ഗവ. എസ് എസ് എൽ പി എസ് കരമന/അക്ഷരവൃക്ഷം/ சுத்தமாக இருந்தால் எமனையும் வெல்லலாம்
சுத்தமாக இருந்தால் எமனையும் வெல்லலாம்
ஒரு ஊரில் ஒரு ஏழை தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். தினமும் வேலைக்கு போனால் தான் அவர்களுக்கு சாப்பாடு. அவர்களுக்கு இரண்டு மகன்கள். கஞ்சியோ கூழோ எதுகொடுத்தாலும் இளைய மகன் சாப்பிடுவான். அனால் மூத்தவனோ, ஐயோ... என்றும் இது தானா? எனக்கு வேண்டாம் என்று சாப்பிடமாட்டான். சரியாக குளிக்கமாட்டான், நகம் வெட்ட மாட்டான், சாப்பிடும் முன் கை கழுவமாட்டான். தாய் சொல்லும் எதையும் கேட்கமாட்டான். தட்டிக்கேட்டால் ஏறுக்குமாறாக பேசுவான். ஆனால் இளைய மகன் அம்மாவின் சொல்பேச்சு கேட்டு நடப்பான். வீட்டை சுத்தம் செய்வதில் அம்மாவுக்கு உதவுவான். கூழானாலும் குளித்துக்குடி கந்தையானாலும் கசக்கிக்கட்டு என்ற சொல்லுக்கேற்ப சுத்தமாக இருப்பான். நாட்கள் நகர்ந்தன. மூத்த மகன் நோய்வாய்ப்பட்டான். அவனை பரிசோதித்த மருத்துவர் அவனுடைய சுகாதாரமற்ற பழக்கவழக்கங்கள் தான் நோய்க்கு காரணம் என்று கூறி மருந்து மாத்திரைகள் வழங்கினார். தாய் அவனைக் கட்டியணைத்து, உன்னுடைய தம்பியைய்ப்பார், அவன் எவ்வளவு சுத்தமாக இருக்கிறான். நீயும் அவனைப்போல் சுத்தத்தைக் கடைபிடித்தால் நல்ல ஆரோக்கியமாக வாழலாம் என்று கூறினார். அவன் தன் தவறைப்புரிந்துகொண்டான். ஆம் அம்மா, தூய்மையாக இருந்தால் எமனையும் வெல்லலாம் என்பதை நான் புரிந்துகொண்டேன் என்று கூறினான்.
സാങ്കേതിക പരിശോധന - Sathish.ss തീയ്യതി: 05/ 05/ 2020 >> രചനാവിഭാഗം - കഥ |
- അക്ഷരവൃക്ഷം പദ്ധതിയിലെ സൃഷ്ടികൾ
- തിരുവനന്തപുരം ജില്ലയിലെ അക്ഷരവൃക്ഷം-2020 സൃഷ്ടികൾ
- തിരുവനന്തപുരം സൗത്ത് ഉപജില്ലയിലെ അക്ഷരവൃക്ഷം-2020 സൃഷ്ടികൾ
- അക്ഷരവൃക്ഷം പദ്ധതിയിലെ കഥകൾ
- തിരുവനന്തപുരം ജില്ലയിലെ അക്ഷരവൃക്ഷം കഥകൾ
- തിരുവനന്തപുരം ജില്ലയിലെ അക്ഷരവൃക്ഷം സൃഷ്ടികൾ
- തിരുവനന്തപുരം സൗത്ത് ഉപജില്ലയിലെ അക്ഷരവൃക്ഷം-2020 കഥകൾ
- തിരുവനന്തപുരം ജില്ലയിൽ 05/ 05/ 2020ന് ചേർത്ത അക്ഷരവൃക്ഷം സൃഷ്ടികൾ
- അക്ഷരവൃക്ഷം 2020 പദ്ധതിയിൽ നാലാം ഘട്ടത്തിൽ പരിശോധിച്ച സൃഷ്ടികൾ
- അക്ഷരവൃക്ഷം 2020 പദ്ധതിയിൽ നാലാംഘട്ടത്തിൽ പരിശോധിച്ച കഥ
- അക്ഷരവൃക്ഷം 2020 തമിഴ് രചനകൾ