ജി.എച്ച്.എസ് വട്ടവട/അക്ഷരവൃക്ഷം/ கொரோனாவும் தற்போதைய உலக நிலைமையும் - கட்டுரை (ലേഖനം )

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
கொரோனாவும் தற்போதைய உலக நிலைமையும் - கட்டுரை (ലേഖനം )

கொரோனாவால் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றும் செய்யமுடியாமல் தவிக்கின்றன. இதற்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க போட்டிபோட்டு ஆராய்ச்சியில் குதித்துள்ளன. இருப்பினும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையையும், உயிரிழப்போர்களின் எண்ணிக்கையும் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டியுள்ளது .

நாட்டிலேயே முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு கேரளாவில் தான் ஏற்பட்டது. அதன்பிறகு நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் மூலம் வைரஸ் தொற்று ஏற்படத் தொடங்கியது. இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் வைரஸ் பாதிப்பு மேலும் அதிகரிக்காமல் கேரள அரசு நடவடிக்கை எடுத்தது. இதன் விளைவாக குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலும் பாதிப்பு தொடர்ந்து அதிரிகரித்து வருகிறது. இந்தியாவில் ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது உரையில் இளைஞர்களிடம் 7 கோரிக்கைகளை வைக்கிறார். 1. பெரியவர்களைப் பாதுகாக்க வேண்டும். 2. சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். 3. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டும். 4. ஆரோக்ய சேது செயலியைப் பயன்படுத்த வேண்டும். 5. எளியவர்களுக்கும், தேவையில் இருப்பவர்களுக்கும் உதவ வேண்டும். 6. பணியாட்களை வேலைவிட்டு நிறுத்தக்கூடாது. 7. கொரோனா போரில் ஈடுபடுவோரை மதிக்க வேண்டும்.

மாணவர்களாகிய நாமும் விழிப்புடன் இருப்போம்! கொரோனா எனும் கொலையாளி தொற்று நோயை தோற்கடிப்போம்!

கௌசல்யா எம் (KOWSALYA M)
10 ജി.എച്ച്.എസ് വട്ടവട
മൂന്നാർ ഉപജില്ല
ഇടുക്കി
അക്ഷരവൃക്ഷം പദ്ധതി, 2020
ലേഖനം

 സാങ്കേതിക പരിശോധന - Subhashthrissur തീയ്യതി: 05/ 05/ 2020 >> രചനാവിഭാഗം - ലേഖനം