் - புகைக்கு நீரை விட அடர்த்தி குறைவு.
27. நீல லிட்மஸ் சிவப்பாகிறது - அமிலத்தை அறியும் சோதனை.
28. வளையும் மெழுகுவர்த்தி - வாயு அழுத்தம் கூடிய பகுதியில் இருந்து குறைந்த பகுதிக்கு செல்கிறது.
29. தீயின்றிதீ எரிக்கலாம் - க்ளிசரினும் பொட்டாசியம் பெர் மாங்கனேட்டும் சேர்ந்த போது வேதி செயல்பாடு நிகழ்ந்தது.
30. ஜூஸ் எடுக்கலாம் - நீரின் மேற்பரப்பில் வாயு அழுத்தம் செலுத்தும்போது தண்ணீர் பம்ப் செய்யப்படுகிறது.
31. நீரில் கரைபவை, கரையாதவை.
32. தண்ணீரில் மிதப்பவை தண்ணீரில் மூழ்குபவை - பாரம் இல்லாதவை நீரில் மிதக்கிறது. பாரம் உள்ளவை நீரில் மூழ்கும்.
33. சூரிய ஒளி நேர்கோட்டில் பயணிக்கிறது - சூரிய ஒளி நேர்கோட்டில் மட்டுமே பயணிக்கிறது.
34. பலூன் ராக்கட் - ஒவ்வொரு செயலுக்கும் சமமான மற்றும் எதிர்மறையான பிரதிசெயல்பாடு உண்டு.
35. பலூனும் கல்லும் - வாயுவிற்குசக்தி உள்ளது.
36. மேலே எறியும் பந்து - நியூட்டனின் புவியீர்ப்பு விசை..
37. குரல் கேட்க காற்று தேவையா? - சத்தம் பயணிக்க காற்று தேவை.
38. மறைந்து போகும் கண்ணாடி - பிரகாசம் ஒரு நிலையில் இருந்து வேறொரு நிலைக்கு கடக்கும்போது அதன் திசையில் மாற்றம் வருகிறது.
39. நடனமாடும் அரிசி - அதிர்வின் பலம்.
40. மண்ணில் ஒளிந்துள்ள வாயு - மண்ணில் காற்று உள்ளது.
41. பலூனிலுள்ள தண்ணீர் குப்பிக்கு - காற்றிற்கு நிலை கொள்ள இடம் தேவை.
42. மாஜிக் மழை - வாயு அழுத்தம்.
43. பல வடிவங்கள் - திரவங்களுக்கு வடிவம் இல்லை.
44. உயரும் நீர் மட்டம் - காற்றின் அழுத்தம்
45. நீரின் மாற்றம் - சூடுபடுத்தும் போதும் குளிர்விக்கும் போதும் தண்ணீரின் நிலையில் மாற்றம் ஏற்படுகிறது.
46. பலூன், தராசு - வாயுவிற்கு பாரம் உள்ளது.
47. நீரிலும் நனையாத காகிதம் - எல்லா இடத்திலும் காற்றுஉள்ளது.